உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிர்வலைகளை ஏற்படுத்திய பவன் கல்யாண்; காங்கிரஸ், இந்திய கம்யூ., கண்டனம்

அதிர்வலைகளை ஏற்படுத்திய பவன் கல்யாண்; காங்கிரஸ், இந்திய கம்யூ., கண்டனம்

முருக பக்தர்கள் மாநாட்டில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசிய பேச்சு, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரையில் நேற்று முன்தினம் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், பவன் கல்யாண் பேசுகையில், 'சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். நாம் நிறத்தின் வாயிலாக பார்க்கவில்லை; அறத்தின் வாயிலாக பார்க்கிறோம்.

எலி கூட்டம்

'நாம் அந்த கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தால், அந்த கூட்டம் காணாமல் போய்விடும். எலி கூட்டம் எவ்வளவு இருந்தாலும், ஒரு நல்ல பாம்பு சீறினால், எலிகள் ஓடிவிடும். சிவனின் கழுத்தில் உள்ள நாகபாம்பு போல் நாம் சீற வேண்டும்' என்றார். ஆன்மிகத்தை மையப்படுத்தியே பவன் கல்யாண் பேசுவார் என, எதிர்பார்த்த நிலையில், தி.மு.க., ஆட்சியை அகற்றுவதற்குஉரிய காரணங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டி, நடப்பு அரசியலை அவர் பேசியுள்ளார். தி.மு.க., கூட்டணியை எலிகள் கூட்டம் என்றும் அவர் சீண்டியுள்ளதால், அதற்கு தமிழக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில், பவன் கல்யாண் உள்ளிட்டோர் தேர்தல் பிரசார கூட்டமாக மாற்றி விட்டனர்.

பாசிச வலை

அரசியலையும், மதத்தையும் கலந்து, தேசிய அளவில் அரசியல் ஆதாயம் தேடிய பா.ஜ., தமிழகத்தில் கடவுள் பெயரை பயன்படுத்தி, தமிழக மக்களை பாசிச வலையில் சிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது' என, கூறியுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் கூறுகையில், '' பா.ஜ., கூட்டணி கட்சித் தலைவர், ஜனசேனா கட்சி நிறுவனர், ஆந்திர துணை முதல்வர் என்ற நிலையில் பவன் கல்யாண் பங்கேற்று, மதச்சார்பற்ற அரசின் கொள்கையை சிறுமைப்படுத்தியுள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஆதாயம் தேடும் நோக்கம் என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளார்,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

veeramani
ஜூன் 30, 2025 09:46

எதிர்க்கட்சிகள் எல்லாம் எதுவும் செய்வார் .... மதிப்பிற்குரிய பவன் கல்யாண், ஆந்திராவின் துணை முதல்வர் அருமையாக பேசினார். தென் தமிழ்நாட்டின் வணக்கத்திற்குரிய தேவர் திருமகனாரை பற்றி மிக மிக அருமையான பேச்சு இருந்தது வேலும் மயிலும் வாங்கியதால் தேவர் திருமகனாராய் முருகனின் தூதுவராக பார்க்கிறோம் என பேசினார். சத்தியமாக எங்களது வாக்குகள் சரியாக போய்சேரும் . உண்டியல் கையேந்துபவர்களுக்கு என்ன தெரியும் அவர்களை சீனாவிற்கு திருப்பி அனுப்பலாம்


Ramesh Sargam
ஜூன் 28, 2025 22:40

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம். மதுரையில் அன்று நடந்த முருக பக்தர்கள் மாநாடு வெற்றியடைந்ததை பார்த்து திமுக போன்ற கட்சிகளுக்கு திண்டாட்டம், திண்டாட்டம்.


madhesh varan
ஜூன் 25, 2025 12:19

இங்க வாய்ப்பில்லைராஜா


Saravana
ஜூன் 24, 2025 22:09

தி மு கஅ கூட்டம் இது எலி கூட்டம் இல்ல. குள்ள நரி கூட்டம் பிணந்தின்னி கழுகு கூட்டம்


Venkatesan Srinivasan
ஜூன் 24, 2025 22:07

வளர்ப்பு ஜீவன்களுக்கு மட்டுமே எலும்பு துண்டும் கிடைக்கும். தெருவில் சுற்றி வரும் ஜீவன்களுக்கு அதுவும் கிடையாது.


Selvaraj K
ஜூன் 24, 2025 18:40

மற்ற மாநிலத்தில் கூட்டனி கட்சினருக்கு துணை முதல்வர் அல்லது வேறு அதிகாரம் மிக்க பதவி கொடுத்து மக்கள் பணி ஆற்றுகிறார்கள்.ஆனால் தமிழ் நாட்டில் எழும்பு துண்டுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். இவர்கள மக்கள் சேவகர்கள் ?


Madras Madra
ஜூன் 24, 2025 17:38

மத சார்பற்ற என்ற வார்த்தையை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்க பா ஜ க முயற்சி எடுக்க வேண்டும் அந்த ஒற்றை வார்த்தை இந்த நாட்டின் அடையாளத்தை அழித்து கொண்டு இருக்கிறது


Venkatesan Srinivasan
ஜூன் 24, 2025 22:38

இப்போதுதான் ஜாதி அடையாளத்தின் முக்கியத்துவம் எதிர் கட்சிகளுக்கு தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாளில் மத அடையாளமும் வலியுறுத்தி போராடுவார்கள். குறிப்பாக திராவிஷ கும்பல். அப்பொழுது மதச்சார்பின்மை என்ற பித்தலாட்டம் காற்றில் பறக்க விடப்படும். இந்துமதத்தில் மட்டுமே வாழ்வியல் தொழில் தனிப்பட்ட கலாச்சாரங்கள் அடிப்படையில் ஜாதி பிரிவுகள். கிருத்துவ முஸ்லிம் மதங்களில் அவர்களின் பூர்வீக அரபு பிரதேச தரவுகளின் அடிப்படையில் ஜாதி பிரிவுகள் இல்லை. அப்படி அங்கு இருந்தாலும் எந்த சிறப்பு சலுகையும் இல்லை. இங்கே நம் பாரதத்தில் இடஒதுக்கீடு பெற வேண்டி கிருத்துவ முஸ்லிம் மதத்தினர் தங்களை இந்துமத ஜாதி பிரிவுகளில் உட்படுத்தி அடையாளம் காண்பிக்க முற்படுகின்றனர். இந்த செயல் முற்றிலும் இந்துமத தனித்துவமான ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கொள்கைக்கு விரோதமானது. சமீபத்தில் தமிழகத்தில் மத அடையாளங்கள் தவிர்த்த ஜாதி சான்றிதழ்கள் என்ற தவறான நிகழ்வுகள் மூலம் வெளிப்படுகிறது. இதனால் இடஒதுக்கீடு கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசை நகர்த்தும்.


Gnana Subramani
ஜூன் 24, 2025 13:19

இரண்டு மாநில முதல்வர் என்று அண்ணாமலையை உசுப்பேத்தியது போல இவரையும் தமிழ்நாடு & ஆந்திரா முதல்வர் என்று சொல்லி அழைத்து வந்து இருப்பார்களோ


Rajan A
ஜூன் 24, 2025 12:48

பக்கோடா சாப்பிட பல் வேண்டும். அறிக்கைகள் விட திராணி இருக்க வேண்டும். பிச்சை எடுத்து சீட் வாங்குபவர்கள் எல்லாம் வாய் மூடி இருக்க வேண்டும்


JAGADEESANRAJAMANI
ஜூன் 24, 2025 11:31

இந்து மதத்தை இழுவுபடுத்தி பேசும் அரசியல்வியாதிகள் மத்தியில் பவன் கல்யாண் போன்றோர் ஆதரவு இந்துக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாகிறது. மேலும் இவரைப்போன்றோர் தமிழக அரசியலில் ஈடுபடவேண்டும்.


போராளி
ஜூன் 24, 2025 16:29

தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை இந்த மாதிரி பயலுக சொல்லுவதை நம்ப


பேசும் தமிழன்
ஜூன் 24, 2025 20:20

திருட்டு மாடல் ஆட்கள் சொல்வதையே நம்பும் போது.... பவன் கல்யாண் சொல்வதை ஏன் கேட்க மாட்டார்கள் ??


புதிய வீடியோ