உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேனலை முடக்க கமிஷனர் முயற்சி: உள்துறை செயலரிடம் சங்கர் புகார்

சேனலை முடக்க கமிஷனர் முயற்சி: உள்துறை செயலரிடம் சங்கர் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேர்தல் நேரத்தில், அரசுக்கு எதிராக செய்திகள் வெளியாவதை தடுப்பதற்காக, 'சவுக்கு மீடியா'வை முடக்க முயற்சி நடப்பதாக, உள்துறை செயலர் அலுவலகத்தில், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார்.புகார் மனு அளித்த பின், அவர் கூறியதாவது: சவுக்கு மீடியா நிறுத்தப்பட்டதால், அதில் பணிபுரிந்து வந்தவர்கள், ஐந்து மாதங்களாக வேலையில்லாமல் இருந்தனர். என்னிடம் வேலை பார்த்ததால், மற்ற நிறுவனங்கள் அவர்களுக்கு வேலை வழங்கவில்லை. எனவே, அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதற்காக, மீண்டும் சவுக்கு மீடியாவை நடத்தி வருகிறேன். இந்நிலையில், சவுக்கு மீடியா கேமராமேன் மற்றும் விஷுவல் எடிட்டர் ஆகியோரின் வீடுகளுக்கு, சென்னை, கே.கே.நகர் மற்றும் திருமங்கலம் போலீசார், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு சென்றுள்ளனர். இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு, 'ஹெல்மெட்' போடாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய புகார் தொடர்பாக, அவர்களை அழைத்துச் சென்றதாக சொல்கின்றனர். இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல், 2026ல் நடக்கவுள்ளது. தேர்தல் நேரம் என்பதால், அரசுக்கு எதிராக சவுக்கு மீடியாவில் செய்திகள் தொடர்ந்து வெளியாகும்; அரசுக்கு நெருக்கடி ஏற்படும். இதனால், சவுக்கு மீடியாவை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் செயல்படுகிறார். என் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நேரத்தில், இந்த செயலில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நெருக்கடிகள் கொடுத்தால், சவுக்கு மீடியாவில் பணிபுரிய யாரும் வரமாட்டார்கள்; அவர்கள் குடும்பத்தினரும் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள்.இதனால், மறைமுகமாக நெருக்கடிகளை, போலீசார் கொடுக்கின்றனர். தன்னை பற்றியும், அரசை பற்றியும் வெளிப்படையாக விமர்சனம் செய்யலாம் என, முதல்வர் ஸ்டாலின் பேட்டி கொடுக்கிறார். ஆனால், தனது துறையில் எனக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்தாமல் உள்ளார். போலீஸ் அதிகாரி இவ்வாறு அதிகார துஷ்பிரயோகம் செய்தால், அவரை பற்றி புகார் அளிக்க, சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, உள்துறை செயலரிடம் புகார் அளிப்பதற்கு வந்தேன். உயர் நீதிமன்றத்திற்கு அலுவல் காரணமாக, உள்துறை செயலர் சென்று விட்டார். எனவே, துணை செயலர் செல்வகணபதி என்பவரிடம் புகார் மனு அளித்தேன். மற்ற புகார்களை போல, இந்த புகாரை ஓரமாக எடுத்து வைத்துவிட முடியாது. முறையாக விசாரணை நடத்த வேண்டும் என, சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவ்வாறு விசாரணை நடக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தை நாடுவேன்.இவ்வாறு சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V Venkatachalam
மே 24, 2025 19:13

திருட்டு தீய முக காரனுக்கு எவனுமே சவுக்கு சங்கர் சொல்றது தவறு மற்றும் நான் தப்பு செய்யவில்லை ன்னு சொல்லவில்லை. மாறாக சவுக்கு சங்கரை வசை பாடுவானுங்க.


சி.முருகன்.
மே 24, 2025 15:08

அட பொறம் ..


Satish Rajendran
மே 24, 2025 09:26

Antha alavuku evan worth ellayae


Haja Kuthubdeen
மே 24, 2025 11:35

ஒர்த் இல்லாத ஆளை கண்டு ஏன் பயப்படுறானுங்க....


Kasimani Baskaran
மே 24, 2025 09:23

வளைந்து நெளிந்த தீம்க்கா சொம்பை திராவிடம் தெளித்து தங்களது மான்பை வெளிச்சம் காட்டினார்கள் காங்கிரஸ் அடிமைகளுடன் சேர்ந்த உடன்பிறப்புகள். அதிகம் வம்பு செய்தால் மோடியிடம் போய் சொல்லு என்று சொல்லிவிட வாய்ப்பு அதிகம்.


தமிழன்
மே 24, 2025 08:51

அவர் கமிஷனர் மீது தான் தொடர்ந்து குற்றம் சொல்கிறார்.. ஏன் அரசு கமிஷனரை மாற்ற கூடாது.. என்று யாரும் கேட்பதில்லை.


முருகன்
மே 24, 2025 07:32

வாய்க்கு வந்ததை இவருக்கு பிடிக்காத கட்சியை மட்டும் பேசுவதில் ஏதோ உள் நோக்கம் உள்ளது


Haja Kuthubdeen
மே 24, 2025 11:37

அப்படி என்றால் கடந்த அஇஅதிமுகவில் நடந்ததா தினதினம் கூவிய போது யோக்கியமான எதிர் கட்சி என்ன செய்தது!!!


Natarajan Ramanathan
மே 24, 2025 03:11

சவுக்கு சங்கருக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பது தமிழக அரசின் கடமை.


Kasimani Baskaran
மே 25, 2025 08:15

தமிழக அரசுக்கு பாதுகாப்பு கொடுக்குமளவு திறமை படைத்தவர் சவுக்கர் என்பதை நினைவில் கொள்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை