உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை

முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவியிடம் பட்டம் வாங்காமல், அவரை புறக்கணித்து, துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுச் சென்ற தி.மு.க., பிரமுகரின் மனைவியால் சர்ச்சை எழுந்தது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, 32வது பட்டமளிப்பு விழா, நேற்று திருநெல்வேலி அபிஷேகபட்டியில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்தது. கவர்னர் ரவி பட்டங்களை வழங்கினார். இந்திய புவி காந்தவியல் மைய இயக்குனர் டிம்ரி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். பல்கலை துணைவேந்தர் சந்திரசேகர் பங்கேற்றார். விழாவில், நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, முனைவர் பட்டத்தை கவர்னர் ரவியிடம் இருந்து வாங்க மறுத்து, துணைவேந்தர் சந்திரசேகரிடம் இருந்து பெற்றார். இது பல்கலை பட்டமளிப்பு விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மைக்ரோ பைனான்ஸ் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற ஜீன் ஜோசப், தான் முனைவர் பட்டம் பெற்ற நிலையிலும், மேடை நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டது, அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. இவரது கணவர் ராஜன், நாகர்கோவில் மாநகர தி.மு.க., துணை செயலராக உள்ளார். ஜீன் ஜோசப் கூறுகையில், ''கவர்னர் ரவி, தமிழுக்கும், தமிழகத்திற்கும் எதுவும் செய்யவில்லை. எனவே, துணைவேந்தரிடம் பட்டம் பெற்றேன்,” என, தன்னுடைய புறக்கணிப்பிற்கு புது விளக்கமும் அளித்தார். தி.மு.க., பிரமுகரின் மனைவியான ஜீன் ஜோசப், அரசியல் ரீதியாக, கவர்னர் ரவியை புறக்கணித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.,வின் கீழ்த்தரமான அரசியல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர தி.மு.க., துணை செயலர் ராஜன் என்பவரின் மனைவி ஜீன் ஜோசப், கவர்னர் கையால் பட்டம் பெற மாட்டேன் என கூறியிருக்கிறார். கட்சியில் பெயர் வாங்க, தி.மு.க.,வினர் காலம் காலமாக அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. கீழ்த்தரமான அரசியலை, கல்வி நிலையங்களில் வைத்து கொள்ள கூடாது என, தன் கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். தமிழகத்தில், தி.மு.க.,வை பிடிக்காத மக்களே அதிகம். அவர்களும் இதேபோன்று நடந்து கொண்டால், ஸ்டாலின் தன் முகத்தை எங்கே கொண்டு வைத்து கொள்வார்? - அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 407 )

Jayaraman Ramaswamy
ஆக 29, 2025 15:38

இவர்கள் எல்லாம் படித்துதான் பட்டம் வாங்கினார்களா அல்லது தெரியவில்லை


Venkateswaran Rajaram
ஆக 22, 2025 17:59

இவர் ஒரு அரசியல் வாதியின் வாரிசு அல்லவா , அடிமைகளிடம் இருந்துதான் பட்டம் வாங்குவர் ..கவர்னர் அதற்க்கு தகுதியானவர் இல்லை


M Ramachandran
ஆக 20, 2025 12:50

கட்சிக்காக தான் பலிகடா வைக்கலாம். தன் மனைவி பெண் குடும்பத்தை சேர்ந்தவர்களை போன்றவர்களை அடிமைகள் என்று நினைத்து அரசியல் என்ற தீய வழியில் தள்ளுபவன் குடும்ப தலைவனாக இருக்கும் தகுதியை இழக்கிறான். அண்ணா பல்கலை நிகழ்வு அவனுக்கு பாடம் புகட்டி இருக்க வேண்டும்.இருந்தும் அவனுக்கு புத்தி தெளிவில்லை.பெண்ணாவது அந்த நிகழ்வாய்ய்ய எண்ணி பார்த்திருக்க வேண்டும்.இந்த செயல் கட்சிக்குள்புகுந்து கொண்டு தீய செயல்செய்பவனுக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கும். அது இவன் குடும்பத்தை பாதிக்கும் போது அவன் நம்பிய கட்சியெ கை கொடுக்காது கடந்து போகும். ஆகையினால் அறிவுடன் செயல்படுவது நன்று.


M Ramachandran
ஆக 20, 2025 12:40

சட்டத்தின் சீர்குலைவு இந்த தைர்யத்தை அந்த பெண்ணுக்கு கொடுத்தது. இதன் விளைவை எதிர்பார்க்கலாம். அண்ணா பல்கலை மாணவியின் யோசிக்காத நிலையேற்பட்டால் பதில் சொல்ல முடியாது. சொந்த நலனுக்காக அவன் சார்ந்த கட்சியின் சுயநலவாதிக்கும் பலிகொடுக்க சொம்படிக்கும் வேலை செய்த அந்த வேலை அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் தீராத தலைவலி அவன் சார்ந்த கட்சியினரால் விரைவில் யேற்படும்.


K V Ramadoss
ஆக 20, 2025 11:48

அவர் வாங்கியதாக சொல்லப்படும் முனைவர் பட்டம் செல்லாது


joe
ஆக 19, 2025 18:07

தான் ஒரு சுயநலவாதி என நிரூபித்துவிட்டார்,இப்பவே இப்படின்னா ......?


Ethiraj
ஆக 18, 2025 19:11

Governor is not CM.or secretary to govt. He has no role in running govt. This basic knowledge she dies not have. Any pro outside campus not inside. Immature girl.


sankar
ஆக 18, 2025 08:35

கோவெர்னர் கையால் பெரும் பெருமையை இழந்துவிட்டார் . ஒரு வேலை கருக்கா வினோத் கையால் கொடுத்தால் வாங்கி இருப்பாரோ ?????


Prabha Karan
ஆக 17, 2025 04:58

சுய மரியாதை உள்ள பெண்மணி.


Lkanth
ஆக 16, 2025 21:25

திராவிட மாடல்


புதிய வீடியோ