ஏழை மாணவியருக்கு உதவிய "கோஜான் கல்லூரி
சென்னை: படிக்க வசதியின்றி தவித்த, மூன்று ஏழை மாணவியரின், நான்காண்டுகால இலவசக் கல்விக்கு, கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி உதவி உள்ளது. சென்னை செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன் மகள் ஜெயஸ்ரீ. மற்றொரு மாணவி சுகாசினி. அழிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த, தையல் தொழிலாளி நடராஜனின் மகள் ÷ஷாபனா ஆகிய மூவரும், கவுன்சிலிங்கில் தேர்வாகியும், வசதியில்லாததால், படிப்பை தொடர முடியாமல் தவித்து வந்தனர்.இதையறிந்த, கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி நிர்வாகம், இவர்களுக்கு நான்காண்டிற்கான, இலவசக் கல்வியளிக்க முன் வந்தது. கல்லூரி செயலர் பாபு தலைமையில் நடந்த விழாவில், சர்வதேச இளைஞர் எக்ஸ்னோரா பொதுச் செயலர் நிஷா தோட்டா, கல்லூரி தாளாளர் பிருந்தா நடராஜன், விப்ரோ நிறுவன மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசகர் சுப்ரமணியன் ஆகியோர், மூன்று மாணவியருக்கும், கல்லூரியில் இணையும் உத்தரவை வழங்கினர்.தினமலருக்கு நன்றி: கடந்தாண்டுகளில் இலவசக் கல்வி வாய்ப்பை பெற்ற ஐந்து மாணவ, மாணவியர், தங்களுக்கு அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றி குறிப்பிட்டனர். யுவஸ்ரீ, ஈஸ்வரி ஆகிய இரு மாணவியர், தினமலர் நாளிதழ் மூலம், தங்களுக்கு இலவசக் கல்வி வாய்ப்பு கிடைத்ததாக, நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தனர்.