உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்

மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்

கிருஷ்ணகிரி: மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, பெற்றோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். சூளகிரி அடுத்த நல்லகான கொத்தப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியின் பெற்றோர், நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: என் மகள், சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். 16ல் பள்ளிக்கு சென்ற மகளிடம், அவரின் பெரியப்பா மகனின் புத்தகம் இருந்துள்ளது. அதை பார்த்ததமிழாசிரியை, என் மகளிடம் கடுமையான வார்த்தைகளை கூறி, ஆண்களின் புத்தகத்தை நீ எப்படி வைத்துள்ளாய் எனக் கூறியுள்ளார். என் மகள் கூறிய விளக்கத்தை கூட ஏற்காமல், மூன்று ஆசிரியர்கள் மகளை தாக்கியுள்ளனர். மனமுடைந்த என் மகள் தற்கொலை செய்துகொள்வதாக கூறி வருவதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். இதுகுறித்து விசாரித்து, என் மகளை தரக்குறைவாக பேசி, தாக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை