உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தகிக்கும் வெயில்: கட்டுமான தொழிலாளர் வேலை நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

தகிக்கும் வெயில்: கட்டுமான தொழிலாளர் வேலை நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மனித உடலின் சராசரி வெப்ப நிலை, 37 டிகிரி செல்ஷியஸ். சுற்றுப்புற வெப்பநிலை, சராசரியை விட அதிகரிக்கும்போது, உடலில் வியர்வை மற்றும் தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் போன்றவை வழியே, அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி, மனித உடல் சராசரி வெப்பநிலைக்கு வருகிறது.அதிக வியர்வை வெளியேறும்போது, உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, விவசாயிகள், கட்டுமானப் பணியாளர்கள் என, திறந்தவெளியில் பணியாற்றுவோருக்கான பணி நேரத்தை மாற்றி அமைக்க, கட்டுமான நிறுவனங்களுக்கு, விவசாயிகளுக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என, பொது சுகாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:

கோடைக்காலம் துவங்கி இருப்பதால், வரும் காலங்களில் வெப்ப அலை வீசலாம். எனவே, தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீர் பருக வேண்டும். மோர், அரிசி கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ்., கரைசல் ஆகியவற்றை பருகலாம்.கட்டுமான நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு, தங்கள் பணி நேரத்தை மாற்றிக்கொள்ள, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். குறிப்பாக, காலை 8:00 முதல் 11:00 மணி வரை, பிற்பகல் வெயிலின் தன்மைக்கு ஏற்ப, 2:00 மணிக்கு மேல் என்ற அளவில் பணியாளர்களுக்கான பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.நண்பகல் வெயில் நேரத்தில், 3 மணி நேரம், அதிக உடல் உழைப்பில் ஈடுபடும், கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயிகள், மூட்டை துாக்கும் தொழிலாளிகள் உள்ளிட்டோருக்கு, கட்டாயம் ஓய்வு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V. Kanagaraj
மார் 07, 2025 14:54

நீங்க வயலில் இறங்கி ஒரு மணி நேரம் வேலை செய்து பாருங்கள். அந்த கஷ்டம் தெரியும். எதோ அலுவலகத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம்


orange தமிழன்
மார் 07, 2025 10:59

மிகவும் சரியாக கூறினீர்கள்......அப்படி என்றால் ஏன் அந்த வசதிகளை நம்மால் கொடுக்க இயலாது....இதற்கு கட்டுமான கம்பெனிகள் வசதி செய்து தரவேண்டும்.....அரசாங்கம் கடும் சட்டம் இயற்ற வேண்டும்......( நேற்று நான் நேரில் பார்த்த ஒரு நிகழ்ச்சி மெட்ரோ கட்டுமான பணியிடத்தில் அங்கு வேலை செய்யும் ஒரு தொழிலாளி ரெஸ்ட் ரூம் இல்லாத காரணத்தால் சாலை ஓரம் .......)


Purchase Manager
மார் 07, 2025 09:18

அரபு நாடுகளில் அதிக வெப்பமுள்ள நேரமாக கருதப்படும் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை மதியம் 12.30pm முதல் 3pm வரை ஓய்வு நேரம் உண்டு. மேலும் அங்கு இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு கூடாரங்கள் மற்றும் மின்சாதன வசதி உண்டு. ஆதலால் அனைத்திற்கும் ஏதாவது ஒரு நாட்டுடன் நமது நாட்டை ஒப்பீடு செய்யாதீர்கள்


Kalyanaraman
மார் 07, 2025 08:02

அரேபிய நாடுகளில் 50 டிகிரி தாண்டுவது சகஜமான ஒன்று. ஆனால் வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நம்ம ஊருக்கு என்றால் தான் எல்லா சட்டங்களும் வரும்.


Minimole P C
மார் 07, 2025 07:54

Very good recommendation. India is a tropical country, very nearer to equatorial line and when sun comes to northern hemishpereuttrayanam, heat waves come from inner land amd reaches its peak during dog daysAgni naksthiram. Therefore working timings have to be adopted accordingly. That is the reason those days farmers used to work since early morning until 11.00am and 3.00 pm to night. Govt shall instruct the concerned people to change the working timing for outside workers.


orange தமிழன்
மார் 07, 2025 07:27

இந்த அடிப்படை தேவை மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கருதி அமீரகத்தில் உள்ளது போல மதியம் 12.30 - 2.30 (கோடை காலத்தில்)அல்லது 3pm வரை கட்டாயமாக திறந்த வெளியில் கட்டுமான மற்றும் சாலை பணியாளர்கள் வேலை செய்ய அனுமதிக்க கூடாது..... மீறும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்....


புதிய வீடியோ