உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலமைப்பை காக்க முன் வாருங்கள்; 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

அரசியலமைப்பை காக்க முன் வாருங்கள்; 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை காக்க முன் வர வேண்டும்'' என 8 மாநில முதல்வர்களுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கு கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்து, சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 'இது, தங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி' என்று தமிழக முதல்வர் கூறியிருந்தார். இந்நிலையில், தீர்ப்பு தொடர்பான 14 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை ஜனாதிபதி கேட்டுள்ளார். இது தொடர்பாக, மேற்குவங்கம், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய 8 மாநில முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

* ஜனாதிபதி உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி உள்ள குறிப்பினை எதிர்க்க வேண்டும்.* ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கை மூலம் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை காக்க முன் வர வேண்டும்.* கவர்னர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.* கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேள்விக் குறியாக்குவது ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்.* கவர்னருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பெற்றுள்ள தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். * மாநில அரசுக்கு எதிரான பிடிவாத போக்கினை கவர்னர்கள் கடைபிடித்தால் இந்த தீர்ப்பு உதவும்.* இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, மாநில சுயாட்சியை பாதுகாக்க முன்வர வேண்டும் * அரசியலமைப்பை பாதுகாக்க அறைகூவல் விடுக்கிறேன் * உச்ச நீதிமன்ற தீர்ப்பை சீர்குலைக்க பா.ஜ., முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.,வின் தீய நோக்கத்தை காட்டுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Matt P
மே 20, 2025 09:39

உச்ச நீதிமன்றம் இவரை போன்றவர்களை சிறையில் தள்ளுங்கள் என்று சொன்னாலும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை வரவேற்பாரா?


vadivelu
மே 19, 2025 07:07

சாலையில் படுத்து உறங்கும், படிப்பறிவே இல்லாதவன் கூட இந்த நாட்டின் பிரதமரை கூட கேள்வி கேட்பது உரிமை என்று சொல்லும் பகுத்தறிவாதிகள், நாட்டின் ஜனாதிபதி சில கேள்விகள் மூலம் தனக்குள்ள சந்தேகத்தைக்கூட கேட்க கூடாது என்கிறீர்களா?


Bhakt
மே 18, 2025 23:35

தமிழகத்தின் தலை எழுத்து இந்த ஓங்கோல் கோஷ்டி.


தமிழ்வேள்
மே 18, 2025 22:06

எழுதிக் கொடுத்த துண்டு சீட்டைப் பார்த்துக்கூட பிழையின்றி படிக்க வக்கு லேது..இந்த லட்சணத்தில் இவரு கடிதம் வேறு எழுதுறாராமா? காமெடி பண்றதுக்கு ஒரு அளவு இல்லையா?..


Svs Yaadum oore
மே 18, 2025 20:36

இந்த திருட்டு கம்பெனி கார்பொரேட் கூட்டம் 500 கார்பொரேட் கம்பெனிகள் நடத்துதாம் ...ஆக்டோபஸ் போல அனைத்து துறைகளிலும் கொள்ளையடிக்கும் குடும்ப திருட்டு திராவிட கும்பல் ....


ManiK
மே 18, 2025 20:35

இந்த சுடலையை ஜனாதிபதியயே கேள்வி கேட்கும் அளவுக்கு சக்தி இருப்பதாக நம்பவைத்து கனவுலகத்தில் வாழவைக்கும் டிஆர்பி ராஜா போன்றவர்கள் ஓடி ஒளியவேண்டிய காலம் சீக்கிரமாக வரும். எதுவும் தெரியாது ஆனால் பல்கலை வேந்தர்னு பட்டம் வேற. திமுக அரசு டிஸ்மிஸ் ஆகவேண்டும்.


Dharma
மே 18, 2025 20:24

பாகிஸ்தானிலிருந்து பலூசிஸ்தான், சிந், ஜில்ஜில் பல்டிஸ்டான் ஆகியவற்றை பிரித்துவிட்டு, தமிழ்நாட்டை பாகிஸ்தானுடன் இணைக்கவேண்டும்: தளபதி கோரிக்கை.


Balasubramanian
மே 18, 2025 20:23

இவருக்கு ஏதாவது நேரிட்டால் அரசியல் அமைப்பு நினைவுக்கு வருகிறது! கொசுக்கடி சனாதனம் ஒழிப்பு பற்றி பேசும் போது வரவில்லை ? ஜனாதிபதி தேர்வில் அவருக்கு எதிராக ஓட்டு போட்டது நினைவு இருக்கிறதா?


Gopalan
மே 18, 2025 20:07

என்ன!! உச்ச நீதிமன்றம் தமிழக அரசு வைக்கும் கோரிக்கைகளை கண் மூடிக்கிட்டு செயல்படுத்துமா ? அல்லது தமிழக அரசை கண்டிக்குமா? இவ்வளவு பணம் கொள்ளை போனது பற்றி கொஞ்சமும் விசாரிக்குமோ?


R. SUKUMAR CHEZHIAN
மே 18, 2025 19:54

தமிழக மக்களின் சிந்தனையை திசைதிருப்ப இப்படி எதாவது சொல்லி தமிழக மக்களின் வரிப்பணத்தை தேவையில்லாமல் செலவு செய்து வெளிமாநில முதல்வர்களை வைத்து கண்துடைப்பு நாடகம் நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை விடியல் புகழ் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.