கல்லூரியில் மாணவர் அமைப்பு
சென்னை: சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் துறை துவக்க விழாவும் மாணவர் அமைப்பு துவக்க விழாவும் நடைபெற்றன. டெக்னிப் நிறுவனத்தின் பொது மேலாளர் பி.சாய் ரமேஷ் சிறப்புரை ஆற்றினார். ஐ.எஸ்.ஏ.,யின் வருங்காலத் தலைவர் எஸ்.விஜயராகவன் கவுரவ விருந்தினராக பங்கேற்றார். கல்லூரி முதல்வர் கே.அப்துல் கனி தலைமை உரை ஆற்றினார். துணை முதல்வர் கே.கதிரவன் வாழ்த்துரை வழங்க, துறைத் தலைவர் என்.எஸ்.புவனேஸ்வரி வரவேற்றார். துணை பேராசிரியர்கள் குணசெல்வி மனோகர், லட்சுமி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.