உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டாய கல்வி உரிமை சட்டம்: அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு

கட்டாய கல்வி உரிமை சட்டம்: அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு

கோவை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறாததை கண்டித்து, தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 'கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, 'சமக்ரா சிக் ஷா' திட்டத்திலிருந்து நீக்குவதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.'மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கவில்லை என்பதை காரணமாக கூறாமல், இந்த சட்டத்தின் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கான நிதியை மாநில அரசே வழங்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், பள்ளிகள் துவங்கி ஒரு மாதம் முடிவடையும் நிலையில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறாததை எதிர்த்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈசுவரன், தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றும், மாநில அரசே நிதி ஒதுக்கி, திட்டம் செயல்பட்டதாக அரசு கூறிவருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. எனினும், பள்ளிகள் துவங்கி ஒரு மாதமாகும் நிலையில், இன்னும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இது, ஏழை மாணவர்களின் கல்வியை நேரடியாக பாதிக்கும் ஒரு நடவடிக்கை.மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயல் இது. தமிழக அரசின் மெத்தனப்போக்கை இது வெளிக்காட்டுகிறது. அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஜூன் 23, 2025 12:16

அரசுப் பள்ளிகளில் மாணவர்களே இல்லாமல் காற்றடிக்கும் நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏழைகளின் வரிப்பணத்தில் பீஸ் கட்டுவது அநியாயம்.


Suresh Kumar
ஜூன் 23, 2025 11:31

ப்ளீஸ் ஓபன் பண்ணுங்க நாங்க ரடீ காக வெயிட் pandrom


Suresh Kumar
ஜூன் 23, 2025 11:28

Please pannunga nanga rte kaga weight pandrom


Suresh Kumar
ஜூன் 23, 2025 11:27

ப்ளீஸ் ஓபன் பண்ணுங்க ரைட் டு எடுகேஷன் காக வெயிட் பன்றோம் எங்க பிள்ளை ஸ்கூல் ஓபன் ஒன்னு month agigum nanga seravillai rte kaga weight ing


G Mahalingam
ஜூன் 23, 2025 10:03

25 சதவீதம் சேர்க்கை கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் பாணியில் சேர்த்து இருப்பார்கள். மத்திய அரசு நிதி கொடுக்க வில்லை என்று சொல்ல வேண்டியது. தமிழ் நாடுதான் பொருளாதாரத்தில் முதலிடம் என்று உருட்ட வேண்டியது. பொருளாதாரத்தில் முதலிடம் என்றால் எதற்கு மத்திய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டும்.


Chanemougam Ramachandirane
ஜூன் 23, 2025 09:17

நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினால் எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும் படி தீர்ப்பு வழங்கணும் புதுவையை சுற்றி உள்ள மாநிலங்கள் அனைத்து மத்திய அரசின் சட்டங்களை நிறைவேற்றி உள்ளது அனால் புதுவை அரசு எந்த மத்திய அரசின் சட்டத்தையும் இயற்றாமல் மக்களுக்கு சேவை அளிக்காமல் செயல்படுகிறது அதில் கல்வி உரிமை சட்டமும் அடங்கும் காரனும் தேர்தெடுத்த நபர்கள் அனைவரும் தனியார் கல்வி மையத்தை ஆதரித்தும் தாங்களும் நடத்துவதால் இட ஒதுக்கீட்டை சட்டத்தை நிறைவேற்றவில்லை இதே போல் லோகிபோல் லோக் அயுக்த சட்டத்தை இயற்ற உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் மத்திய அரசை கேட்டு இயற்றனும் என்று சொல்லி 5 வருடம் ஆகிறது இதுவரை தலைமை செயலர் சட்ட செயலர் சட்டசபை குழு நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்தது என்று நிர்வாகியாகிய கவர்னர் வெள்ளை அறிக்கை வெளியிடனும் அல்லது சட்டத்தை அரசு கஸிட்டில் வெளியிட்டு ஆணையம் செயல்படனும் அதுதான் இவர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிப்பதாகும்


rama adhavan
ஜூன் 23, 2025 08:20

இலவச அரிசி, இலவச பஸ், இலவச இனாம் செலவழிக்க நம் பணம் அரசிடம் உள்ளது, அதை நோக்கும்போது இந்த ஒதுக்கீட்டில் கல்விக்கான செலவு மிகக் குறைவு. எனவே இதற்கும் அரசு நம் பணத்தை இந்த அரசு செலவு செய்யலாமே?


Pandi Muni
ஜூன் 23, 2025 08:18

ஐயோ அப்பா இந்த டாஸ்மாக்கினால ரொம்ப தலைய வலிக்குதுப்பா


Svs Yaadum oore
ஜூன் 23, 2025 06:58

ராமசாமி மண்ணில் , சமூக நீதி மத சார்பின்மை என்று ஏற்கனவே விடியல் திராவிடனுங்க முன்னேறிய மாநிலமாக மாற்றி விட்ட தமிழ் நாட்டில் , 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லையாம் .....இந்த 25 சதவீத இடஒதுக்கீடு சமூக நீதி சிறுபான்மை தனியார் பள்ளிகளில் அமல்படுத்த படுகிறதா ??.....ஜாதி வாரி சமூக நீதி இட ஒதுக்கீடு அரசு நீதி கொடுக்கும் சிறுபான்மை பள்ளிகளில் உள்ளதா ??....இது பற்றி சமூக நீதி விடியல் திராவிடனுங்க தெளிவு படுத்துவார்கள் ....


vadivelu
ஜூன் 23, 2025 06:46

அப்பா எல்லாத்துக்கும் மத்திய ராசுதான் இத்தனை வருடங்களாக நிதி கொடுத்துவ வந்ததா..


திகழ்ஓவியன்
ஜூன் 23, 2025 08:08

ஆமா நாம் தான் இந்தியாவில் இரண்டாவது அதிக நிதி கொடுத்த மாநிலம் ஆனால் நமக்கு அவர்கள் நாமம் போட்டு திருப்பி தருவது 29 தான் எப்படி சூப்பர் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை