உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில நிர்வாகிகள் நியமிப்பதில் குழப்பம்; டில்லியில் நட்டாவுடன் நாகேந்திரன் சந்திப்பு

மாநில நிர்வாகிகள் நியமிப்பதில் குழப்பம்; டில்லியில் நட்டாவுடன் நாகேந்திரன் சந்திப்பு

சென்னை : தமிழக பா.ஜ.,வில், மாநில நிர்வாகிகளின் பதவியை பிடிக்க, மூத்த நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவுவதால், அவர்களை நியமனம் செய்வதில், குழப்பம் நீடிக்கிறது.இந்நிலையில், புதிய நிர்வாகிகள் பட்டியலுடன், டில்லி சென்ற தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

நெருக்கடி

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழக பா.ஜ.,வில் மாவட்டத் தலைவர் தேர்தல், மாநிலத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும், நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு, மாவட்ட துணைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.இதேபோல், மாநில அளவில், மாநில துணைத்தலைவர், செயலர், பொதுச்செயலர், பொருளாளர் என, 28 பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். இந்த பதவிகளில், அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கட்சி பணியில் சிறப்பாக செயல்படுவோரை, நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஏற்ப நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஆனால், மேலிடத் தலைவர்களுடன் தொடர்பில் உள்ள சிலர், தங்களை மாநில பதவிகளில் நியமிக்குமாறு, தலைமைக்கு நெருக்கடி தருகின்றனர். இதனால், மாநில நிர்வாகிகளை நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

ஆலோசனை

இந்த சூழலில், மாநில நிர்வாகிகளின் உத்தேச பட்டியலை எடுத்துக்கொண்டு, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகன் ஆகியோர், கோவையில் இருந்து, டில்லி சென்றனர்.அவர்கள், கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம், நேற்று பட்டியலை கொடுத்து, புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசித்துள்ளனர். சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக நிர்வாகிகள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது. மாநில நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்புக்கு முன், பட்டியலில் இடம்பெற வேண்டியவர்கள் குறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகன் ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர். பட்டியலில், அண்ணாமலையின் ஆதரவாளர்களையும் இணைத்தே பட்டியல் தயார் செய்ய வேண்டும் என, கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஜி அறிவுறுத்தியதைத் தொடர்ந்தே, இருவரும் அண்ணாமலையிடம், பட்டியல் குறித்து ஆலோசித்துள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
ஜூன் 25, 2025 13:53

தமிழக பாஜகவில் சேர்ந்தவர்கள் ஏதாவது பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே சேர்ந்தார்கள், அப்புறம் குழப்பம் வராமல் என்ன செய்யும்?


Rengaraj
ஜூன் 25, 2025 10:40

திமுக தனியே களத்தில் நின்று போட்டிபோட்டதே கிடையாது. கூட்டணி இன்றி இவர்கள் எந்த காலத்திலும் ஜெயித்தது கிடையாது. இவர்கள் வாக்கு சதவீதம், நோட்டா கட்சி, என்று மற்ற கூட்டணிகட்சிக்காரர்கள் பற்றி விமர்சனம் செய்வதற்கு தகுதி கிடையாது. சீமான் மாதிரி தனித்து நின்று களமாட தைரியம் இல்லாத கட்சிக்காரர்கள் கூட்டணி பற்றி விமர்சிப்பது மகாகேவலம். பாஜக தொண்டர்களும் இதை புரிந்துகொண்டு மக்களிடம் தங்கள் கட்சியை வளர்ப்பதில் தீவிர அக்கறை காட்டவேண்டும். என்னமோ இந்த தேர்தலை விட்டால் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் விமோசனம் அறவே இல்லை என்ற கோணத்தில் அதன் தொண்டர்கள் இருக்கக்கூடாது. அனைத்து தொகுதிகளிலும் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு இரு பெரும் திராவிட கட்சியினர் இருப்பதை பாஜக வெளிகொண்டுவரவேண்டும். இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம் என்று இருப்பவர்கள் தமிழ்நாட்டில் அறுபது சதவீதம் பேருக்கு மேல் உள்ளனர். அனைத்து மட்டத்திலும் உள்ள பாஜக நிர்வாகிகள் இதை தெளிவாக புரிந்து வேலை செய்யவேண்டும்.


Svs Yaadum oore
ஜூன் 25, 2025 08:47

விஜய் ஜோசப் வேறு களத்தில் உள்ளாராம்... சொல்வது பாலைவனம் ....அப்ப இந்த சிறுபான்மை வோட்டுகள் நிச்சயம் நடிகன் கட்சிக்கு போகாது ...சிறுபான்மைக்குள்ளே பிளவு ......நடிகன் கட்சிக்கு ஒரு சிறுபான்மைதான் .....அப்ப நடிகன் கட்சி சமூக நீதி மத சார்பின்மை கட்சி கிடையாதா ??....


Palanisamy Sekar
ஜூன் 25, 2025 07:36

தேசீய கட்சிகளிடையே உள்ள பெரிய வியாதி இது. எப்போ பார்த்தாலும் பதவி பதவின்னு அலைவது மாநில கட்சிகளிடம் மட்டுமல்ல தேசீய கட்சிகளிடமும் உள்ள தோற்று நோய். படிக்கும்போதே ஒருவித எரிச்சல்தான் வருகின்றது. பதவி கிடைக்காமல் போனால் எதிர்கட்சிக்கு தாவுவது என்பதையும் எதிர்பார்க்கலாம். தானாக தேடிவருவதுதான் மரியாதையை. தேடி அலைவதும் பணம் கொடுத்து வாங்குவதும் அசிங்கம். ஆனாலும் மாநில கட்சியை கட்டிலும் காங்கிரஸ் என்கிற தேசீய கட்சியை காட்டிலும் பாஜக அவ்வளவு மோசமான நபர்கள் உள்ள கட்சியல்ல என்பதுதான் சற்றே ஆறுதலான விஷயம்.


திகழ்ஓவியன்
ஜூன் 25, 2025 07:25

ஒட்டு மொத்த பிஜேபி தொண்டன் முருகன் மாநாட்டில் ஆதாவது 10 லட்சம் பேர் வந்தது 3லட்சம் என்றால் 234 தொகுதி க்கு கணக்கு பார்த்தா வெறும் 4270 பேர் அப்புறம் எப்படி நீங்க நோட்டா வ தாண்டுவீங்க, இது தான் உங்கள் கள நிலவரம், மேலும் இங்கே வந்தவன் எல்லாம் உனக்கு வோட்டு போட்டா, அங்கு வந்த பெண்கள் BUS மகளிர் உரிமை தொகை, தவப்புதல்வன் , தங்கமகள் , காலை சிற்றுண்டி முதியோர் உதவி தொகை , மகளிர் சுய உதவி தொகை , நான் முதல்வர் திட்டம் , வீடு தேடிவரும் மருத்துவம் இப்படி யோசிச்சா முருகன் கண்ணுக்கு தெரிவாரா ,இல்லை மாதம் வீட்டிற்கு 6000 தரும் ஸ்டாலின் தெரிவாரா யோசியுங்க , அதை விட 1. 50 பேர் அரசு வேலை கொடுத்து இருக்கிறார் அதான் 1 ஆம் தேதி ஆனா 1000 accountil விழுதே அதான் அவர்களும் அரசு ஊழியர் தான் , என்ன ஜன்டா தலை சுற்றுகிறத


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 07:57

அரசு ஆஸ்பத்திரிகளில் 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. வார்ட் பாய் ஊசி போடும் அவலம். இதில் இல்லம் தேடி மருத்துவமாம்.


திகழ்ஓவியன்
ஜூன் 25, 2025 08:37

பாவம் என்ன செய்தாலும், ஏற்கனவே முருகர் மாநாடு அண்ணா பெரியார் க்கு நேர்ந்த கதி, ADMK தொண்டன் கண்டிப்பா பிஜேபி க்கு வோட்டு கிடையாது என்று சொல்லி விட்டான், பாவம் விஜய் ஜோசப் வேறு களத்தில், ஆகவே சமாதி தான்


Mettai* Tamil
ஜூன் 25, 2025 10:06

உங்க விசுவாசம் ரொம்ப ஓவர் ..இந்த முறை உங்க ஊழல் பணம் எடுபடாது ..நாலு வருஷ மெகா ஊழல் , அதிகமான லஞ்சம் ,போதைப்பொருள் கலாச்சாரம் , ஒரு குறிப்பிட்ட ஓட்டு வங்கிக்காக, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு இந்து மத நம்பிக்கையை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசுவது , தேச பிரிவினைவாதம் போன்ற ஏகப்பட்ட சமூக விரோத செயல்கள் அனைத்தையும் தமிழ் நாட்டு மக்கள் உணர்ந்து விட்டார்கள் .அதிமுக கூட்டணி வெல்வது உறுதி ..விஜய் 2021 எலக்சன் வரைக்கும் திமுக ஆதரவாகத்தான் இருந்தார் ..எனவே திமுக ஓட்டை தான் பிரிப்பார் ..கண்டிப்பாக ஊழல் நாத்திக கும்பலுக்கு முருகன் கண்ணுக்கு தெரியமாட்டார் ..


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 25, 2025 07:23

இருப்பதோ நோட்டா வுக்கும் கீழ், இதற்கு ஏன் இந்த build up?


N Annamalai
ஜூன் 25, 2025 07:15

இப்பவே இப்படி .ஆட்சி அதிகாரம் பெற்றால் என்ன ஆகும் ?.


திகழ்ஓவியன்
ஜூன் 25, 2025 07:14

இதில் என்ன குழப்பம் யார் நியமிக்க பட்டாலும் நோட்டா கூட தான் போட்டி அப்புறம், தற்போது தலைவர் முதல் எல்லாம் வெளி கட்சியில் இருந்து வந்த கூட்டம் தான் அப்புறம் என்ன


Venukoppal, S
ஜூன் 25, 2025 08:32

யோவ் ஆர்ட்டிஸ்ட் இவ்ளோ உதார் உடுற நீங்க கூட்டணியிலிருந்து வெளியேறி தனியா நின்னு உங்க ஊசி போன மாடல் என்ன அப்டின்னு நிரூபி. கட்டுமரமே பழம் நழுவி பாலில் விடாதா அப்டின்னு கொக்கு மாதிரி காத்து கிடந்தவர். வந்துட்டான் நவீன முட்டு


Mettai* Tamil
ஜூன் 25, 2025 10:13

திமுகவின் அரசியல் வரலாற்றில் ஒரு முரையாவது கூட்டணி இல்லாமல் தனியாக நிற்க சொல்லுங்க ..அது நோட்டா வையும் ஜெயிக்காது . நோட்டு கொடுத்தாலும் ஜெயிக்காது என்ற உண்மை தெரியவரும் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை