உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவம்; சாலைக்கு பெயர் சூட்ட தீர்மானம்!

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவம்; சாலைக்கு பெயர் சூட்ட தீர்மானம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டுவதற்கு, மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் இன்று (ஜூன் 30) காலை 10:00 மணியளவில், மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கூட்டத்தில், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டுவதற்கு, மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதேபோல், கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாடல்ஸ் சாலையை எஸ்றா சற்குணம் சாலை என பெயர் மாற்றம் செய்யவும் சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.எம்.எஸ்.விஸ்வநாதன், 1928ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். சின்ன வயதிலேயே நடிகராகவும், பாடகராகவும் தான் வர வேண்டும் என விஸ்வநாதன் ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் நாடகங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர், டி.ஆர்.பாப்பா மூலமாக எஸ்வி வெங்கட்ராமின் இசை குரூப்பில் சேர்ந்தார். அப்போது முதல் இனி நமது பயணம் இசையில் தான் என முடிவெடுத்தார்.விஸ்வநாதனுக்கு நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். பிலிம்பேர், வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட நிறைய விருதுகளை பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்பட்டார்.தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்; ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தாமரை மலர்கிறது
ஜூன் 30, 2025 22:14

உண்மையான தமிழ் பற்று இருந்தால், பல கவிதைகளை இயற்றிய பாரதியார் பெயரை வைக்க வேண்டியது தானே. அதைவிட்டு இசை அமைப்பாளர்கள் பெயர்கள் என்றால், நாளை இளையராஜா, ரகுமான், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்த இசை அமைப்பாளர், அனிருத், டி ராஜேந்தர் என்று போய்க்கொண்டே இருக்கும்.


சிட்டுக்குருவி
ஜூன் 30, 2025 17:50

திருமாவளவன் அவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் .தலித்துக்கு ஒதுக்கப்பட்ட மேயர் பதவி தவராக ஒரு கிறிஸ்தவருக்கு அளிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது .அதை அடுத்தமுறை தலித்து பெண்ணுக்கு பெற்று நீதியை நிலைநாட்டவேண்டும். சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மனதில் கொள்ளவேண்டும் .மாநில அரசும் இதற்க்கு முன்வரவேண்டும் .


Rajarajan
ஜூன் 30, 2025 15:14

தேவையற்ற இலவசங்களும், இதுபோன்ற பெயர்வைக்கும் நிகழ்வுகளும் அறவே ஒழிக்கவேண்டும். ஓரிருவர் தவிர, அனைவருமே தங்கள் குடும்பத்திற்கும் / தனக்கும் உழைப்பவர்கள் தான். சுயநலவாதிகள் தான். அதற்காக, தன்னிடம் பதவி இருக்கிறது என்பதற்காக, மேற்சொன்னவற்றை செய்வது தான் சுயநலத்தின் உச்சக்கட்டம்.


மணி சேகரன்
ஜூன் 30, 2025 15:10

இப்படி ஒவ்வொருவரும் தெருக்கள் ,ஊர்கள், மாவட்டங்கள் பெயர்களை மாற்றி வைத்துவிட்டு போய்விடுகிறார்கள். அங்கு இருப்பவர்கள் தான் ஆதார், வருமான வரி அட்டை, கேஸ் ,வேலை பார்க்கும் அலுவலகத்தில் முகவரி, வங்கி கணக்கு முகவரி, வாகனங்களின் ஆர்சி புத்தகம், டிரைவிங் லைசென்ஸ், இன்னும் பிற ஆவணங்கள் அனைத்திலும் மிகவும் அலைந்து திரிந்து மாற்றம் செய்ய வேண்டி இருக்கிறது. சில இடங்களில் கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கிறது. ஆகவே இம்மாதிரி ஏதாவது பெயர் மாற்றம் செய்தால் கூடவே சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் இலவசமாகவும், அலுவலகங்கள் தாமே முன்வந்து முகவரி மாற்ற முகாம் போன்றவை நடத்தியும் முகவரி மாற்றம் செய்து தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஒரு தீர்மானமும் போட வேண்டும். நான் குடியிருக்கும் தெருவின் பெயரை அங்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வார்டு கவுன்சிலர் தன் இஷ்டத்திற்கு மாற்றி வைத்துவிட்டு போய்விட்டார் அந்த பெயர் மாற்றத்தை என்னுடைய ஆவணங்களில் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டு விட்டேன். முகவரி மாற்றம் இல்லை தெருவின் பெயர் மட்டும்தான் மாறி இருக்கிறது என்று விளக்கம் சொல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. சில இடங்களில் கட்டணமும் செலுத்த வேண்டி இருந்தது. சிலவற்றை இன்னும் மாற்ற முடியவில்லை.


Tiruchanur
ஜூன் 30, 2025 15:09

MSV சாலை. டபுள் ஓகே. ஆனால் எஸ்ரா துர்குணம் - செல்லாது


எஸ் எஸ்
ஜூன் 30, 2025 14:43

எஸ்றா சர்குணம் ஒரு துர்குணம் கொண்ட அயோக்கியன். என்னிடம் ஹிந்து என்று எவனாவது சொன்னால் கன்னத்தில் அறைவேன் என்று சொன்ன மத வெறியன். அவன் பெயரை வைப்பது ஹிந்துக்களை அவமதிக்கும் செயல்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 30, 2025 14:41

அவசரப்படாதீர்கள். விரைவில் இன்பஉதயநிதி பெயரில் பாலமே வரப்போகிறது. மருதமலையில் அமைந்துகொண்டிருக்கும் மாபெரும் சிலைக்கும் இன்பா உதயா பெயர்தான் சூட்டப்போகிறார்களாம்.


Kulandai kannan
ஜூன் 30, 2025 14:20

இப்படி சாலை பெயர்களை மாற்றினால், ஆதாரில் மாற்றுவது யார். ஆலந்தூர், பல்லாவரம் போன்றவை செங்கல்பட்டு மாவட்டமாகிய பிறகும், இன்று வரை காஞ்சிபுரம் மாவட்டமாகவே ஆதாரில் வருகிறது.


seshadri
ஜூன் 30, 2025 14:17

எஸ்ரா சர்குணம் ஒரு மதவாதி அவன் நாட்டுக்கு என்ன செய்தேன் என்று அவன் பெயரை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. மற்ற மதத்தை கேவலமாக பேசியவன் மத சகிப்பு தன்மை இல்லாத ஒரு ஆளு


A.Gomathinayagam
ஜூன் 30, 2025 14:06

விசுவநாதன்/ராமமூர்த்தி சாலை என்றே பெயர் வைக்கலாம். சாதனை இருவரது பங்களிப்பு கொண்டதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை