உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது, தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். இபிஎஸ் தலைவர் (முதல்வர்) ஆவார்'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் மதுரையில் இன்று (அக் 12) தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2satsxgl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது, தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். இபிஎஸ் முதல்வர் ஆவார். பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் அதிகரித்து சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் உள்ளனர். தூய்மை பணியாளர்கள் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியதிற்கு தண்டிக்கப்பட்டு உள்ளனர். நீதிமன்றமே கேள்வி கேட்கும் ஒரே ஆட்சியாக தான் திமுக இருக்கிறது.கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். அது எப்படி நடந்தது அரசு மற்றும் போலீசாரின் குற்றம். காவல் துறையை தமிழக முதல்வர் ஸ்டாலின் கையில் வைத்து இருக்கிறார். ஆனால் தினம் தினம் படுகொலை. சாலை விபத்தில் உயிரிழந்தால் ரூ.2 லட்சம் கொடுக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெரிய வினோதம். சாராயம் குடித்து இறந்து போனால் ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுக்கிறார்கள்.இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது. இன்று முதல் நாட்கள் குறிக்கப்படுகிறது. திமுக அரசின் ஆட்சி காலத்தின் நாட்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆட்சியில் அலங்கோலம் மக்கள் மத்தியில் இருந்து வெகு விரைவில் தீர்க்கப்படும். விரைவில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். எங்களுடைய தலைவராக இபிஎஸ் வருவார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 13, 2025 03:34

முன்னைக்கு இப்போ நல்லா வெயிட் போட்டீரே கட்சிநிதியை கடத்தி நீங்களும் பங்களா கட்டி தோட்டம் வாங்கிட்டீரா?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 13, 2025 03:32

தேர்தல் நாளுக்கு கவுண்ட் டவுன் போட்டிருக்கார் அவ்வளவு தான். இந்த தடவை டிரெய்னில் எத்தனை கோடி கடத்தல் பணம் கொண்டு வர போகிறீர்கள்?


RAMESH KUMAR R V
அக் 12, 2025 21:47

அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலையே நைனாருக்கு நிகர் நைனாரே எல்லாம் தாமரை சொந்தங்களே


நிவேதா
அக் 12, 2025 20:50

நீங்கள் பிரச்சாரம் செய்தாலும் அண்ணாமலை போல கூட்டத்தை ஈர்க்கும் பேச்சு உங்களுக்கில்லை.


V K
அக் 12, 2025 18:48

வாய்ப்பு இல்லை ராஜா


RAMESH KUMAR R V
அக் 12, 2025 17:13

நல்லது நடக்கட்டும்


Vasan
அக் 12, 2025 14:24

Who will be the Chief Minister if in the unlikelyhood of winning of ADMKEPS+ADMKOPS+ADMKSasi+ADMKThina+ADMKSengot+BJPNaina+BJPAnna+ Vijay, alliance wins?


நிவேதா
அக் 12, 2025 20:48

இன்று செல்லூர் ராஜு பேசியதை நீங்கள் கேட்க வில்லை என நினைக்கிறேன். விஜய் ஒரு செல்லாக்காசு, எங்ககூட வந்தா கூட்டணியில் சேத்துக்குவோம், இல்லையென்றால் மிதிப்போம் என்று சொல்லியிருக்கிறார்.


திகழ் ஓவியன்
அக் 12, 2025 14:21

பாரத் மாதா கீ ஜே...ஆன்மீக ஆட்சி விரைவில் மலரட்டும்...சிறுபான்மை நண்பர்களே, இம்முறை, அதிமுகவுக்கு ஆதரவளிக்காவிட்டால் கூட பரவாயில்லை... விடியலுக்கு ஆதரவளிக்காதீர்...பிரிவினைவாதத்தை ஒருபோதும் அனுமதிக்காதீர்...


ஜெய்ஹிந்த்புரம்
அக் 13, 2025 03:29

உங்களுக்கு வோட்டு போடாத இந்துக்களை மானம் இல்லாத இந்துக்கள் என்று திட்டுவீர்களே, அந்த இந்துக்கள் வோட்டு வேண்டாமா?


chandran
நவ 01, 2025 18:21

திகழ் ஓவியன், ஆன்மீக ஆட்சி அமைந்தால் என்ன வித்யாசமாக நடக்கும்? மதுபான கடைகளை மூடி விடுவார்களா? மணல் கொள்ளையை நிறுத்தி விடுவார்களா? RTO & GOVT அலுவலகங்களில் ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்குமா? காவேரி, முல்லை பெரியார் பிரச்சினைகளை தீர்த்து விடுவார்களா? இப்போ இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள், அப்புறம் அவர்கள் கொள்ளை அடிப்பார்கள். எந்த ஆட்சி வந்தாலும் இந்த காட்சிகள் மாற போவது இல்லை. பொது மக்களுக்கு quarter, biriyani மட்டும் கண்டிப்பாக யார் வந்தாலும் கிடைக்கும். வேறு ஒன்றும் மாற போவது இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை