மேலும் செய்திகள்
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
18-Dec-2025
சென்னை: வடக்கில் இருந்து வரும் குளிர் காற்று அதிகரிப்பதால், தமிழகத்தில் இன்றைய வெப்பநிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை:
வடமாநிலங்களில் குளிர் அதிகரித்துள்ளது. இதனால், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் குளிர் காற்று காரணமாக, தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் அதிகாலை வேளையில், இன்று பனி மூட்டம் அதிகரிக்க வாய்ப்புளளது. இதனால், சில பகுதிகளில், குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை குறையலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18-Dec-2025