வேலைவாய்ப்பு வளர்ச்சியில் கோவை முதலிடம் பிடிக்கும்: பவுண்டிட் ஆய்வு அறிக்கை
கோவை: உள்நாட்டில், வரும் 2027ம் ஆண்டில் அலுவலக வேலைவாய்ப்பு வளர்ச்சியில் கோயம் புத்துார் நகரம், பெங்களூரு, ஹைதராபாதை பின்னுக்கு தள்ளி, 12.52 சதவீதத்துடன் முதலிடம் பிடிக்கும் என, 'பவுண்டிட்' நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரும் 2027ல், நாடு முழுதும் அலுவலக வேலைவாய்ப்புகள் 8.16 சதவீதம் வளர்ந்து, 1.38 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2026ல் பதிவான 3.30 சதவீத வளர்ச்சியைவிட அதிகம். கடந்த 2026ம் ஆண்டில் கோயம்புத்துாரில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 1.86 சதவீதம் சரிந்திருந்த நிலையில், வரும் 2027ல் 12.52 சதவீத வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.