உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகார மமதையால் தி.மு.க., அமைச்சர்கள் அருவருப்பான பேச்சு: காங்., எம்.பி., கண்டனம்

அதிகார மமதையால் தி.மு.க., அமைச்சர்கள் அருவருப்பான பேச்சு: காங்., எம்.பி., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநகர்: 'அதிகார மமதையால் தி.மு.க., அமைச்சர்களின் குறிப்பிட்ட சில பேச்சுக்கள் அருவருக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது' என கூட்டணியில் உள்ள விருதுநகர் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: ஜாதிய கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீடு, ஜாதி கணக்கெடுப்பு எடுத்த பின்பு 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ஜாதிய கணக்கெடுக்கும் விவாதத்தை துவக்கி உள்ளது. தமிழக அரசு அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் என்னவெல்லாம் பேசினார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. தி.மு.க., அமைச்சர்களின் சில பேச்சுக்கள் அருவருப்பானது; கண்டிக்கத்தக்கது. அதிகார மமதையால் அப்படி பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. வக்ப் வாரிய சட்ட மசோதாவை காங்., முழுமையாக எதிர்க்கிறது. திருப்பரங்குன்றம் கல்லுாரி நிகழ்ச்சியில் கவர்னர் ஜெய் ஸ்ரீராம் என கூறி மாணவர்களை மத அடிப்படையில் திசை திருப்புவது வருத்தம் அளிக்கிறது. ஏப்.,24ல் மதுரையில் தென் மண்டல ரயில்வே ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில் தென் மாவட்ட மக்களின் பிரச்னைகள் குறித்தும் கூடுதல் ரயில்கள் இயக்குவதன் அவசியம் குறித்தும் கோரிக்கைகள் வைக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

குமார்
ஏப் 15, 2025 14:35

ஜெய் ஸ்ரீராம்


Sridhar
ஏப் 15, 2025 13:31

இந்த ஆளு யாரு, இவரு பின்புலம் என்னானு யாருக்காவது தெரியுமா? மூணு முறை MP யா ஆயிட்டாரு, வடக்கனா தெக்கனானே தெரியல, திடீர்னு எங்கேயிருந்து மொளைச்சி வந்தாருன்னே தெரியல? ராகுல் காந்தியோட வேற நெருக்கமா இருக்கறாரு


K V Ramadoss
ஏப் 15, 2025 13:12

ஜெய் ஸ்ரீ ராம் சொன்னால் உங்களுக்கென வருத்தம் ?


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 15, 2025 12:20

திமுக காரங்களுக்கு தொண்டனிடறதும் சாமரம் வீசறதுமே மக்கள் பணின்னு சொல்ற நீங்க, காங்கிரஸ்காரங்க , திமுக அமைச்சர்களைப் பற்றி இப்படி பேசலாமா


TRE
ஏப் 15, 2025 11:47

தி.மு.க., அமைச்சர்களின் பேச்சுக்கள் எப்போதுமே அருவருப்பானது தான் அமைச்சர்களாக இருக்க தகுதி இல்லாதவர்கள்


Rajarajan
ஏப் 15, 2025 10:06

அவங்க தி.மு.க. ஜீனே அப்படிதான். பழைய குப்பையை கிளறி பாருங்க. எவ்ளோ நாற்றம் எடுக்கும்னு. அவங்களுக்கு வோட்டு போடறாங்க பாருங்க, பரம்பரை தி.மு.க. காரனு பெருமையா வேற சொல்லிக்கிட்டு, அவங்களை சொல்லணும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 15, 2025 10:56

திமுகவில் முன்பு ஒரு பெண் குல திலகம் பேச்சாளர் ஒருவர் இருந்தார் அவர் அந்த காலத்தில் மேடையில் பேசினால் ஆண்களே அவர் பேச்சை கேட்க கூச்ச படுவார்கள். திமுக தமிழ் வளர்த்த இலட்சணம் இது தான். கல் தோன்றி முன் தோன்றா காலத்தே முற்பட்ட தமிழ் மொழி செம்மொழிக்கு கிடைத்த மரியாதை திமுக ஆட்சியில் இவ்வளவுதான்.


Nagarajan D
ஏப் 15, 2025 09:36

அடேய் உங்க கூட்டமும் எதற்கும் சளைத்ததல்ல.. உங்க முதலாளியம்மா பேசினமாதிரி வேறு யாருமே பேசமாட்டாங்க


B. இராமச்சந்திரன்
ஏப் 15, 2025 09:32

தேசதந்தை மற்றும் காங்கிரஸின் பிதாமகர் காந்திஜி போற்றிய ஹே ராம் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் வார்த்தைகளை காங்கிரஸ் காரர்களே தீண்டத்தகாத வார்த்தை போல கொச்சை படுத்துவது தேசபிதாவை அவமதிப்பதற்கு சமம்.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஏப் 15, 2025 09:23

உன்னைபோன்ற திமுகமீது வெறுப்பும் அஇஅதிமுக மீது சாப்ட் விருப்பமும் இருக்கும் வரை ராகுல் பிரதமர் ஆவது குதிரை கொம்பே


பேசும் தமிழன்
ஏப் 15, 2025 18:34

அப்படியா..... அவர் (பப்பு) இந்தியாவில் முடியாவிட்டால்.....தாய்லாந்து அல்லது பாகிஸ்தான் நாட்டில் பிரதமராகி விட்டு போகிறார்.


ஆரூர் ரங்
ஏப் 15, 2025 09:23

அப்போ நாகலாந்து போல அரசு நிகழ்ச்சிகளில் பாதிரியார் பைபிள் படித்து தோத்திரம் செய்து துவங்கினால் ஓகே வா? அங்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை அப்படித்தான் நடக்கிறது. எதிர்க்கும் துணிவுண்டா? உங்க தலைமை என்ன சொல்லும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை