உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு சாதகமில்லாததால் கூட்டுறவு தேர்தல் தள்ளிவைப்பு

தி.மு.க.,வுக்கு சாதகமில்லாததால் கூட்டுறவு தேர்தல் தள்ளிவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தற்போதைய அரசியல் சூழ்நிலை தி.மு.க.,வுக்கு சாதகமாக இல்லை' என, உளவுத்துறை கொடுத்துள்ள தகவலால், கூட்டுறவு சங்க தேர்தலை, 2026 சட்டசபை தேர்தலுக்கு பின் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்களுக்கு 2018-ல் தேர்தல் நடந்தது; 2023ல் மீண்டும் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்; இதுவரை நடத்தப்படவில்லை. அதற்கு, 2018ல் கூட்டுறவு சங்க தேர்தலை சரியாக நடத்தாததே காரணம் என்று, கூறப்பட்டது.உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட, கூட்டுறவு வழக்குகளுக்கான மண்டல குழுக்கள் ஆகியவற்றில், பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதன் மீதான விசாரணையில், கூட்டுறவு சங்கங்களின் வாக்காளர்களை ஆய்வு செய்து, முறைப்படுத்த உத்தரவிடப்பட்டது.தமிழ்நாடு கூட்டுறவு தேர்தல் ஆணையம் ஆய்வு செய்த போது, கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை, 2.23 கோடியாக இருந்தது. இறந்த உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில், மீண்டும் உறுப்பினர்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில், 44 லட்சம் உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். அதன்பின், 2023ல் புதிய உறுப்பினர் பட்டியல் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை.இந்நிலையில், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், 'கூட்டுறவு சங்கங்களில் போலி உறுப்பினர்களை நீக்கி விட்டு, உண்மையான உறுப்பினர்களை சேர்க்கும் பணி முடிந்ததும், கூட்டுறவு தேர்தல் நடத்தப்படும்' என்று கூறியிருந்தார்.இதுதொடர்பாக, கூட்டுறவு சங்க அதிகாரிகள் சிலரிடம் விசாரித்த போது, 'கூட்டுறவு சங்க உறுப்பினர் பட்டியல், 2023ல் தயாராகி விட்டது.இப்போது தேர்தல் நடத்த தமிழக அரசு தயாராக இல்லை. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, தி.மு.க., அரசுக்கு சாதகமாக இல்லை என்று உளவுத்துறை கொடுத்ததகவலால், கூட்டுறவு தேர்தல் தள்ளி போடப்பட்டுள்ளது' என்றனர்.கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகிகள் கூறுகையில், 'இப்போது கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தினால், தி.மு.க.,வுக்கு சறுக்கல் ஏற்படும். அதனால், நடத்தாமல் உள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ramesh
ஏப் 20, 2025 10:44

2024 தேர்தலிலே அணைத்து தொகுதிகளையும் dmk கூட்டணி தான் கைபற்றியது . பிறகு எப்படி 2023 இல் இருந்து சாதகமற்ற சூழ்நிலை உருவானது .


ஆரூர் ரங்
ஏப் 20, 2025 11:21

1980 பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. சில மாதங்கள் கழித்து நடந்த சட்டசபைத் தேர்தலில் அதே கூட்டணி அதிமுக விடம் தோற்றது வரலாறு.


அப்பாவி
ஏப் 20, 2025 09:23

டுபாக்கூர் சங்கங்களே தேவையில்லை.


Svs Yaadum oore
ஏப் 20, 2025 07:45

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, விடியல் அரசுக்கு சாதகமாக இல்லை என்று உளவுத்துறை கொடுத்ததகவலால், கூட்டுறவு தேர்தல் தள்ளி போடப்பட்டுள்ளது என்றனராம் .....ஆனால் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத ஆட்சி என்று பேசறாரு ....எதாவது விபரம் தெரிந்துதான் பேசறரரா .....தேர்தல் நடத்தவே இப்படி உதறல் ...


சமீபத்திய செய்தி