உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதச்சார்பு கட்டடங்களுக்கு என்.ஓ.சி., விலக்கு; கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் அறிவிப்பால் கட்டுமான துறை அதிர்ச்சி

மதச்சார்பு கட்டடங்களுக்கு என்.ஓ.சி., விலக்கு; கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் அறிவிப்பால் கட்டுமான துறை அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

மதச்சார்பான கட்டடங்களுக்கு மாவட்ட கலெக்டரின் என்ஓசியை வலியுறுத்தாமல், திட்ட அனுமதி வழங்கப்படும் என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பால், பொது அமைதி பாதிக்கும் என, கட்டுமான துறையினர் கவலை தெரிவித்தனர்.தமிழகத்தில் பொது கட்டட விதிகள் அடிப்படையில், கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் மதம் பயன்பாட்டுக்கான கட்டடங்கள் கட்டும்போது, அது அமையும் இடத்தில், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு என்ன பிரச்னை ஏற்படும் என்று பார்க்க வேண்டும். அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் வகையிலான கட்டடங்களை, குறுகலான இடத்தில் கட்டக் கூடாது. பொது ஒழுங்கு பாதிக்கப்படுமா என்பதை பார்த்து, மாவட்ட கலெக்டர் தடையின்மை சான்றிதழ் அளிக்க வேண்டும்.கலெக்டரிடம் தடையின்மை சான்று பெறும் கட்டுப்பாடு இருக்கும்போதே, பல இடங்களில் மதச்சார்பு கட்டடங்களால் பிரச்னை ஏற்படுகிறது. சமீபத்திய உதாரணமாக, சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, குரோம்பேட்டை அஸ்தினாபுரம் அருகில், குறுகலான பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி, அடுக்குமாடி கட்டடத்துடன் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் என்பது உறுதியான நிலையில், இதை இடிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடிக்காமல் உள்ளனர். அதனால், அந்த அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில், வெவ்வேறு மதங்களை சேர்ந்த வழிபாட்டு இடங்கள் அருகருகே அமைகின்றன. ஒரு மதத்தினர் விழாக்களுக்கு அரசு அதிகபட்ச ஆதரவு அளிப்பதும், இன்னொரு மதத்தினரின் விழாக்களை முடக்கு வதும், மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில், பொது அமைதியை பாதிக்கும் இடங்களில், மதச்சார்பு கட்டடங்கள் அமைந்தால், மக்கள் மத்தியில் பிரச்னைகள் ஏற்படும். இந்நிலையில், கலெக்டரின் தடையின்மை சான்று இல்லாமல், மத கட்டடங்களை அனுமதிப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவிக நகரில் உள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை செயல்பட்டு கொண்டு இருக்கக்கூடிய, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டடம் விதிமுறைகள் 2019ன் படி உள்ள மதச்சார்பான கட்டடங்களுக்கு மாவட்ட கலெக்டரின் என்ஓசியை வலியுறுத்தாமல், திட்ட அனுமதி வழங்கப்படும். இந்த காலத்தில் திட்ட அனுமதி வேண்டி, விண்ணப்பித்து இருக்கும் மதச்சார்பான கட்டடங்களுக்கு இது பொருந்தும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தமிழக பிரிவு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: குடியிருப்புகள், அலுவலக வளாகங்கள் கட்டும்போது, பக்கவாட்டில் காலியிடம் விட வேண்டும்; எப்.எஸ்.ஐ., எனப்படும் தளப்பரப்பு குறியீட்டை பார்க்க வேண்டும்; வாகன நிறுத்துமிடம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், மதச்சார்பு அடிப்படையில், வழிபாட்டு கட்டடங்கள் கட்டும்போது, அதில் வாகன நிறுத்துமிடங்கள், பக்கவாட்டு காலியிடங்கள் விடப்படுவது இல்லை. இத்துடன், குறுகலான பகுதியில், அதிக உயரத்துக்கு கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தால், சம்பந்தமே இல்லாத மற்றவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, வழிபாட்டு கட்டடங்களுக்கு, என்.ஓ.சி., விலக்கு அளிக்கக் கூடாது. இது தவறான பார்வையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விதிமீறல்களை ஊக்குவிக்கும்

கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: பொது கட்டட விதிகள் வருவதற்கு முன்பிருந்தே, மத கட்டடங்கள் கட்ட, கலெக்டரிடம் தடையின்மை சான்று பெறுவது நடைமுறையில் உள்ளது. இந்த சான்று கேட்காமல் கட்டடங்களை அனுமதித்தால், அது மக்கள் மத்தியில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது சிறிய அளவிலான தெருக்களிலும், 'ஜெப வீடு' என்ற பெயரில், குடியிருப்புகளில் மத ரீதியான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.இது, அக்கம்பக்கத்தில் வசிப்போருக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. திருப்பரங்குன்றத்தில், ஒரு பிரிவினரின் கட்டடம் இருப்பதை காரணமாக கூறி, இன்னொரு பிரிவினர் தீபம் ஏற்றுவதை தடுத்துள்ளனர். இதனால், அங்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. முதல்வரின் தற்போதைய அறிவிப்பு தவறான நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டால், தமிழகம் முழுதும் ஒரு மதத்தினரின் ஆட்சேபம் காரணமாக, இன்னொரு மதத்தினரின் வழிபாடுகள் முடக்கப்பட வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 79 )

S Balakrishnan
டிச 25, 2025 22:42

மூன்று மாதத்தில் ஆட முடிந்த வரை ஆட முயற்சிப்பது தெரிகிறது. தவெக பிரித்த ஓட்டுக்களை எத்தனை ஜல்சாப் அரசியல் செய்தாலும் திரும்ப கிடைக்காது. சுனாமி அலையில் சிக்கிய திமுக கரை ஒதுங்கும் போது உயிர்ப்புடன் இருக்க முடியாது.


பேசும் தமிழன்
டிச 25, 2025 21:04

மாடல் ஆட்சிக்கு தோல்வி பயம் கண்ணில் தெரிவதால் .... இன்னும் என்னென்ன அறிவிப்பு வருமோ .... ஆளுக்கு இரண்டு கப்பல் தருகிறோம் .... இரண்டு ரயில் தருகிறோம் என்று சொன்னாலும் சொல்வார்கள் போல் தெரிகிறது.... நீட் தேர்வு ரத்து .... ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து .... ஆட்சிக்கு வந்து 4 1/2 ஆண்டுகள் ஆகி விட்டது....ஆனால் அந்த முதல் கையெழுத்தே இன்னும் போடவில்லை !!!


பேசும் தமிழன்
டிச 25, 2025 20:59

இதனால் முதல்வர் அவர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு என்ன சொல்ல வருகிறார் ..... எங்கே வேண்டுமானாலும் ஆக்கிரமித்து சர்ச் மற்றும் மசூதி கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறுவது போல் உள்ளது .


Veluvenkatesh
டிச 25, 2025 20:56

கோமாளிகள் ராஜ்ஜியத்தில் ஏதுங்க சட்டமும் நெறிமுறையும்? ஒரே கூத்துதான் போங்க...


chinnamanibalan
டிச 25, 2025 20:07

தற்போது மாவட்ட ஆட்சியரிடம் தடை இல்லா சான்று பெற வேண்டும் என்று இருக்கும் போதே எத்தனை விதி மீறல்கள் நடைபெறுகிறது என்பதை அரசு அறியும். இந்நிலையில் வாக்கு வங்கி அரசியலுக்காக இது போன்ற வரம்பு மீறிய சலுகைகளை அளிப்பது, தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கும் கேடு விளைவிக்கும்.


விஸ்வநாத் கும்பகோணம்
டிச 25, 2025 19:25

முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே ஆட்சி நடத்துகிறார். இவர் பதவியேற்ற போது எடுத்துக் கொண்ட எல்லாருக்குமான முதலமைச்சராக இருப்பேன் என்ற சத்தியப்பிரமாணத்தை மீறிவிட்டார். இந்த ஆட்சியை மத்திய அரசு ஏன் கலைக்கக்கூடாது?


Nagarajan S
டிச 25, 2025 19:25

எப்படியாவது சிறுபான்மையினர் ஓட்டுக்களை அறுவடை செய்ய இந்த திராவிட மாடல் அரசு பல சலுகைகளை அளிக்கும். இந்த அறிவிப்பால் இனி தெருவிற்கொரு தேவாலயம், ஜெபவீடு ஏற்படும். இதனால் இந்து, முஸ்லீம் கிருத்துவர் மதக்கலவரம் ஏற்படும். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.


mdg mdg
டிச 25, 2025 19:19

பாரதிய ஜனதா தான் இத எடுக்குறதுக்கு சரியான ஆளு. அதிமுக கழுவுற மீன்ல நழுவுகிற மீன் மாதிரி போயிருவாங்க. ஆகையினால் திராவிட கட்சியை நம்பி இனிமேல் இந்துக்கள் யாரும் ஓட்டு போடாதீங்க.அன்பான பாரதிய ஜனதா வழக்கறிஞர்களே நீதிமன்றம் மூலம் இந்த இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டி வழக்கு தொடுக்க வேண்டும் என் பணிவான வேண்டுகோள்.


kumarkv
டிச 25, 2025 18:50

அழுகின மூளையிலிருந்து இந்த மாதிரியான அணைதான் வரும்


Raju Ramasamy
டிச 25, 2025 18:49

தமிழ் துரோகிகளை நாடு கடத்த வேண்டும் .


சமீபத்திய செய்தி