உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவி மீதான பாலியல் தாக்குதலில் முன்னுக்கு பின் முரண்: அண்ணாமலை

மாணவி மீதான பாலியல் தாக்குதலில் முன்னுக்கு பின் முரண்: அண்ணாமலை

சென்னை : 'வழக்கை திசை திருப்ப தொடர்ந்து முயற்சி வரும் தி.மு.க., அரசை கண்டிக்க, அனைத்து கட்சியினரும் முன்வர வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'ஒரு பெண் கல்லுாரிக்குள் நுழைந்தால், அது சமூக புரட்சி' என்று நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். கல்லுாரிக்குள் நுழைந்து, அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை, தங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல், ஒரு ஆட்சியை நடத்தி கொண்டிருக்கும்போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வரே?ஒரு பெண் கல்லுாரிக்குள் நுழைந்தால், அது சமூக புரட்சி; அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பைக்கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான், இந்த திராவிட 'டிசாஸ்டர் மாடல்!'அண்ணா பல்கலை மாணவி மீது பாலியல் தாக்குதல் குறித்து முன்னுக்கு பின் முரணமாக, காவல் துறையும், அமைச்சர்களும் பேசி வருகின்றனர். தி.மு.க., அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்து, தமிழக பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. த.வெ.க., தலைவர் விஜயும், தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, கவர்னரை சந்தித்து பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசை திருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் தி.மு.க., அரசை கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்து கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ