உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட பரிசீலனை; அண்ணாமலை கொடுத்த அப்டேட்

டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட பரிசீலனை; அண்ணாமலை கொடுத்த அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்தார்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சட்டசபைக்கு இன்று (டிச.,09) மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட, டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி, சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும், மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வர உள்ளார். இந்த சூழலில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் கடிதம், தொலை பேசி மூலம் அறிவுறுத்தி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7wap1vxk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்தார்' என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக,மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து தி.மு.க., அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப் பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

AMLA ASOKAN
டிச 10, 2024 08:59

தமில் நாட்டுக்கு ஒரு அரசே தேவையில்லை . ஒரு கட்சி தலைவர் போனில் பேசியே எல்லாவற்றையும் முடித்து விடுகிறார் . லண்டனில் கற்றுக்கொண்ட திறமை


Gnana Subramani
டிச 09, 2024 15:42

மத்திய அமைச்சருக்கு தொலைபேசியில் அறிவுறுத்த அண்ணாமலை என்ன இந்நாட்டு பிரதமரா


Dharmavaan
டிச 09, 2024 15:18

ஒவ்வொரு போராட்டத்துக்கும் பிஜேபி பின் வாங்குவது அதை கேவலப்படுத்தும் .ஆவேசமாக பேசுவது பிறகு பின் வாங்குவது அசிங்கம்


Dharmavaan
டிச 09, 2024 15:12

இப்படி பேசுவதைவிட அதனால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றம் பற்றி தெருமுனை கூட்டம் போட்டு பேசினால் நல்லது திமுகவுடன் ஒத்து போவது கெட்ட பெயரை கொடுக்கும்


Jay
டிச 09, 2024 14:04

சுற்றுப்புற சூழல் மாசு கேடு இல்லாமல் இந்த சுரங்கம் அமைத்து அங்கு சுற்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றால் இதை செய்ய வேண்டியது தானே? சுரங்கம் தானே தொழிற்சாலை அல்லவே? ஆரம்பித்த எல்லா திட்டத்தையும் நிறுத்துவது என்பது மக்களுக்கு நல்லதல்ல. 500 இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு பிறகு எப்படி வேலை கொடுப்பது? வெட்டிப் போராட்டங்களை தூண்டி விட்டு தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் வராமல் பார்த்துக் கொள்வதை இதற்கு முன்னால் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலினும் செய்தது தற்போது தொடர்கிறது. ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் ரூ.1௦௦௦ கொடுப்பது பிரயோஜனம் மற்றது அதற்கு பதிலாக ஏதோ ஒரு வகையில் வேலை வாய்ப்பு கொடுப்பதே நல்லது.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 09, 2024 14:03

நீர் முதலில் இந்த நாட்டின் பிரதமரை அழைத்து செல்லுங்கள் இல்லை நீங்களே கூட தனியாக போய் வாருங்கள்...


vijay
டிச 09, 2024 13:05

. தங்ஸ்டோன் தொழிற்ச்சாலைக்கு அனுமதி கொடுத்ததே மாநில அரசு தான் என்று வர வெளிப்படுத்தினர் . அதை ஏன் மாநில அரசு மறுக்க வில்லை. மக்கள் எதிர்ப்பால் , அண்ணாமலை அவர்கள் மத்ய அமைச்சுருடன் அத் திட்டத்தை ரத்து செய்ய அழுத்தம் கொடுத்துருக்கார் ஆகவே. உண்மையை உரைத்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பாராட்ட மனம் இல்லையென்றாலும் ...வசவு பாடதிர்கள்.


pmsamy
டிச 09, 2024 12:40

எந்த அண்ணாமலைய பத்தி பேசுறீங்க


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 09, 2024 12:24

அய்யா முந்திரி கொட்டை இப்படி தான் நீ தமிழக மக்களுக்காக SRILANKA சென்றாய் என்று பார்த்தல் அதானி பவர் க்கு ஸ்ரீலங்கா போனாய் என்றும் அதை PRESENT அதிபர் ரத்து செய்ய போகிறார் என்று வருது , நீயும் வெற்றி பெறவில்லை நீ செய்த தூது வேலையும் வெற்றி இல்லை நீ ராசியே இல்லாத ராசியே வெட்கப்படும் வேஸ்ட் FELLOW


Nagendran,Erode
டிச 09, 2024 13:00

ஏலே கட்டுமர பற்றாளா நீ எதை வேணா சொல்லிக்க ஆனா வாட்ச் பில் கேட்டவர் உச்சா போனாரே அத மட்டும் மறந்துடாத ஜாக்கிரதை!


Nallavanaga Viruppam
டிச 09, 2024 13:38

பகுத்தறிவு பகலவன்கள் ராசியை பற்றி ஏன் பேச வேண்டும்? தனி மனித வன்மம் மட்டுமே திராவிட சித்தாந்தம். நாளைக்கே அரசியல் இல்லையென்றாலும் அவர் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கும். திராவிட கொழுந்துகளுக்கு அப்படியா?


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 09, 2024 14:04

அவர் படிப்புக்கு எங்க வீடு செக்யூரிட்டி வேலை தான் கிடைக்கும் , வார்டு கொன்சிலர் ஆவ சொல்லு


Nallavanaga Viruppam
டிச 09, 2024 14:41

படிப்புனா எவ்வளவு கிலோன்னு கேட்குற அடிமை கூட்டமே, நீங்கள் கூண்டோடு அழியும் நாள் வெகு விரைவில்.


Sudha
டிச 09, 2024 12:19

அதாவது.......அதாவது.....ஒண்ணுமே புரியலையே. டங்ஸ்டன் சுரங்கம் யாரால வரும்னு சண்டை இல்லையா? யாரால வராதுன்னு போட்டியா?அப்போ அந்த சுரங்கம் சும்மா தமாசுக்கு?


முக்கிய வீடியோ