உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேம்: கோர்ட் தடை

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேம்: கோர்ட் தடை

மதுரை: தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதித்துள்ள ஐகோர்ட் மதுரை கிளை, புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐ.ஐ.டி., நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது.தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு கடவுளை வணங்கினால், வடகாசியில் உள்ள கடவுளை வணங்கிய புண்ணிம் கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க இத்தலத்தில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 7 ம் தேதி காலை 9 மணிக்கு மேல் காசி விஸ்வநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தன பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க இருந்தது.இந்நிலையில் தென்காசி நம்பிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏப்.7ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நிபுணர் குழு பரிந்துரைப்படி புனரமைப்பு பணி நடைபெறவில்லை. செயல் அலுவலர் தன்னிச்சையாக பணியை மேற்கொள்கிறார். கோவில் வளாகத்திலிருந்து அனுமதியின்றி தோண்டி அள்ளிய மணலை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இதிலிருந்து கிடைக்க வேண்டிய வருமானத்தை கோயில் கணக்கில் வரவு வைக்கவில்லை. மணல் அள்ளியதால் கோவில் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவை சரி செய்யவில்லை. வண்ணம் மட்டுமே பூசப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வேலை முழுமையடையவில்லை. சுவாமிகள் புறப்பாடு வாகனங்களை சீரமைக்கவில்லை. தேர் திருப்பணி துவங்கவில்லை. அன்னதானக்கூடம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.புனரமைப்பு பணி முழுமையடையும்வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணியை ஆய்வு செய்ய வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு,'புனரமைப்பு பணி 100 சதவீதம் முடிந்து விட்டது,' என தெரிவித்தது.இந்த வழக்கை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து இருந்தனர். இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ' தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐ.ஐ.டி.,நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Puthirankondan Karuppiah
ஏப் 04, 2025 15:32

இந்த திருடர் நலத்துறை மக்கள் கவனத்திற்கு வெளிப்படையாக தெரியும்படி தகவல் பலகைகள் மூலம் ஒவ்வொரு நாளும் அனைத்து கோவிலகளிலும் தெரிவிக்க வேண்டும்.


ராமகிருஷ்ணன்
ஏப் 03, 2025 19:28

திமுக ஆட்சிக்கு வந்தால் மிக அதிக அளவில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெறும், அத்தனை திட்டங்கள் மூலம் 80 சதவீத பணம் கட்சியினர் சுருட்டுவதற்கு வசதியான திட்டங்களே தீட்டப்படும். எந்த வித நிரந்தர நல்ல திட்டங்களை திமுக செயல்படுத்தியதே இல்லை. திமுகவின் ஆட்சியில் நடந்த நல்ல நிரந்தர ஒரு திட்டத்தை கூறுங்கள் பார்ப்போம்.


sankaranarayanan
ஏப் 03, 2025 18:57

இது திராவிட மாடல் அரசு நடத்தும் குடமுழுக்கு அல்ல இது மக்களுடைய பண முழுக்கு.


Nagarajan S
ஏப் 03, 2025 18:35

வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐ.ஐ.டி., நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு புனரமைப்பு பணிகளை நன்கு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவேண்டும். குடமுழுக்கு பணிகள் முழுவதும் நடந்திருந்த்தால் மட்டுமே குடமுழுக்கு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். புணரமைப்பு குழுவை அறநிலைய துறை அதிகாரிகள் நெருங்காமல் பாதுகாக்கவேண்டும்.


venugopal s
ஏப் 03, 2025 17:46

நமக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்தால் நீதிமன்ற நீதிபதிகளை நீதியரசர்கள் என்று பாராட்டுவோம், நமக்கு ஆதரவாக தீர்ப்பு இல்லை என்றால் வாய்க்கு வந்த படி ஏசுவோம்,அவ்வளவு தான்!


Barakat Ali
ஏப் 03, 2025 20:55

என்ன இருந்தாலும் பிரியாணி, சரக்கு குடுக்குற கம்பெனியை, கம்பெனி அடிமைகளை இப்படி குறை சொல்லக்கூடாது .....


G Mahalingam
ஏப் 03, 2025 17:40

குடமுழுக்கு திமுகவின் பொய் பித்தலாட்டம். திமுக ஆட்சியில் தான் அதிகம் குடமுழுக்கு நடைபெறுகிறது என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மை. அந்த குடமுழுக்கு உபயதாரர் மூலம் செய்து விட்டு அறநிலையத்துறை கணக்கில் எழுதி விடுவார்கள். வெள்ளை அடிப்பது மற்ற வேலைகளை திமுகவினருக்கு கொடுத்து விடுவார்கள்.


M Ramachandran
ஏப் 03, 2025 16:46

இது தான் ஹிந்து விரோத விடியல் அரசு ஹிந்து மக்களுக்கு தன்னால் முடிந்த தண்டனை தேர் தெடுத்த ஹிந்து மக்களுக்கு கொடுக்கிறது.


மாரன்
ஏப் 03, 2025 16:35

நீதி அரசன் க இப்ப ........?


Raja
ஏப் 03, 2025 16:27

நானே நேரடியாக பார்த்தேன் பாதிக்கும் மேற்பட்ட வேலைகள் முடிக்காமல் உள்ளது இது பற்றி சில அரசியல் கட்சிகள் (கிருஷ்ணசாமி) கேள்வி எழுப்பினார் பிறகு கப்சிப்


Kasimani Baskaran
ஏப் 03, 2025 16:26

கோவில் கிடைத்தாலோ அல்லது கடவுள் கிடைத்தாலோ திராவிடன் கெட்டியாக பிடித்துக்கொண்டு முடிந்தமட்டும் அபகரித்து விடுவான்... அடுத்த பக்கம் போய் கடவுள் இல்லை என்று கோசம் போட தயங்கவே மாட்டான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை