உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் மோதல்: தமிழிசையுடன் உதயநிதி வார்த்தைப்போர்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் மோதல்: தமிழிசையுடன் உதயநிதி வார்த்தைப்போர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில், தமிழிசை - உதயநிதி இடையே வார்த்தைப்போர் வெடித்துள்ளது.நேற்று கவர்னர் ரவி பங்கேற்ற தூர்தர்ஷன் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டது. இது பெரிய பிரச்னையாக உருவாக்கப்பட்டது. இதற்காக கவர்னரை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் அறிக்கை வெளியிட்டனர். உடனடியாக கவர்னர் ரவி மற்றும் கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் இன்னும் முடியவில்லை. இன்றும் கவர்னரை கண்டித்த தி.மு.க.,வை விமர்சித்தும், அதற்கு பதில் கொடுத்தும் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

முயற்சி

இந்நிலையில், கோவையில் நிருபர்களை சந்தித்த பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை அளித்த பேட்டி: பா.ஜ.,வினர் மத்திய அரசு தமிழ் மீது பற்று இல்லாதவர்கள் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்துவருகிறார். அதன் வெளிப்பாடு தான், பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதம். நாம் தான் தமிழ் பற்றாளர்கள் என்று பொய்யான ஒரு தமிழ்ப்பற்றை சொல்லி இதுவரை மக்களை ஏமாற்றினோம். இனிமேலும் ஏமாற்ற வேண்டும் என்ற ஒரு அவசரம் தெரிகிறது. அவரின் சமூக வலைதளப்பதிவும் அப்படித்தான். தமிழ் மாதம் கொண்டாடுவோம். தமிழ்வாரம் கொண்டாடுவோம் தமிழை கொண்டாடுவோம். ஆனால் இன்னொரு மொழியை கொண்டாடுவதன் மூலம் தமிழ் சிறுமைப்படுத்தப்படுகிறது என்ற வாதத்தை மறுக்கிறேன். தமிழை சிறுமைப்படுத்த முடியாது. சிறப்புற தான் செய்ய முடியும். என்னை ஹிந்தி இசை என விமர்சிக்கின்றனர். எனது பெயரில் மட்டுமல்லாமல் உயிரிலும் தமிழ் உள்ளது. தி.மு.க., அமைச்சர் வீட்டு குழந்தைகள் எத்தனை பேர் தமிழ் படிக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் விடுபட்டது எனக்கு ஒப்புதல் கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்பட வேண்டும். ஆனால், உள்நோக்கம் இல்லாமல் செய்த ஒன்றை உள்நோக்கத்தோடு செய்தார்கள் என்று கற்பிப்பது தான் தவறு என்கிறேன்.தெரியாமல் நடந்த ஒரு தவறு. அது நடந்து இருக்கக்கூடாது. தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும், சரியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பாடப்பட வேண்டும். கடமைக்காக செய்யக்கூடாது. இதை வைத்து பூதாகரமாக அரசியல் செய்கிறார்கள். இரட்டை வேடத்தை தான் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு தமிழிசை கூறினார்.

கோபம்

இதற்கு பதிலடி கொடுத்து துணை முதல்வர் உதயநிதி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்நாள் கவர்னர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் கவர்னருக்கு கோபம் வருகிறது! 'எல்லோருக்கும் எல்லாம்' என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட உங்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...! நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் - ஆன்மிகமும் தமிழகத்தில் என்றைக்கும் கலக்காது. மத்திய அரசின் 'டி.டி. தமிழை'ப்போல் - தமிழிசையும் ஹிந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! இவ்வாறு அந்த பதிவில் உதயநிதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 78 )

வைகுண்டேஸ்வரன்
அக் 26, 2024 14:25

டம்லிசை அக்காவை கவர்னர் ஆக்கி, பிறகு வேட்பாளர் ஆக்கி, அக்காவின் அரசியல் வாழ்க்கை யை பிஜேபி முடித்து விட்டது. அதே போலத்தான் அண்ணாமலையை MLA சீட்டில் நிக்க வெச்சு, தோற்ற பின் தலைவர் ஆக்கி, அவர் வேணாம் னு சொல்லியும் MP சீட்டில் நிக்க வெச்சு மானத்தை வாங்கிட்டு, வெளிநாட்டுக்கு அனுப்பி முடிச்சுவிட்டது. ஒரு சாரார் மட்டுமே பிஜேபி தலைவர் ஆகலாம். வேணும்னா பாருங்க : டம்லிசைக்கு இன்னும் புரியலை இவருக்கு ஆதரவா எச் ராஜா எதுவும் பேச மாட்டான். துணை முதல்வர் சரியான பதிலடி குடுத்திருக்கார்.


சோழநாடன்
அக் 24, 2024 10:23

மாநிலத் தலைவர் என்று வலம் வந்தவர், அதிகாரங்கள் மிக்க ஆளுநர் என்று வலம் வந்தவர், அரசியல் ஆசையில் தோல்விகளை மட்டுமே சந்தித்து, திமுகவை வம்புக்கு இழுப்பதையே வேலையாக செய்துகொண்டிருக்கும் தமிழிசையை நினைத்தால் அழுகையாக வருகின்றது. படித்து அறிவு பெற்ற பெண் இப்படி முழுசங்கியாக மாறி உளறிக்கொண்டிருப்பதை நினைத்தால் மனம் வேதனை அடைகின்றது.


sundarsvpr
அக் 22, 2024 13:48

தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சிபிஸ்சி உட்பட தமிழ்த்தாய் முழுமையாய் சொல்லவேண்டும் என்று உணர்வை உண்டாக்கவேண்டும். மத்திய அரசு பள்ளிகளில் இதனை முதலில் செயல்படுத்த இயலும்.


K.n. Dhasarathan
அக் 22, 2024 12:32

பாடலில் பிழை இருந்ததை ஒப்புக்கொள்ளும் தமிழிசை, அதற்க்கு பிறகு வருத்தம் தெரிவிக்காமல் போன முன்னாள் கவர்னர் ரவி, மற்றும் தொலைகாட்சி நிறுவனம் பற்றி ஒன்றும் சொல்ல மறுக்கிறார், ஏன்? தவறு நடந்துவிட்டால் வருத்தம் /மன்னிப்பு கேட்பதுதான் நாகரிகம், அனைத்து தரப்பினரும் சரமாரியாக எதிர்த்தவுடன் அப்போதுதான் அது சிறிய தவறு, என்று சொல்வதா ? நாகரிகம் தெரியாதா ? நாகரிகம் தெரியாதவர்களுக்கு பதவி எதற்கு ?


sugumar s
அக் 20, 2024 21:40

திராவிட காட்சிகள் 5 வரிகளை பாடலில் இருந்து நீக்கியது . கவர்னர் நிகழ்ச்சியில் ஒரே ஒரு வரி பாடவில்லை . என்ன பெரிய குத்தம் . கட்சியில் எதனை பேர் தமிழ் தாய் வாழ்த்து சரியாய் பாடுவாங்க


INDIAN
அக் 23, 2024 11:28

கட்சியில் எத்தனை தமிழ்தாய் வாழ்த்து படுவார்கள் என்பது சரியான கேள்வியல்ல, இந்தியாவில் எத்தனை பேர் சமஸ்கிருதம் பேசுகிறார்கள், சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்ட எத்தனைபேர் இந்தியாவில் இருக்கிறார்கள், சமஸ்கிருதத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லோரும் குறைந்தபட்சம் சமைக்கிருதத்தில் நன்கு வார்த்தை ஏசுவதற்ற்கு தகுதியானவர்களா


Parthiban
அக் 20, 2024 13:14

நீங்கள் பார்க்காமல் பாடுவீர்களா


Elangovan A
அக் 20, 2024 13:05

தமிழக முதல்வர் ஸ்டாலினோ அல்லது அவரது மகன் உதய நிதியையோ எழுதி வைத்து பார்க்காமல் தமிழ்த் தாய் வாழ்த்தை பாடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ??


OBCman man
அக் 20, 2024 17:54

First you and your family should sing


Arachi
அக் 20, 2024 09:54

தமிழ் தாய் வாழ்த்தில் இருக்கும் வரிகளில் தெக்கணமும் என்று தொடங்கும் வரிதான் விடப்படவேண்டுமா என்பதால் தான் இவ்வளவு விவாதத்திற்கு காரணமாக இருக்கிறது. நெஞ்சு பொறுக்கவில்லை.....


Muthukrishnan
அக் 20, 2024 09:23

தமிழ்த்தாய் வாழ்த்துக்களை முழுவதுமாக படிக்க வேண்டும் ,அதே நேரத்தில் திராவிடம் என்ற சொல்லை மாற்றி தமிழ் நல் திருநாடும் என்று வைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் எதற்காக திராவிடத்தை இதில் திணிக்க வேண்டும் திராவிடம் என்ற சொல்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் தூக்கி பிடிக்கிறார்கள் இது பொதுவாக கர்நாடகா கேரளா ஆந்திரா அனைத்துக்கும் பொதுவான சொல் அந்த மாநிலத்தில் எல்லாம் திராவிடம் என்ற பேச்சுக்கு இடமில்லை இந்த தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடம் என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் சொல்கின்றேன் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக படிக்க வேண்டும் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் திராவிடம் என்னும் சொல் நமக்குத் தேவை இல்லை


Venkateswaran Rajaram
அக் 25, 2024 13:01

இரண்டு திருட்டு கழகங்களின் பெயரில் திராவிடம் உள்ளது அதனால் தான் திராவிடம் என்ற சொல்லை திணிக்கிறார்கள்


K. Loganathan Kanthan
அக் 20, 2024 07:34

அனந்தன் என்ற ஒருவர் இல்லை என்றால் இசை ஒரு தகர டப்பாத்தானுங்கோ ....


முக்கிய வீடியோ