உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ராமேஸ்வரத்துக்கு விரைவில் வந்தே பாரத்

 ராமேஸ்வரத்துக்கு விரைவில் வந்தே பாரத்

சென்னை: ராமேஸ்வரத்திற்கு வழக்கமான பயணியர்களுடன், சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால், 90.20 கோடி ரூபாயில், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், எழும்பூர் - ராமேஸ்வரம் தடத்தில், வந்தே பாரத் ரயில் இயக்க, சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு தயாராக உள்ளது. இந்த இரண்டு திட்டப்பணிகளையும், விரைவில் பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sharan
ஜூலை 11, 2026 12:42

"விரைவில்" என ஒரு வருடத்திற்கு மேல் சொல்கிறார்கள், ஆனால் எப்போது தான் எனத் தெரியவில்லை. குறிப்பாக, சென்னையில் இருந்து ஓடும் வந்தே பாரத் ரயில்கள் அத்தனையும் இரட்டை ரயில் பாதைகளில் தான் ஓடுகின்றன. ஆனால், இவ்வழித்தடத்தில் திருச்சிராப்பள்ளி —> காரைக்குடி —> மானாமதுரை —> இராமேஸ்வரம் பகுதி மட்டும் தான் ஒற்றை ரயில் பாதையாக இயங்கி வருகிறது. அதை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் வரை, சென்னை - இராமேஸ்வரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வாய்ப்பே இல்லை.


Karthik
ஜூலை 09, 2026 08:18

மதுரை ராமேஸ்வரம் இரட்டை அகலப்பாதை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை