உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழல்தான் உங்கள் கூட்டணியின் அரசியலமைப்பு; முதல்வருக்கு அண்ணாமலை பதில்

ஊழல்தான் உங்கள் கூட்டணியின் அரசியலமைப்பு; முதல்வருக்கு அண்ணாமலை பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குற்ற வழக்குகளில் சிக்கும் முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜ முன்னாள் மாநிலதலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதல் அமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவு: வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து கீழ் கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சரை, இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைத்துக் கொண்ட உங்களின் வெட்கமில்லாத அரசை விட, கருப்பான அல்லது அவமானகரமானது வேறு எதுவும் இல்லை.சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, உங்களின் வெட்கமில்லாத அரசு, செந்தில் பாலாஜியை மீண்டும் அவர் முன்னர் வகித்த அதே அமைச்சர் பொறுப்பை வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்துதான் அந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் விசாரணையில், உங்கள் அரசின் தாமதப்படுத்தும் முயற்சிகள் குறித்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியதை நாங்கள் மீண்டும் சொல்ல வேண்டுமா? இன்டி கூட்டணியின் இன்னொரு ஊழல் வீரர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறை வைக்கப்பட்டிருந்தும், பல மாதங்களாக முதல்வர் பதவியைப் பிடித்துக் கொண்டிருந்தார்.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) ஐ உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த போது, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தண்டனை பெற உள்ள தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாக்க, அவசரத்தில் ஒரு ஆணையை கொண்டு வந்தது. இன்று கூட்டணியின் பெயர் மாறிவிட்டது, ஆனால் அதன் குறிக்கோள் அப்படியே உள்ளது.130வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு நீங்கள் எதிர்ப்பது எங்களுக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படுத்தவில்லை. ஊழல் தான் உங்கள் கூட்டணியால் உண்மையில் பின்பற்றப்படும் ஒரே அரசியலமைப்பு, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

venugopal s
ஆக 21, 2025 19:31

ஊழல் ஊழல் என்று புலம்பினால் மட்டும் போதாது, அதை நிரூபிக்க வேண்டும்! இதுவரை ஏதாவது ஒரு ஊழல் புகாரையாவது நிரூபித்து நடவடிக்கை எடுக்க முடிந்ததா உங்களால்?


vivek
ஆக 21, 2025 14:07

கேடு கெட்ட திமுக அரசு விவசாயிகளின் 1500 டன் அரிசியை குப்பைக்கு வீணாக்கிய திராவிட கயவர்கள்


Sadananthan Ck
ஆக 21, 2025 07:57

எப்பொழுதெல்லாம் பாஜக தேர்தலில் வெற்றி பெருகிறதோ அப்போதெல்லாம் தில்லுமுல்லு செய்த வெற்றி எப்போதெல்லாம் இண்டி கூட்டணி வெற்றி பெருகிறதோ அப்போதெல்லாம் சைலண்ட் மோடு


NAGARAJAN
ஆக 21, 2025 07:32

தேர்தல் முறைகேடு செய்த நல்லவர்கள் தானே இந்த பாஜகவினர். ‌ இது எவ்வளவு பெரிய ஊழல். . இவர்களெல்லாம் பேசவே தகுதியற்றவர்கள். .


sankar
ஆக 21, 2025 11:44

புகாரை நிரூபி - குறைந்தபட்சம் எழுத்துபூர்வமாக கொடு என்று சொன்னால் ஓட்டம் பிடிக்கும் கும்பலில் ஒருவர் இப்படி பேசுவதில் வியப்பு இல்லை


V RAMASWAMY
ஆக 21, 2025 07:26

ஊழல் அஸ்திவாரத்தில் பொய்புரட்டுகளுடன் கூடிய தூண்களமைத்து கட்சித்தலைமையின் பாதுகாப்புடன் கூடிய கூரைகளமைந்த கட்சிகள் செய்யும் அரசு எப்படியிருக்குமென்று யூகிக்கலாம்.


Saai Sundharamurthy AVK
ஆக 21, 2025 04:08

அண்ணாமலை சொல்வது சரியே !!! ஆட்சிக்கு வந்த இரண்டே வருடங்களில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்து மகனும், மருமகனும் சம்பாதித்திருக்கிறார்கள் என்று முன்னாள் நிதியமைச்சரே கூறியிருக்கிறார். பெரும்பாலான திமுக அமைச்சர்கள் ஊழலில் திளைத்தவர்கள் தான் என்று ஒவ்வொரு விஷயமும் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் போதே தெரிந்து விட்டதே....!!!! டாஸ்மாக் ஊழல், கனிமவள ஊழல் என்று பல வகையிலும் ஸ்டாலின், உதயநிதி கமிஷன் பெற்றிருக்கிறார்கள் என்பதும் உண்மை தானே ! ஆக, அண்ணாமலை சொல்வது முற்றிலும் சரியே !!!!! திமுகவுக்கு ஊழல் செய்வது தான் அவர்களின் அரசியலமைப்பு. ஸ்டாலினுக்கு


pakalavan
ஆக 21, 2025 03:01

ஜெயல்லிதா கட்சியோட கூட்டனி வச்சது நீதானே ? ஊழலஐ பற்ற பேச பிஜேபி காரனுங்களுக்கு என்னடா யோக்கியத இருக்கு ?


vadivelu
ஆக 21, 2025 06:30

கரெக்டு, அதனால்தான் இந்த சட்டம் எல்லோருக்கும் பொருந்தும். ஊழலைப்பற்றி அவிங்க பேச கூடாது, தமிழத்தின் இரண்டு திராவிட க கட்சிகள் மட்டுமே பேசலாம், ஏனென்றால் அவர்களுக்குத்தான் அதில் புகழ் அதிகம். திருடினால் தண்டனை என்பது திருடன் கூட ஒப்பு கொள்வான்.


pakalavan
ஆக 21, 2025 02:58

சிபுசோரன், மனீஸ் சிசோடியா , அரவிந்த் கெஜ்ரிவால், னு எல்லோரையும் சிறைபிடிச்ச பசகா ஒருவரையும் தன்டிக்கவில்லை, பொய் வழக்கு, அப்படிபாத்தா ஊதுவத்தி சுத்துன ஜெயல்லிதா கட்சிகூட நீ ஏன்டா கூட்டனி வச்ச ?


M Ramachandran
ஆக 21, 2025 02:04

இதில் என்ன சந்தேகம். 100% உண்மையெ. விஞ்சான ஊழல் செய்து வித்திட்ட நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்க பட்டு பெருமை பட்டுக்கொண்ட குடும்பம் தலை குடும்பம். தாய் 8 ஆடி குட்டி யோ 32 அடி பாய்ந்து அதன் குடி 64 ஆடி பாய்ந்து குடும்ப மொத்தமும் ஊழல் பணத்தில் திளைத்து கொண்டிருக்கு.


M Ramachandran
ஆக 21, 2025 01:58

ஊழல் செய்வதற்கென்ரே ஒரு கட்சி இருக்கு என்றால் அது தீ மு க்கா தான். செய்து வழி காட்டியவர் நமக்கு அப்பா என்று சொல்லி திரியும் அப்பாவின் அப்பா??? நீதி மன்றமெ ஊழல் நடந்திருப்பது உண்மை தான் சாட்சியங்கள் விஞ்சான முறையில் மறைக்க பட்டுள்ளன என்று தெளிவாக அதாவது நீதி மன்றத்தால் விஞ்சான முறை ஊழல் என்று சர்டிபிகேட் பெற்ற இந்திய அளவில் தீ மு காவின் முன்னாள் முதல் அமைச்சர் அப்பாவின் அப்பா தான்.


சமீபத்திய செய்தி