உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றணும்: அண்ணாமலை

ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றணும்: அண்ணாமலை

சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:தமிழகம் முழுதும் மாநகரம், நகராட்சி, பேரூராட்சி என, மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளர்கள்.கடந்த, 20 ஆண்டுகளாக அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பல ஆண்டுகளாக குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு, ஒப்பந்தப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை.ஒரே ஒரு நாள் குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால், அதனால் பாதிக்கப்பட போவது, ஒட்டுமொத்த தமிழக மக்களே. குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, தி.மு.க., அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gurumoorthy
ஜூலை 16, 2025 17:39

எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது திரு ஸ்டாலினும் திமுகவினரும் இப்படித்தான் எல்லாவற்றிற்கும் பொன்னார்கள். முன்னாள் காவல் அதிகாரி தமிழக அரசின் நிதி நிலவரம் தெரிந்தும் இப்படி பேசுவது பின்னால் இவர்கள் ஆட்சிக்கு வரும் பொழுது சங்கடத்தை தரும் என்று உணர்ந்து பேச வேண்டும்


Mario
ஜூலை 16, 2025 12:23

முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 16, 2025 13:08

அவர் கவுன்சிலர் ஆகிறாரோ இல்லையோ.... நீங்கள் அவரை குறை சொல்ல 1% சதவிகிதமாவது தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்....!!!


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 16, 2025 11:15

இப்போது உடனடியா தமிழகம் முன்னேற தலைவருக்கு சிலைவைக்கணும், கடலில் பேணா வைக்கணும் , நாங்கள் நல்லாட்சி செய்ததால் வீடுவீடாக எங்களை கூப்பிட்டு பாராட்டுகின்றனர் .. அதற்கு போகணும் .. கழகத்தின் குற்றவாளிகள் அணியினர் செய்யும் சேட்டைகளுக்கு முட்டு கொடுக்கக்கணும்.. நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து வாங்கணும்..சட்டப்போர் நடத்தனும் ...அப்புறம் ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கையை பற்றி நேரமிருந்தால் நங்கள் இரும்புக்கரம் கொண்டு பரிசீலிக்கலாம் .. எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சியை பற்றி அண்ணாமலை பேச பேசுவதற்கு அருகதை இல்லை ...


முக்கிய வீடியோ