உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முடக்கப்பட்ட ஜிஎஸ்டி பதிவை மீண்டும் செயல்படுத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வணிக வரி அதிகாரி கைது

முடக்கப்பட்ட ஜிஎஸ்டி பதிவை மீண்டும் செயல்படுத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வணிக வரி அதிகாரி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: முடக்கப்பட்ட ஜிஎஸ்டி பதிவை மீண்டும் செயல்படுத்தி சான்றிதழ் தர 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வணிகவரி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சின்னமாட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (29). இவர் சொந்தமாக சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார். 'ஆட்டோமேஷன் கன்சல்டன்ட் ' ஆக தொழில் செய்வதற்காக ஜிஎஸ்டி பதிவு சான்றிதழுக்காக இணைய வழியில் விண்ணப்பம் செய்தார். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு ஜிஎஸ்டி பதிவு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், திடிரென ஜிஎஸ்டி எண் முடக்கப்பட்டது.இது தொடர்பாக மணிகண்டன், கடந்த 25ம் தேதி பாலக்கோட்டில் உள்ள வணிகவரி அலுவலகத்தில் பணியாற்றும் துணை வணிக வரி அதிகாரி செல்வக்குமாரை சந்தித்தார். அப்போது, ஜிஎஸ்டி சான்றிதழை மீட்டுத் தருவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன், தர்மபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். அவர்கள் அறிவுரையின்படி மணிகண்டன் இன்று மாலை ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை செல்வகுமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார் செல்வக்குமாரை கையும் களவுமாக கைது செய்து விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.கடந்த 2 மாதங்களில் பாலக்கோட்டில் விஏஓ, இன்ஸ்பெக்டர், போலீஸ், கருவூல அதிகாரி என 4 பேர் லஞ்சம் வாங்கி கைதான நிலையில் தற்போது துணை வணிகவரி அதிகாரி கைதானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
செப் 30, 2025 23:13

இன்னும் கொஞ்ச நாளில், ஆசிரியர் பாடம் சொல்லி தர லஞ்சம் கேட்பார். பஸ்ஸில் டிக்கெட் கொடுக்க லஞ்சம், மின்சார பில் கட்ட லஞ்சம். இன்டர்நெட் பில் கட்ட லஞ்சம், வங்கி உள்ளே நுழைய லஞ்சம் என்று தலைவிரித்தாட போகிறது. ஹாஸ்பிடலில் நுழைய லஞ்சம், ஏற்கனவே வீல் ஷேர், பெட்டிற்கு, பெற்ற குழந்தையை பார்க்க மக்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 30, 2025 23:04

குங்கும பொட்டு வைத்த பக்திமான்


c.mohanraj raj
செப் 30, 2025 22:52

ஜிஎஸ்டி வரி போட்டால் மட்டும் போதாது ஜிஎஸ்டி நம்பர்கள் சரியான ஆட்களுக்கு கிடைக்கின்றதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் உடனே வேண்டும் என்றால் 30 ஆயிரம் லஞ்சம் மத்திய அரசு லஞ்ச ஒழிப்புத்துறை உளவுத்துறை எல்லாம் என்ன பிடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை


முக்கிய வீடியோ