உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து தம்பதி பரிதாப பலி; அதிகாலை வேளையில் சம்பவம்

பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து தம்பதி பரிதாப பலி; அதிகாலை வேளையில் சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து அதிகாலையில் நடந்து உள்ளது. நள்ளிரவு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த சேர்வகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஆனந்தி. இவருக்கு 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதான தீக்ஷனா என்ற மகள் உள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இன்று அதிகாலை 3 மணிக்கு பைக்கில் சென்றுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3j5gl53q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டு தாராபுரத்தில் இருந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது சாலையின் மத்தியில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆனந்தி உயிரிழந்தனர். மகள் மட்டும் நீண்ட நேரமாக காயத்துடன் அலறி துடித்துள்ளார். இந்நிலையில் அந்த வழியாக சென்ற சிலர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சாலையில் பாலம் அமைக்கும் தனியார் நிறுவனம், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பா, அம்மாவை இழந்து சிறுமி அழுது துடித்த நிகழ்வு கண்கலங்க வைத்தது.இந்த சம்பவம் நள்ளிரவு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

நிவாரணம் அறிவிப்பு

தாராபுரம்-காங்கேயம் சாலை பகுதியில், பைக்கில் சென்ற போது பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி தீக்ஷனாவுக்கு ரூ.1 லட்சமும் முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

R.P.Anand
மே 05, 2025 11:07

கடவுளை இங்கே இழுக்காதே. பள்ளம் தோண்டி வைத்திருப்பான் அங்கெல்லாம் நீ வந்து காப்பாற்று என்று எவனாவது வேண்ட முடியுமா


Ganesh
மே 04, 2025 18:18

இது விபத்து இல்லை.. கொலை... இந்த மாதிரி பணி செய்யும் போது safety என்ஜினீயர் கண்டிப்பாக இருக்க வேண்டும்... இதே மத்திய கிழக்கு நாடுகள் என்றால் ப்ராஜெக்ட் மேனேஜர் கம்பிக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு இருப்பார்.


Karthik
மே 04, 2025 21:59

எதார்த்த உண்மையை மிகச் சரியாக சொன்னீர்கள் மிஸ்டர் கணேஷ்..


Murthy
மே 04, 2025 15:48

திராவிட மாடல் அரசில் மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது.....


nagendhiran
மே 04, 2025 15:09

நடந்தது எடப்பாடி ஆட்சியாக இருந்திருந்தால்? இன்னேரம்? சிலதுங்க என்னமா ஒப்பாரி வைத்திருக்கும்? பிண அரசியல் செய்ய? எதோ விடியல் ஆட்சி என்பதால் முதலாளி விசுவாசத்தில் எவனும் வாயை திறக்கவில்லை?


Susil Kumar Thiruneelakandan
மே 04, 2025 14:09

நாலு லட்சம் கூடுதல் உங்கள் கட்சியில் தற்கொலை செய்ய யாரவது ரெடியா ? , சின்ன பிஞ்சு வாழ்க்கைக்கு , படிப்புக்கு என்ன உத்திரவாதம். பாலம் கட்டும் கான்ட்ராக்டர்க்கு என்ன தண்டனை


Sivagiri
மே 04, 2025 14:00

பாதுகாப்பின்றி pallam தோண்டி போட்ட காண்ட்ராக்டர் - சூப்பர்வைசர் - கைது செய்யப்படவேண்டும் , பல்க் அமௌண்ட்டை இழப்பீடு - வாங்கி kodukka வேண்டியது .


mohanamurugan
மே 04, 2025 13:55

தம் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களை சனி பகவான் காப்பாற்றி இருக்கலாம்


Kumar Kumzi
மே 04, 2025 13:29

அரசே கள்ள சாராயம் குடிச்சிட்டு செத்தால் பத்து லட்சம் பாதுகாப்பிலாத பாதையில் விழுந்து இறந்தால் மூன்று லட்சமா . த்தூ


உண்மை கசக்கும்
மே 04, 2025 13:13

எத்தனை லட்சங்கள் கொடுத்து இந்த பள்ள காண்ட்ராக்ட் வாங்கினானோ.. படுபாவி பசங்க.


Ram
மே 04, 2025 13:02

நீதிமன்றம் இதுபோன்ற சேவைக்குறைபாடுகளை களைய அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றலாமே , இந்த அரசாங்கத்தில் நடக்கும் மக்கள் சுரண்டலை கண்டும்காணாமல் இருக்கும் நீதிமன்றம் , தேவையில்லாத நாட்டின் பாதுகாப்பு குறித்தான மத்திய அரசு இயற்றிய சட்டத்தில் மூக்கை நுழைப்பது ஏன் ? நீதிபதிகள் நாட்டை பின்னோக்கி நகர்த்துவதில் திறமைவாய்ந்தவர்களாக உள்ளனர்


முக்கிய வீடியோ