உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இனி தனி சின்னத்தில் போட்டி: ம.தி.மு.க.,

 இனி தனி சின்னத்தில் போட்டி: ம.தி.மு.க.,

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை நேற்று அளித்த பேட்டி: தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால், தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை தவிர்க்க, காங்., -- கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், த.வெ.க., அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தி.மு.க., - -அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைத்தால், மக்கள் ஏற்க மாட்டார்கள். இனி வரும் அனைத்து தேர்தல்களிலும், ம.தி.மு.க.,வின் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இது குறித்து கட்சியின் பொதுக்குழுவில் பேசி முடிவெடுப்பேன். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !