ஆந்திர துணை முதல்வர் மீது சென்னை போலீசில் புகார்
சென்னை:'இரு மாநில மக்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்யும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது, வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், 'சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள்' என, சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அவரை சாடும் வகையில், தமிழக துணை முதல்வர் உதய நிதி கருத்து தெரிவித்தார். இதனால், உதயநிதிக்கு எதிராக ஆந்திராவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவர்களில் சிலர், உதயநிதியின் படம் உள்ள போஸ்டரை காலால் மிதித்தனர். அதற்கும் உதயநிதி பதில் அளித்துள்ளார்.இந்நிலையில், தேசிய முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் தலைவர் சிவா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். புகாரில், 'ஆந்திரா மற்றும் தமிழக மக்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்யும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது, வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.