உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன்; திருவாரூர் பிரசாரத்தில் விஜய் குற்றச்சாட்டு!

நெல் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன்; திருவாரூர் பிரசாரத்தில் விஜய் குற்றச்சாட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: ''டெல்டா விவசாயிகளிடம், நெல் மூட்டைக்கு 40 ரூபாய் வீதம் கமிஷன் அடிக்கும் கொடுமை நடக்கிறது,'' என்று திருவாரூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் விஜய் பேசினார்.இன்று சனிக்கிழமை காலை நாகையில் பிரசாரம் செய்த தவெக தலைவர் நடிகர் விஜய், இரவு திருவாரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட்டியது நான் தான் என்று மார் தட்டிக் கொண்டவரின் மகன் இப்போது முதல்வராக இருக்கிறார். அவர் என்ன செய்கிறார்? நன்றாக ஓட வேண்டிய தமிழகம் என்ற தேரை நாலா பக்கமும் கட்டையை போட்டு ஆடாமல் அசையாமல் அப்படியே நிறுத்தி விட்டார். இதை பெருமையாக வேறு சொல்லிக்கொள்கிறார். திருவாரூர் சொந்த மாவட்டம் என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால், திருவாரூர் கருவாடாக காய்கிறது. அதை கண்டுகொள்வதே இல்லை.அப்பா பெயரில் பேனா வைக்க சொல்றீங்க. எல்லா இடத்துக்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீங்க. திருவாரூர் மாவட்டத்தில் ஒரு அடிப்படை சாலை வசதி கூட சரியாக இல்லையே!அதிகமாக குடிசைப்பகுதி இருக்கும் ஊர் திருவாரூர். இங்கே இருக்கும் மருத்துவக் கல்லுாரிக்கே வைத்தியம் பார்க்கும் நிலை இருக்கிறது. எல்லா கருவிகளும் வேலை செய்கிறதா, இல்லையே!திருவாரூர் ஒரு மாவட்டத்துக்கு தலைநகர். இங்கு சாலை வசதிகள் கூட சரியாக இல்லை. இந்த மாவட்டத்துல மந்திரி ஒருத்தர் இருக்கிறார். அவரது வேலை என்ன தெரியுமா, சி.எம்., குடும்பத்துக்கு சேவை செய்வது தான் அவரது வேலை. மக்கள் தான் முக்கியம் என்று அவருக்கு நாம் புரிய வைக்கணும். டெல்டா விவசாயிகள் கொடுமை ஒன்றை அனுபவிக்கின்றனர். நெல் ஏற்றி இறக்குவதற்கு ஒரு 40 கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குகின்றனர். அரசு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் தருகின்றனர். அத்துடன், ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். நான்கரை ஆண்டில் பல கோடி ரூபாய் டெல்டா பகுதி விவசாயிகளிடம் இருந்து பிடுங்கியுள்ளனர்.இதை மற்றவர்கள் சொன்னால் நம்ப மாட்டேன். ஆனால் சொன்னதே விவசாயிகள் தான். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். இது உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறது முதல்வர் அவர்களே!உங்களுக்கு 40க்கு 40 என்றால் தேர்தல் முடிவாக இருக்கலாம். டெல்டா விவசாயிகளுக்கு 40 என்றால் வயிற்றில் அடித்து நீங்கள் வாங்கிய கமிஷன் தான் நினைவுக்கு வரும். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?எங்கள் கொள்கை, ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்கள் ஆட்சி, மனசாட்சியுள்ள மக்கள் ஆட்சி. வெற்றி நிச்சயம்.இவ்வாறு விஜய் பேசினார். கூட்டத்தில் பேசிய விஜய், பச்சைத்துண்டு அணிந்திருந்தார். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Durai Kuppusami
செப் 21, 2025 12:56

இவர் முதல்வரை சிம் சார் என்று எகத்தளமாக பேசி சவால் விடுகிறார் முதலில் இவருக்கு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசுகிறார் அரசியல் பற்றி அறிய வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கிறது கூட்டத்தை பார்த்த உடனே தான் என்கிற போதையால் பேசுகிறார் முதல்வரை சிம் சார் நாளை பிம் சார் என்று சொன்னாலும் சொல்வார்...இவர் ஆட்டம் அடங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. வாங்கிய காருக்கு வரி கட்டாமல் டேக்கா கொடுத்தவராச்சே.. முதலில் நீ திருந்து அப்புறம் கமிஷன் பற்றி பேசு.....


xyzabc
செப் 21, 2025 01:38

மிக மலிவான கமிஷன். இத போய் பெரிசா..


Vasan
செப் 20, 2025 22:44

விஜய் அண்ணா , அப்படியே திருவாரூர் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு காலணா டிக்கெட் வாங்கிடுங்கண்ணா. 80 வருஷம் முன்னாடி ஒருத்தர் டிக்கெட் வாங்காம ரயில் ஏறி மெட்ராஸ் வந்துட்டாராம் அண்ணா.


Pandianpillai Pandi
செப் 20, 2025 21:50

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கணக்கா ஒரு அரசியல் கட்சி என பிரகடணப்படுத்தி கொண்டுள்ள தாங்கள் கதையடிப்பது சரியா? இது முறையா ? ஆதாரம் இல்லாமல் பொது மக்களை பயமுறுத்துவது ஒரு குற்ற செயல் இல்லையா ? நீங்க போற காருக்கு ஏற்ற ரோடு இருக்க வாய்ப்பு கம்மிதாங்க. உங்க காரு கதை எல்லோருக்கும் தெரியுமுங்க. இப்ப வீட்டுக்கு வீடு வாகனம் வைத்திருக்கிற விவசாயிகள் காலமாக மாற்றியிருக்கிறது தி மு க அரசு .எங்கள் மக்கள் பயணம் செய்வது சொகுசுக்காக இல்லைங்க. உழைப்பிற்காக .. . தி மு க அரசு மக்களின் உழைப்புக்கு உறுதுணையாக எப்போதும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அரசியல் ஆதாயம் பெற நினைப்பவர்கள் தான் தி மு க பெயரை சொல்லி சொல்லி ஆதாயம் அடைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் தங்களை பார்க்கமுடிகிறது.


Mr Krish Tamilnadu
செப் 20, 2025 21:22

திருவாரூரில் 80 அடி ரோடுகள் எல்லாம் பார்ப்பது கடினம் தான். அதிக மழை பொழிவு உள்ள பகுதிகள். ரோடுகள் அரித்து சென்று விட்டது என்பார்கள். விரிந்து கொண்டு இருக்கும் சென்னை மட்டுமே ஆட்சியாளர் கண்களுக்கு தெரியும். அங்கேயே எல்லா செலவுகளும் செய்வார்கள். 4 வருடம் தூங்கி கொண்டு இருந்த எதிர்கட்சி தலைவர் கூட, தனது பரப்பும் உரையில் மட்டுமே, நாங்கள் அன்றே குறைகளை சொன்னோம், வெளிநடப்பு செய்தோம் என கூறுவார். தமிழகம் பழகிய வாடிக்கை. பிரச்சினைகளை உள்வாங்கி, வெளி கொணர்ந்து, தீர்வை நோக்கி செல்ல தான் ஆள் இல்லை.


BHARATH
செப் 20, 2025 21:01

இந்த கூத்தாடி அடுத்த எலெச்டின்ல DMK வோட கூட்டணி வைப்பார்.


Kulandai kannan
செப் 20, 2025 20:49

ஊப்பீஸின் BPயை நன்றாக ஏற்றுகிறார்.


இறைவி
செப் 20, 2025 20:47

விஜய்க்கு இன்றுதான் தெரிந்ததா? இது காலம் காலமாக நடக்கும் கொள்ளை. அப்போதுதான் விவசாயிகள் நெல்லை அரசியல் வியாதிகள் நெல் அரவை மில்லுக்கு விலை குறைத்து விற்பார்கள். விஜய் திடீரென்று கண்டு பிடித்து விட்டார்!


Sundar R
செப் 20, 2025 20:42

ஜோசப் விஜய்யின் தவெக என்பது விறகடுப்பு. புகை ஜாஸ்தி. வீடு முழுவதும் கரியாகிவிடும். உணவின் டேஸ்ட் நல்லா இருக்கும். ஆனால் சமைக்கும் போது ரிஸ்க் அதிகம். கருணாநிதி குடும்பத்தினரின் வாரிசான திமுக ஒரு கரிக்குமிட்டி. லிக்னைட் கரியின் மூலம் எரிவதால், சூடு அதிகம் என்பதால் சட்டி ஓட்டையாகப் போயிடும். தமிழகம் மட்டுமின்றி நம் பாரத நாட்டையே நாசமாக்குவது திமுக. செபாஸ்டியன் சைமன் கட்சி எரிவாயு கேஸ் அடுப்பு. எரிவாயுவ இறக்குமதி செய்ய மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை நம்பி இருக்கணும். செபாஸ்டியன் சைமன் வெளிநாடான சிலோனின் பிரபாகரனை நம்பி கட்சியை நடத்துகிறார். செபாஸ்டியன் சைமனை சிலோன் காரராகத்தான் அனைத்து தமிழக மக்களும் பார்க்கிறார்களே தவிர அவர் தான் தன்னை தமிழகத்தை சேர்ந்தவராக கூறிக்கொண்டே போகிறார். பாஜக-அதிமுக மற்றும் பல கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹைட்ரஜன்-தண்ணீர் சேர்ந்த அடுப்பு. விலை குறைவு. ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் ஒரே விலை. மத்திய அரசு நம் நாட்டு மக்களுக்கு கோடிக்கணக்கில் மானியம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மிகுந்த பாதுகாப்பு. இந்த அடுப்புக்குத் தான் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்க தேசிய ஜனநாயகக் கூட்டணி.


தமிழ் நிலன்
செப் 20, 2025 20:28

என்னப்பா இது. கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் இல்லை என்றால் திமுக ஏது? திமுகவின் அடித்தளம் அசைக்க முடியாதது.


சமீபத்திய செய்தி