உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்; பீஹார் வாலிபர்கள் இருவர் கைது

திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்; பீஹார் வாலிபர்கள் இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்து இருந்த, பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் அன்வர், 30, ரவி ராஜா, 25, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் குப்பாண்டம்பாளையத்தில், நாட்டுத்துப்பாக்கிகள் விற்பனை நடந்து வருகிறது. வட மாநில வாலிபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக குற்ற நுண்ணறிவு தடுப்புப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், குப்பாண்டம்பாளையத்திற்கு சென்று நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்துள்ளது குறித்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=58951g68&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, விற்பனை செய்வதற்காக இரு நாட்டுத் துப்பாக்கியை, பீஹார் மாநில வாலிபர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இவர்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்தது. நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் அன்வர், 30, ரவி ராஜா, 25, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.இவர்கள் இதற்கு முன் யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்பனை செய்துள்ளனர் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
ஜூன் 30, 2025 21:51

கஞ்சா கேஸ் போல், நாட்டுத்துப்பாக்கிகளை அப்பாவி பீகார் வாலிபர்கள் இடம் வைத்துவிட்டு, அவர்களை கைது செய்ய வாய்ப்புள்ளது. திருபுவன, சாத்தான்குளம் புகழ் பெற்ற தமிழக போலீசை நம்பமுடியாது. உடனடியாக இந்த வாலிபர்களை பீகார் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக போலீஸ் விசாரிக்க அதிகாரம் கிடையாது.


venugopal s
ஜூன் 30, 2025 18:00

இந்த சாதாரண பீடாவாயன்களை உள்ளே விட்டதால் இத்தனை பிரச்சினைகள், இன்னும் அந்த பீடாவாயன் பாஜகவை தமிழகத்தில் வெற்றி பெற விட்டால் தமிழகமே ஒட்டு மொத்தமாக அழிந்து விடும்!


Padmasridharan
ஜூன் 30, 2025 16:50

தென் மாநிலம் அமைதியாக இருந்ததை கெடுக்க வட மாநில மக்கள் படை எடுக்க ஆரம்பித்து விட்டனர்.. மொழி, உடை, கலாச்சார பண்டிகைகள், கொலை, கொள்ளை பயங்கரவாதத்தை அதிகரிக்க. . இதில் வேண்டுமென்றால் one india one movement போலிருக்கிறது தற்பொழுது


Kasimani Baskaran
ஜூன் 30, 2025 16:36

அமைதிப்பூங்கா என்று உருட்டிய பாமரர்கள் வரிசையாக வரவும்..


montelukast sodium
ஜூன் 30, 2025 14:28

சங்கி


montelukast sodium
ஜூன் 30, 2025 14:27

இப்படி தான் பேசசொல்லும்


G Mahalingam
ஜூன் 30, 2025 13:35

அவர்கள் பங்களாதேஷ்களாக இருப்பார்கள்


Gnana Subramani
ஜூன் 30, 2025 13:24

பீகாரில் கள்ளத் துப்பாக்கி வியாபாரம் நன்றாக நடக்கிறது.


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 13:58

அமைதி ஆளு.


Tiruchanur
ஜூன் 30, 2025 13:04

புத்தி எங்க போகும்?


Ramesh Sargam
ஜூன் 30, 2025 12:54

பிடி பட்ட துப்பாக்கிகள் இப்பொழுது யார் வசம் உள்ளது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை