உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு

ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேவகோட்டை: ''ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியமாகும்,'' என, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் நடந்த சமுதாய நல்லிணக்க கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.அவர் மேலும் பேசியதாவது: ஆங்கிலேயர்கள் அமெரிக்கா, கனடா நாடுகளில் அடித்தட்டு மக்களிடையே பிரித்தாளும் முறையை செயல்படுத்தினர். இந்தியாவில் அந்த வழியை பின்பற்ற முடியவில்லை. இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் சமூகத்தினர் ஒற்றுமையாக இருந்தனர். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி தேசிய ராணுவம் அமைத்த போது தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் இணைந்தனர். இச்சூழலில் ஆங்கிலேயர்கள் எப்படி பிரித்தாள்வது என யோசித்தனர். எது ஒன்றுபடுத்துவது என யோசித்ததில் கோயில்கள் என கண்டுபிடித்தனர். மக்களின் அனைத்து வாழ்வியலிலும் கோயில்கள் தான் மையமாக இருந்ததை தெரிந்து கொண்டனர். கோயில்களை பலவீனப்படுத்தினால் சமூகத்தை, சமுதாயத்தை பலவீனப்படுத்த முடியும் என முடிவு செய்தனர்.கோயில்களை நிலங்கள் சொத்துக்கள் மூலம் வருவாய் ஏற்படுத்தி நிர்வகித்தனர். அதனால் கட்ட முடியாத வகையில் வரிகளை அதிகப்படுத்தி முடக்கினர். ஜாதிகளுக்குள்ளும் பிரிவினை ஏற்படுத்தினர். அதுவும் சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் பிரித்தாளும் செயலை செய்தனர் என்பது ஆச்சரியமில்லை. விடுதலைக்கு பிறகும் ஆட்சியாளர்கள் அதன் வழியே செயல்பட்டது தான் ஆச்சரியமாக உள்ளது.இந்த நாட்டிலே ஹிந்து தர்மத்தை பக்தியை டெங்குவோடும், மலேரியாவோடும் வியாதிகளோடும் ஒப்பிடுவதை துர்பாக்கியத்தோடு பார்க்கிறோம். பக்தி என்பது அறிவியலாகும். சிலர் பக்தி அறிவியலுக்கு ஒவ்வாதது, பக்தர்கள் அறிவியல் சிந்தனையற்றவர்கள் என்றெல்லாம் கூறுகின்றனர். இந்தியா முழுவதும் சிவன், சக்தி, பெருமாளை வணங்கிய பக்தர்கள் அறிவியலை வளர்க்கவில்லையா. இந்த புண்ணிய பூமியில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் அறிவியல் பக்தி மனத்தை பரப்பியது பகுத்தறிவு சிந்தனை இல்லாதவர்களா. இப்படி விவாதங்கள் ஏன் நடத்தப்படுகிறது. ஏனென்றால் கோயில்கள் ஒழிய வேண்டும் பக்தர்கள் கோயில்களுக்கு செல்வதை மறக்க வேண்டும். தங்கள் பாரம்பரியங்களை கோயில்களுக்கு சென்று வழிபடும் எண்ணத்தையே மறந்து விட வேண்டும். இதன் மூலம் கோயில்கள் ஒழிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சூழ்நிலையை தான் இப்படிப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 97 )

Ramaswamy Jayaraman
மே 29, 2025 16:09

ஹிந்து தர்மம் என்பது ஒரு வாழ்க்கை வழிமுறை. அதற்கு ஜாதி மதம் என முத்திரை குத்துவது சரியல்ல. மதம் என்பது மனிதனால் பின்னாளில் படைக்கப்பட்டது. வாழ்க்கை முறை என்பது மாறி கொண்டுதான் இருக்கிறது. இன்று நாம் வாழும் வாழ்க்கை 2000, 1000,500, 200 வருடங்களுக்கு முன்னாள் இருந்தது போல இல்லை. அதே போல்தான் மொழியும் மாறிக்கொண்டு இருக்கிறது. ஏன் இன்னும் சொல்லப்போனால் 20, 30 வருடங்களுக்கு முன்னால் இருந்தது போல் நாம் இல்லை. ஏன் எதற்க்காக நாம் இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று தெரியவில்லை. யாரும் யார் சொல்வது போலும் வாழ்வதில்லை. தாய் தந்தை சொல்வதையே கேட்கும் மன நிலையில் இன்றைய தலைமுறை இல்லாதபோது நாம் எங்கிருந்து பழைய வாழ்க்கை முறையை பற்றி சிந்திக்கப்போகிறோம்.


Nallavan
மே 27, 2025 09:08

எங்களை இன்றி ஒரு எள்ளளவும் நகராது, ஏன் திருமணம், கர்மாதி, கும்பாபிஷேகம், ஜாதகம், கோவில் அர்ஜனை, எங்களால் மட்டுமே செய்யமுடியும், இதற்க்கு சனாதனம் பலமாக வேண்டும், பா ஜ க , rss இதையே வலியுறுத்துகிறது, இதற்க்கு சாதகமான ஆளுநர் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம் . இப்போ புரிகின்றதா, ஏன் டெங்கு, மலேரியா, வைரஸ் இவைகளை ஒழிப்பதை போல, எங்களையும் ஒழித்துவிட கூடாது என்பதற்காக தான் ஆளுநர் அடித்துக்கொள்கிறார்


Nesan
மே 27, 2025 08:33

அடே நீங்க ஒன்னு ஹிந்து குடும்பத்தையே இதைவிட மோசமா ஒப்பிடுறாங்க ... அதை பார்த்துக்கொண்டு மத்தியஅரசு சும்மாதானே இருக்கு ... எல்லாம் அரசியலா?


Narayanan
மே 26, 2025 16:56

என்ன செய்ய ? உதயநிதி படித்தது அவ்வளவுதான் ? எங்கே புத்திபோகுமோ அங்கேதான் போகும் .


Krishnamoorthy
மே 26, 2025 15:10

பிஜேபி, RSS-க்கு ஜால்ரா போடுவது துர்பாக்கியம். இது கவர்னர் வேலை இல்லை.


S.V.Srinivasan
மே 26, 2025 07:33

அவனுகளுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் சார். நாய் வாலை நிமிர்த்த முடியாது.


என்றும் இந்தியன்
மே 24, 2025 18:42

இந்த நாட்டிலே ஹிந்து தர்மத்தை பக்தியை டெங்குவோடும், மலேரியாவோடும் வியாதிகளோடும் ஒப்பிடுவது யார்அவர்களுக்கு உள்ள புத்தி அவ்வளவுதான்


K.Ramakrishnan
மே 24, 2025 17:30

இவரு இன்னமும் போகலையா? வேண்டா விருந்தாளியாகவே இருக்கிறார்.


ஆரூர் ரங்
மே 24, 2025 17:16

இங்கிலாந்தில் BLUE BLOODED எனும் ராஜ .குடும்ப ஆட்களுக்கு மட்டுமே ஆளும் உரிமை. அரபு நாடுகளில் ஷேக் குடும்ப ஆட்களுக்கு மட்டுமே ஆளும் உரிமை. தி.மு.க வில் நிதிக் குடும்பத்துக்கு மட்டுமே முதல்வர் பதவி. கர்ணன் சாதாரணர். இதில் மதம் எங்கிருந்து வந்தது?.


Svs Yaadum oore
மே 24, 2025 17:08

தமிழர்கள் கட்டிய கோவிலாம் ..கோவிலில் வந்து புகுந்து விட்டார்களாம் ... ஹிந்து அற நிலையத்துறை அமைச்சர் விடியல் அமைச்சர் தானே ....விடியலிடம் அமைச்சரிடம் சொல்லி அவர்களை வெளியேற்று ....அதுக்கு வக்கில்லாமல் இங்கே வந்து புலம்புவது ...


Murugan Gurusamy
மே 24, 2025 18:12

நீங்கள் நினைப்பது ஒன்றும் நடக்காது


சமீபத்திய செய்தி