பறிபோன தொகுதி காங்கிரஸார் எதிர்ப்பு!
ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதியை மாநில காங்., தலைமை, தி.மு.க.,வுக்கு விட்டு கொடுத்ததை அடுத்து, லோக்கல் காங்கிரசார் கடும் கோபம் அடைந்துள்ளனர். தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, லோக்கல் காங்கிரஸார் இணைந்துள்ள வாட்ஸாப் குழுக்களில், 'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி, இன்று வைகுண்ட ஏகாதசி, கோவிந்தா! கோவிந்தா!! வாக்களிக்கும்போது காங்கிரஸ்காரன் சிந்தித்தால் சரி...' என ஒரு போட்டோவை பகிர்ந்து வருகின்றனர்.