| ADDED : மே 24, 2025 11:39 PM
மணல் கொள்ளையை ஆய்வு செய்ய, கலெக்டர்களுக்கு 'சம்மன்' அனுப்பினால், மாநில அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு; கனிமவள கொள்ளையை ஆய்வு செய்யச் சென்றால், மாநில சுயாட்சியில் தலையீடு; டாஸ்மாக் முறைகேடுகளை ஆய்வு செய்ய அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றால், மனித உரிமை மீறல்; தேசிய கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டுமெனில், ஹிந்தி திணிப்பு என, வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் தி.மு.க., அரசு, ஒவ்வொரு விஷயத்துக்கும் மோசடியாக அரசியல் செய்தே, நான்கு ஆண்டுகளை கழித்து விட்டது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும், எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. குறைந்தது ஒரு துறையிலாவது, அமலாக்கத் துறை விசாரித்து நியாயம் பிறக்குமா என்று தமிழக மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளோடு இருந்த நிலையில், அதற்கும் உச்ச நீதிமன்றத்தால் தடை வந்துள்ளது. நீதிமன்றத்தில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளை தீர்ப்பு போல சித்தரித்து, கபட நாடகம் ஆடி, சுய விளம்பரம் தேடிக்கொள்கிறது, தி.மு.க., அரசு. - கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம்