உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தொடரும் கொலைகள்: தலைவர்கள் கண்டனம்

 தொடரும் கொலைகள்: தலைவர்கள் கண்டனம்

தமிழகத்தில் நடந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கொலை சம்பவங்கள் குறித்து, தி.மு.க., - அ.தி.மு.க., - அ.ம.மு.க., கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதன் விபரம்: தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: கோவை இருகூர் அருகே, பள்ளி சிறுவன் நண்பர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள செய்தி, மனதை பதைபதைக்க வைக்கிறது. பெற்றோர் தம் பிள்ளைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகளை கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம் தான் நல்வழிப்படுத்த வேண்டும். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுபோல், இந்த காவல் துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: புதிய அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகளின் எண்ணிக்கை பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை