உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலெக்டர் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

கலெக்டர் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மாவட்ட கலெக்டர் அனுமதியின்றி, குடியிருப்பு பகுதியில், எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, ராதா நகர், கிருஷ்ணமாச்சாரி தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில், 'காட்' எனும் தெய்வீகத்திற்கான சர்வதேச அமைப்பு என்ற அமைப்பின் சார்பில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது அப்பகுதியில் குடியிருப்போருக்கு, இடையூறாக உள்ளது எனக் கூறி, அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் ராமச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டங்கள் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட கலெக்டர் அனுமதியின்றி, இதுபோல் கூட்டங்கள் நடத்தக்கூடாது என, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு, இந்த வழக்கிற்கும் பொருந்தும். சட்டம் அனைவருக்கும் சமம். மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி, குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தக் கூடாது. மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி, குடியிருப்பு பகுதியில், நாம சங்கீர்த்தனம் நடத்தக் கூடாது.சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக விளங்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும். அமைதியான முறையில் பிரார்த்தனை செய்வது தான் சிறந்த பிரார்த்தனை. இந்த உண்மையை மக்கள் உணர வேண்டும். சப்தமாக கடவுளை பிரார்த்தித்து, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பிரார்த்தனைகள், வீட்டின் நான்கு சுவர்களுக்குள் மட்டும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை, சிட்லப்பாக்கம் போலீசார் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

Guna
ஜூலை 23, 2025 11:03

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக தெய்வீக இசை கடிகாரம் கோவில்களில் நேர அளவு இல்லாமல் ஒலி பரப்படுகிறது இதற்கு யார் அனுமதி கொடுத்தது .....


Chandran Subramaniam
ஜூலை 23, 2025 06:46

Noise pollution is an offence as per Tamil Nadu public health Act 1939


நிக்கோல்தாம்சன்
ஜூலை 23, 2025 04:30

மாவட்ட கலெக்டர் ஒருதலைப்பட்சமாக செயல்படமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் ?


V GOPALAN
ஜூலை 20, 2025 11:23

We thank this High Court on war footing basis taken up this case and given Judgment. Same we request him take up with the concerned to clear all pending cases numbering more than a crore in India pending for a long time which includes Sand Granite quarry abd Sucide gang Raping Arsoning and looting cases with a time frame.


Rajan A
ஜூலை 18, 2025 06:31

ஏற்கனவே அவர்களுக்கு நிறையவே வேலை இருக்கு. இதுல பஜனைக்கு அனுமதி வேற எக்ஸ்டரா.


R.Balasubramanian
ஜூலை 18, 2025 05:46

நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா?


ManiK
ஜூலை 18, 2025 05:33

மொதல்ல கலெக்டர மக்கள் தேர்ந்தெடுத்து நியமிக்க சொல்லுங்க. அப்புறம் அவங்க அனுமதி வாங்கிக்கறோம். திமுக ஆட்சியில எல்லா ஊரிலும் கிரிப்டோ கலெக்டர்கள் தான்.


Indhuindian
ஜூலை 18, 2025 04:54

குடியிருப்பு பகுதிகளிலே தடை செய்யப்பட்ட கூம்பு ஓலைப்பெருக்கியிலே தொஷுகைக்கு வாங்கன்னு காலங்காத்தால நம்ம தூக்கத்தை கெடுக்கலாமா எஜமான்? அதே மாதிரி நடு ராத்திரியிலே ஜமம் பண்றேன்னு கூப்பாடு போடறாங்களே அது சரியா எஜமான்? ஒன்னு மட்டும் கரீட்டா தெரியுது ஹிந்துக்களன்ன ஏமாளிகள் நல்லா தலையிலே மொளகாய் அறைக்கலாம்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 23, 2025 04:32

சரியா கேட்டீங்க , மும்பை கோர்ட்டில் தடை செய்ய சொன்னதால் அந்த மாநில அரசு எல்லா கூம்பு ஒலி பெருக்கிகளையும் ஒட்டுமொத்தமாக தடை செய்து விட்டனர்


Kasimani Baskaran
ஜூலை 18, 2025 04:04

அல்லேலூயா கோஷ்டி மட்டும் என்ன செய்தாலும் ஓகே. மற்ற மதத்தினர் வாய் பேசக்கூடாது. பேசினால் சிறை. தீமக்காவுக்கு ஓட்டுப்போடும் அடிமைகளுக்கு இது சமர்ப்பணம்.


Anantharaman Srinivasan
ஜூலை 18, 2025 00:28

குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில், பஜனை கோவில் தெருவில், ஐப்ப பூஜையில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் ரோட்டையே அடைத்து, மைக் வைத்து கெண்டை மேளம் சத்தம் காதை கிழிக்கும் படியாக அடிக்கப்படுகிறது. அதற்கு இனி கலெக்டர் அனுமதி தர மாட்டார்என நினைக்கிறேன்.


சமீபத்திய செய்தி