உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் இணைப்புக்கு ரூ.7,000 லஞ்சம் :கிருஷ்ணகிரி அருகே வணிக ஆய்வாளர் கைது

மின் இணைப்புக்கு ரூ.7,000 லஞ்சம் :கிருஷ்ணகிரி அருகே வணிக ஆய்வாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மின் இணைப்புக்கு ரூ.7,000 லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், இருதுகோட்டை கிராமம் தொட்டிக்குப்பத்தை சேர்ந்த முனிகிருஷ்ணா என்ற விவசாயி, தனது நிலத்தில் போடப்பட்டிருக்கும் போர்வெல்லுக்கு புதிய பூந்தோட்ட மின் இணைப்பு வாங்க தேன்கனிக்கோட்டை தெற்கு உதவி பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வணிக ஆய்வாளர் தனபால் என்பவரை அணுகினார்.இந்நிலையில், தனபால், மின் இணைப்பு கொடுக்க ரூ.7,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று முனி கிருஷ்ணாவிடம் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத முனி கிருஷ்ணா, இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் தனபால் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேற்று புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில், வழக்குபதிவு செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடவடிக்கையின் படி, முனிகிருஷ்ணா, இன்று தேன்கனிக்கோட்டை தெற்கு உதவி பொறியாளர் அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் தனபாலிடம் ரசாயனம் தடவிய லஞ்ச பணம் ரூ.7,000-த்தை கொடுத்துள்ளார்.அதை வாங்கிய தனபால், தனது மேசையின் இருந்த கோப்புகளுக்கு அடியில் மறைத்து வைத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர்(பொ), கிருஷ்ணகிரி நாகராஜன் நேரடி மேற்பார்வையில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துணை காவல் ஆய்வாளர் பிரபு, தனது குழுவினருடன் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் தனபாலை சுற்றி வளைத்து பிடித்தனர். லஞ்ச பணம் ரூ.7 000 மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றினர். அதை தொடர்ந்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, தனபாலை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Bhaskaran
ஏப் 24, 2025 12:35

ஜாக் டோ ஜியோ தலைவர்கள் இவர்களுக்கு பின்புலம் அந்த இயக்கங்களை தடைசெய்ய வேண்டும் லஞ்சம் வாங்கிய ஆட்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை நியமனம் செய்யவேண்டும் ஐந்தாண்டுகள் கழித்து நிரந்தரம் செய்தால் போதும்


Ragupathy
ஏப் 24, 2025 08:30

முதலில் அரசு ஊழியர்கள் சங்கங்களை தடை செய்யவேண்டும். ஜாக்டோஜியோ போன்ற அமைப்புகள் இருப்பதால் அரசு ஊழியர்கள் ஆடுகிறார்கள்...


மணி
ஏப் 23, 2025 22:08

லஞ்சம் வாங்கி கைது செய்ததாக சமீப காலமாக அதிகமான செய்திகள் வெளி வருகின்றன. உண்மையில் அவை என்னவாக இருக்கும் என்றால் சரியான அளவில் அதிகாரியின் குத்தகை பணம் உரியவர்களிடம் போய் சேராமல் இருக்கலாம் அல்லது கைதாகும் அதிகாரி லஞ்சம் வாங்காத நல்லவராக இருக்கலாம் இதுதான் உண்மை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 23, 2025 21:40

நாட்டில் என்ன நடந்தது கொண்டு உள்ளது. பயங்கர வாத தாக்குதல் நாடு கோபத்தில் இருக்கும் போது இவர் கூலாக இலஞ்சம் வாங்கிக் கொண்டு உள்ளார். மற்றொருவரோ கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் கொடிகள் கட்டி ஜல்லிக்கட்டுக்கு பிரமாண்டமாக தயாராகிக் கொண்டு உள்ளார். விளங்கிடும் தமிழகம்.


M S RAGHUNATHAN
ஏப் 23, 2025 21:17

என்றைக்கு இட ஒதுக்கீடு, cash for job செந்தில் பாலாஜி போல் கழக ஆட்சி. வந்ததோ அன்றே இந்த லஞ்ச புற்றுநோய் தமிழகத்தை தாக்க ஆரம்பித்தது. இன்று புரையோடி போய்விட்டது. காரணம் இந்த ஆய்வாளர் ஒன்று வேலைக்கு வருவதற்கு லஞ்சம். கொடுத்து இருப்பார் அல்லது விரும்பிய இடத்திற்கு மாற்றி வந்ததற்கு லஞ்சம் கொடுத்து இருப்பார் அல்லது அவருடைய உயர் அதிகாரிகள் கட்டாயப் படுத்தி இருப்பார்கள். பங்கு இல்லாமல் இருக்காது.


ramesh
ஏப் 23, 2025 21:38

தாங்கள் இன்று தான் புதிதாக செய்தி வாசிக்கிறீர்களா ரகுநாதன் . என்று காமராஜர் காங்கிரஸ் ஆட்சி முடிந்து dmk வந்ததோ அன்றே லஞ்சம் என்பது தமிழ் நாட்டில் தொடங்கி கேன்சர் போல தமிழ் நாட்டில் அனைத்து துறைகளிலும் அரசு அலுவலர் முதல் அரசியல் வாதிகள் வரை நீக்கமற நிறைந்து விட்டது


Minimole P C
ஏப் 23, 2025 21:46

correct


Gokul Krishnan
ஏப் 23, 2025 21:03

இவனை போன்றவனை தனியாக காஷ்மீர் பள்ளதாக்கு அனுப்பி வைக்க வேண்டும். திரும்ப வரவே கூடாது


தாமரை மலர்கிறது
ஏப் 23, 2025 20:30

கோட்டாவில் ஜொலித்த திராவிட கண்மணி.


விவசாயி
ஏப் 23, 2025 20:26

தேன்கனிக்கோட்டை மின்சார அலுவலகம் லஞ்சதிற்கு பேர் போனது. பணம் இல்லாமல் ஒன்றும் நடக்காது. விவசாயிகள் மிகவும் வேதனை படுகிறார்கள்.


Ramesh Sargam
ஏப் 23, 2025 20:06

இப்படி லஞ்சம் வாங்குவதற்குப்பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்...வெட்கம் கெட்டவர்கள்.


புதிய வீடியோ