உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதிக்கு வாழ்த்து விளம்பரத்தால் சர்ச்சை: கலெக்டர் பெயரில் தி.மு.க.,வினர் சில்மிஷம்

உதயநிதிக்கு வாழ்த்து விளம்பரத்தால் சர்ச்சை: கலெக்டர் பெயரில் தி.மு.க.,வினர் சில்மிஷம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் பெயர், போட்டோ மற்றும் அதிகாரிகள் பெயர்களுடன், மாலை நாளிதழ் ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா வாழ்த்து விளம்பரம், இரு நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இது, அதிகாரிகள் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, கடந்த 27ல் மாலை நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியானது.விசாரணைஅதில், புதுக்கோட்டை கலெக்டர் அருணா பெயர் மற்றும் அவரது போட்டோ, விராலிமலை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் உட்பட அரசு அதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து, புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்தபோது, 'புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் வடுகப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி சார்பில், துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியான விளம்பரத்தில், அரசியல் கட்சி தலைவர்கள் புகைப்படங்களோடு, கலெக்டர் அருணாவின் புகைப்படமும் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது. அதிகாரிகள் சிலருடைய பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பான விசாரணை நடக்கிறது. 'அனைத்துக் கட்சியினருக்கும் பொதுவாக நடக்க வேண்டிய அதிகாரிகளின் பெயரையும், புகைப்படத்தையும் அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது போல விளம்பரம் வெளியிட்டால், அதிகாரிகள் அரசியல் சாயத்தோடு நடந்து கொள்வது போல ஆகிறது. 'எதிர்காலத்தில், வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தால், குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை அக்கட்சியினர் பழிவாங்கக் கூடும். அதோடு, அரசு ஊழியர் நடத்தை விதிகள் படியும் இது தவறாகும். முத்திரை'இப்படியொரு நிகழ்வை அரசு ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்து விட்டால், எதிர்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட தி.மு.க.,வினரோடு வம்புக்குச் சென்றால், ஆளுங்கட்சிக்கு எதிரானவர்கள் என அரசு அதிகாரிகளுக்கு இப்போதே முத்திரை விழும்.'இதனால், கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என்ன செய்வது என புரியாமல் கடும் நெருக்கடியில் தவிக்கின்றனர்,' என்றனர். இது பற்றி விளக்கம் கேட்க, கலெக்டர் அருணாவை போனில் தொடர்பு கொண்டோம். போனை எடுத்து பேசிய கலெக்டரின் உதவியாளர், ''இப்படியொரு விளம்பரம் வெளியானது கலெக்டருக்கே தெரியாது. எவ்வித அனுமதியும் இன்றி, அவருடைய பெயரையும், புகைப்படத்தையும் அரசியல் தொடர்புடைய விளம்பரத்தில் பயன்படுத்தி உள்ளனர். அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

சுந்தரம் விஸ்வநாதன்
நவ 30, 2024 17:33

எனக்கென்னவோ முதல்வரின் மேலிடம்தான் கலெக்டர் மூலமா இந்த பதாகையை வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். கட்சி உறுப்பினர் என்பது வெளியே தெரிந்ததால் கலெக்டர் இப்போது பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 30, 2024 14:34

அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று நீங்கள் ஜஹாங்கிர் பாஷாவிடம் ஆலோசனை கேட்டு அதன் படி நடக்கவும். உங்களுக்கும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. தவறு விட்டு விட வேண்டாம்.


sundaran manogaran
நவ 30, 2024 13:53

மாவட்ட ஆட்சியர் அருணா தி.மு.க.வின் செல்லப் பிள்ளைதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் இதுபோன்ற விதிமீறல்கள் எல்லாம் நடக்கும்.... ஆனால் வாக்காளர்களுக்கு ஐநூறு நிச்சயம்... அச்சம் வேண்டாம்...


P.Sekaran
நவ 30, 2024 10:57

இந்த செயலை எதிர் கட்சி செய்தால் இப்பொழுதே கைது நடவடிக்கையில் இறங்கியிருப்பார்கள். இவர்கள் இப்பொழுதுதன் யோசிக்கிறார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 30, 2024 10:49

அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது போல விளம்பரம் வெளியிட்டால், அதிகாரிகள் அரசியல் சாயத்தோடு நடந்து கொள்வது போல ஆகிறது. உண்மையை சொன்னால் என்ன தவறு. இன்றைய அதிகாரிகளில் ஒன்றிரண்டு பேர்களைத்தவிர பெரும்பாலான அரசு அதிகாரிகளூம் ஊழியர்களும் திமுக உறுப்பினர்கள் போலத்தானே செயல்படுகின்றனர். இல்லையென்று நிரூபிக்க முடியுமா? உதாரணம் சமீபத்திய இசை வாணி மற்றும் இர்பான் செயல்கள். இவர்கள் செய்தது தவறு என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையே


theruvasagan
நவ 30, 2024 10:21

உபிஸ்களுக்கு இருக்கிற பொது அறிவு உலக பிரசித்தம். கலெக்டர் கமிஷனர் யாராக இருந்தாலும் அவர்களும் தங்களை மாதிரி 200 ஓவாவுக்கு வேலை செய்பவர்கள் என்கிற நினைப்பில் உள்ளவர்கள். தொண்டனுக்கும் அதிகாரிக்கும் நடுவில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு இருந்தால் எதற்கு உபியாகவே இருப்பார்கள்.


Bhaskaran
நவ 30, 2024 09:46

அந்த அம்மாவுக்கு தெரியாமல் விஷயம் நடந்திருக்கும்னு நினைத்தால் நம்மளை விட பைத்தியக்காரனுக உலகத்தில்எவரும் இல்லை


KUMARAN TRADERS
நவ 30, 2024 08:47

கலெக்ட்க்கு தெரியாம விளம்பரம் கொடுத்திருந்தால் என்னது என்ன செய்கிறார் கலெக்டர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை கொடுத்தவன் செத்த பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று இருக்கிறாரா இதெல்லாம் இப்பதான் தெரியுதோ டி எம் கே காரன் எல்லாத்தையும் மாற்றுவான்


Barakat Ali
நவ 30, 2024 07:59

அராஜகத்தின் எல்லை .........


T SIVAKUMAR
நவ 30, 2024 07:17

கோர்ட்ல வழக்கு தொடர்ந்து ஒரு ஐந்து வருட தண்டனையாவது அத்தனைபேருக்கும் வழங்க வேண்டும்.


முக்கிய வீடியோ