உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய்யின் அறிக்கையில் வெளிப்படும் கவலையும் மற்ற கட்சிகளுக்கு பதிலும்!

விஜய்யின் அறிக்கையில் வெளிப்படும் கவலையும் மற்ற கட்சிகளுக்கு பதிலும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்சி மாநாடுக்கு முன்பு முதன்முதலாக தொண்டர்களுக்கு கடிதமாக எழுதியுள்ள நடிகர் விஜய், அதில் சில விஷயங்களை மற்ற கட்சிகளுக்கு பதில் அளிப்பது போல் குறிப்பிட்டுள்ளார்.த.வெ.க., கட்சியின் முதல் மாநாடு அக்.,27ல் நடக்க உள்ளது. மாநாடுக்கு அனுமதி அளிக்கும் முன்பு போலீசார் வரிசையாக ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்தனர். அதற்கெல்லாம் ஒரு வழியாக பதில் சொன்னார் விஜய். அனுமதியும் கிடைத்து விட்டது. ஆனால், மற்ற கட்சி தலைவர்கள் சும்மா இருக்கவில்லை. ‛‛மாநாடு நடத்துவது சாதாரணமான விஷயமா; மாநாடு நடத்தி அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இல்லாத கட்சி; தொடர்ந்து அரசியல் களத்தில் நிற்க முடியுமா; நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான்; கட்சி ஆரம்பித்து சூடுபட்டுக்கொண்ட நடிகர்கள் எத்தனை பேரை பார்த்துவிட்டோம்...'' - இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன.இந்நிலையில் மாநாடுக்கான கால்கோள் விழா நடந்து முடிந்தது. இதை முன்னிட்டு கட்சியினருக்கு அறிக்கையை ஒரு கடிதம் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார் விஜய். அதில் அவர், எம்ஜிஆரின் ''ரத்தத்தின் ரத்தமே'', கருணாநிதியின் ‛‛என் உயிரினும் மேலான உடன்பிறப்பே'' ஸ்டைலில் ‛‛என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே'' என்று தனக்கென புது ஸ்டைலில் தொடங்கி உள்ளார். இது அவரது ‛‛பிராண்ட்'' ஆகவும் மாறக் கூடும்.மாநாட்டுக்கு வரும் தனது ரசிகர்கள், போதையில் வந்து விடக் கூடாது; வரும் வழியில் ஏதும் பிரச்னை செய்து விடக்கூடாது என அவர் அஞ்சுகிறார். அதனாலேயே இந்த கடிதத்தில், ‛‛பொறுப்பான மனிதனாக இருக்க வேண்டும். ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்'' என்றெல்லாம் திரும்ப திரும்ப கூறுகிறார். ரசிகர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கினால், ஆரம்பத்திலேயே கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும்; போலீசாரால் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என்பதே அவரது அச்சம்.‛‛இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா; மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா; களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா'' என நினைக்கிறார்கள். மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போது தான் அவர்களுக்குப் புரியும்'' என்று குறிப்பிடும் விஜய், சந்தேகம் எழுப்பும் மற்ற கட்சி தலைவர்களுக்கு இதையே பதிலாக தருகிறார்.இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத திமுகவினர் சிலர் கூறும்போது, ‛‛உண்மையில் இவரது ரசிகர்கள் எந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வார்கள். இவர் தொடர்ந்து எவ்வளவு நாள் அரசியல் செய்வார் என்பதெல்லாம் இனிமேல் தானே தெரியப் போகிறது. பார்ப்போம்'' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

sundarsvpr
அக் 26, 2024 08:55

முதலில் நேர்மை வேண்டும்.. தமிழக அரசியல் தலைவர்களிடம் இல்லை. பலர் மதம் மாறியவர்கள். இவர்கள் தாக்கம் எந்த மதத்தின் மீது இருக்கும். இந்த பாரத நாடு ஆன்மிக நாடு. ஆன்மிகம் என்றால் உண்மைக்கு கட்டுப்பட்டு இருத்தல். அப்படியென்றால் வேறு வெளிநாட்டு மதங்களுக்கு மாறியவர்கள் ஏன் தங்களை காட்டிக்கொள்ள தயங்குகிறார்கள்? மதம் மாறியவர்கள் அதற்குரிய சின்னத்துடன் வர தயங்குகின்றனர்.? மக்கள் சிந்திக்காதவரை பதுதோல் போர்த்திய புலிகள் அரசியலில் கொடிகட்டி பார்ப்பார்கள். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிதோற்க காரணம் என்ன. ? இது தமிழக அரசியலில் பரவும் விரைவில்.


Rajan
அக் 04, 2024 17:57

உந்தன் விரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க. வேலையற்ற வீரர்கள் மூளையற்ற வார்த்தகளை..... எம்ஜிஆர் பாட்டு சரியாக இருக்கிறது. ஏன் அவரும் வரட்டும். போராடட்டும். மக்கள் ஆதரவு இருந்தால் முதல்வாரகட்டும். உங்களுக்கு எல்லாம் பயமாக இருந்தால் விலகி போங்கள்


Barakat Ali
அக் 04, 2024 16:20

பெயர் குறிப்பிட விரும்பாத திமுகவினர் சிலர் கூறும்போது, ‛‛உண்மையில் இவரது ரசிகர்கள் எந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வார்கள். " ...... அப்படின்னு டீம்கா சொல்லுச்சா ஆ ஆ ஆ ????


Rengaraj
அக் 04, 2024 15:42

சினிமாவில் மட்டுமே ஒருவர் ஒரு பாடலில் அல்லது சிலகாட்சிகளில் உச்ச நிலையை எய்தமுடியும். ஒரு லைட்பாய் வேலைக்குக்கூட அனுபவம் தேவை என்பது விஜய்க்கு நன்றாகவே தெரியும். அப்படியிருக்கும்போது ஒரு வார்டு மெம்பெர் பெற்றிருக்கும் நிர்வாக அனுபவம் கூட இல்லாத ஒருவர் கட்சி ஆரம்பித்து அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்தி ஆட்சி, அதிகாரம் என்ற பாதையில் பயணிப்பது எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கே வெளிச்சம். ஒருவர் கட்சி ஆரம்பித்து தொடர்ந்து நடத்த நிறைய பணம் தேவைப்படும். அது விஜயிடம் நிறையவே தற்போது இருக்கிறது. இன்னும் பத்துவருடங்களுக்கு குறையாமல் அவர் நன்றாகவே நிறைய படங்களில் நடித்து பணம் நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த மாதிரி ஹவாலா முறையில் ஒருவர் இன்று நேர்மையற்ற முறையில் வரி செலுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் சம்பாதித்த பணத்தை கையாள்வது ரொம்பவே கஷ்டமான காரியம் என்பது அவருக்கே நன்றாக தெரியும். அரசியல்வாதிகள் , பெரிய தொழிலதிபர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் , டிரஸ்ட் , நன்கொடை , இப்படியான விஷயங்கள் இல்லாமல் கணக்கு காட்ட முடியாது. தனது வருமானம் வரி என்ற பெயரில் அரசாங்கத்துக்கு போகக்கூடாது என்று செலவு கணக்கு காட்ட ஒரு பிரமாதமான வழி ஒரு அரசியல் கட்சி நடத்துவது. எவ்வளவு செலவு கணக்கு வேண்டுமென்றாலும் எழுதலாம். சம்பாதித்த பணத்தை மடை மாற்றலாம். மற்றபடி மக்களுக்கு நல்லது பண்ணவேண்டும் என்றால் அதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. அவர் நடித்த படங்களிலேயே நிறைய வழிமுறைகளை அவர் சொல்லியிருக்கிறாரே ? ஏன் செய்யவில்லை. ? பாஜகவுக்கு பதிலாக காங்கிரஸ் கட்சி மத்தியில் இருந்தால் விஜய் கட்சியே தொடங்கி இருக்கமாட்டார்.


Barakat Ali
அக் 04, 2024 17:53

அவர் கட்சி துவங்குவதற்காக மத்தியில் எந்த கட்சி ஆளுகிறது என்றெல்லாம் பார்க்கவில்லை ..... அதற்கு அவசியமும் இல்லை .... சென்னை ஹை கோர்ட் வரை அதிகாரம் செல்லுபடி ஆகக்கூடிய திமுக அவரை இயக்குகிறது ..... அவரது பேச்சுக்கள் பலவற்றை நீங்கள் கவனித்திருந்தால் இந்த உண்மை புரிந்திருக்கும் ......


angbu ganesh
அக் 04, 2024 15:09

ரோகினி தேடேற ஒடச்சது இந்த அணிலு குஞ்சுகத்தானே


yts
அக் 04, 2024 14:27

ignore him


Srinivasan Krishnamoorthi
அக் 04, 2024 14:24

மக்களிடம் குச்சி மிட்டாய் காட்டி ஒட்டு கேக்க தெரிஞ்ச கட்சி தான் தருதலையான மக்கள் உள்ள தமிழ்நாட்டில் ஜெயிக்கும்


தமிழ்வேள்
அக் 04, 2024 14:13

திராவிட கும்பலின் தொண்டர்கள் எவனும் தன்னுடைய குடும்பத்தை கவனித்ததாக வரலாறு கிடையாது ...மனைவியும் குழந்தையும் பிச்சை சோற்றுக்கு பிச்சை எடுக்கும்போது , அண்ணாதுரை , எம்ஜிஆர் , கட்டுமரம் என அலைந்து கைக்காசை போட்டு போஸ்டர் ஒட்டி சீரழிந்த குடிகார டிக்கெட்டுகள் ...அவர்களின் வாரிசுகள் மட்டும் எப்படி உருப்படியாக இருக்கும் ? அந்த விளங்காமட்டைகளை நம்பி இந்த சோசப்பு விசய் கட்சி துவங்கியுள்ளது ... ....ஜுனியர் விசிலடிச்சான் குஞ்சுகள் .


john
அக் 04, 2024 14:09

இந்த எதிர் அரசியல் வாதிகளே 100 பேரை அனுப்பி பிரச்சனை பண்ணவைப்பாங்க. அரசியல் என்றாலே பொய்யும் பித்தலாட்டமும் தான். வாழ்த்துக்கள் விஜய் மோதி பாருங்க.இப்போதைய அரசியலில் பணம் இருக்கிறவன் ஜெயிப்பான் ஜெய்கிறவன் வாழுவான்.


Kumar Kumzi
அக் 04, 2024 14:05

டாஸ்மாக் நாட்டில் இளைஞர்கள் கொண்டாட போகும் மாநாட்டில் வீரன் இல்லாமலா ஹீஹீஹீ


முக்கிய வீடியோ