உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2025ம் ஆண்டின் முதல் நாளில் வணிக சிலிண்டர் விலை சரிவு

2025ம் ஆண்டின் முதல் நாளில் வணிக சிலிண்டர் விலை சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜன.,01), வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜன.,01) ஆண்டின் முதல் நாளில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966க்கு விற்பனை செய்யப்படுகிறது.வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.59 ஆக நீடிக்கிறது. கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Constitutional Goons
ஜன 01, 2025 09:28

அரசியல்வாதிகளை மிஞ்சிய கார்போரேட்டு கொள்ளையர்களின் ஏமாற்றும் சூழ்ச்சி வருட பிறப்பிலேயே ஆரம்பமாகிவிட்டது.


அப்பாவி
ஜன 01, 2025 08:20

14 ரூவா 50 பைசா குறைவு. ஒரு டீக்கு ஆகுமாய்யா? இல்லே கடைக்காரன் பத்து பைசா குறைச்சு விப்பானா?


ghee
ஜன 01, 2025 14:17

ஓசி டீ கிடைக்காது கோவாலா


Kasimani Baskaran
ஜன 01, 2025 07:37

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் என்பது போல குறைத்து இருக்கிறார்கள்...


முக்கிய வீடியோ