கல்லூரி திறப்பு, தகுதி தேர்வு தேதிகள் மாற்றம்
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரி முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 18ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 25ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 20ம் தேதி துவங்க உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நவ.1, 2 தேதிகளில் நடக்க இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நிர்வாக காரணங்களால் நவ.15, 16ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.