உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாச நடனமாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

ஆபாச நடனமாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

சென்னை: 'ஆபாச நடனமாடி சர்ச்சையில் சிக்கியவர்கள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற திட்டத்தில், பயிற்சி பெற்றவர்கள் அல்ல' என, டி.ஜி.பி., அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டு உள்ளது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 28 ஆண்டுகளுக்கு பின், நாளை கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. இதற்காக, கடந்த, 16ம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டு, கும்பாபி ேஷகப் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், கோவில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், கும்பாபிேஷக பணிக்கு வந்த, வினோத், கணேசன் ஆகியோருடன் சேர்ந்து, தனது வீட்டில் மது அருந்திவிட்டு, ஆபாசமாக நடனமாடி உள்ளார். கோவிலுக்கு வரும் சில பெண்கள் மீது, திருநீறை மொத்தமாக அள்ளி வீசி, அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என, தகவல் வெளியானது. ஆனால், இதில் உண்மை இல்லை. குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கோமதி விநாயகம் உள்ளிட்டோர், தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில், பயிற்சி பெற்றவர்கள் அல்ல. தவறான தகவல் பரப்புவோர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில், பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்டோர், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ram
ஜூலை 01, 2025 15:52

எப்படி கடவுளே இல்லை என்று சொன்னவன் சிலைக்கு மாலை மரியாதை செய்த நல்லவன்கள் சொல்லிகிரானாக உண்மையாக இருக்கும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 01, 2025 11:05

அரசு ஊரெல்லாம் டாஸ்மாக் திறந்து குடியை ஊக்குவிக்கிறது .. அதில் குடித்துவிட்டு அர்ச்சகர்கள் பிரேக் டான்ஸ் ஆடியிருகிரார்கள் ..