உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊத்துக்கோட்டை அறிவுசார் நகரில் ரூ.100 கோடியில் கட்டமைப்பு பணிகள்

ஊத்துக்கோட்டை அறிவுசார் நகரில் ரூ.100 கோடியில் கட்டமைப்பு பணிகள்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் உருவாக்கப்பட உள்ள அறிவுசார் நகரில், 100 கோடி ரூபாயில் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், விடுதி, ஆராய்ச்சி மையம் போன்றவற்றை, பொது - தனியார் கூட்டு முயற்சியில் செயல்படு த்தவும், 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 870 ஏக்கர் தேசிய, சர்வதேச முன்னணி கல்வி நிறுவனங்கள், அறிவுசார்ந்த தொழில் நிறுவனங்கள் இணைந்து, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியின் ஒருங் கிணைப்பை உருவாக்க, திருவள் ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் செங்காத்துக்குளம், மேல்மலிகைப்பட்டு கிராமங்களில், 870 ஏக்கரில் தமிழக அறிவுசார் நகரத்தை, டிட்கோ நிறுவனம் உருவாக்க உள்ளது. அங்கு, சர்வதேச, தேசிய பல்கலைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் கிளை, அலுவலகம், வளாகம் இடம் பெறும். அதன்படி, அறிவுசார் நகரில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய மண்டலங்கள், விளையாட்டு வசதி, குடியிருப்பு, வணிகப் பகுதி போன்றவை இடம் பெறும். அங்கு தொழில் துவங்க தேசிய, சர்வதேச பல்கலை மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுடன், டிட்கோ அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். இதற்காக முதற் கட்டமாக, 415 ஏக்கரில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சாலை, குடிநீர் வழங்கல், கழிவுநீர் வெளியேற்றம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை, 100 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, டிட்கோவுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கூட்டு முயற்சி இது தவிர, அறிவுசார் நகரில் இடம்பெறும் அறிவுசார் கோபுரமான பன்னடுக்கு கட்டடம், 'ஆர் அண்டு டி' எனப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், விடுதி போன்றவை, பி.பி.பி., எனப்படும் பொது - தனியார் கூட்டு முயற்சியில் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, விரைவில், 'டெண்டர்' கோருவதற்கான பணியில், டிட்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ