உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்

தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.நடிகர் ரஜினி மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யாவை, 2004ல் நடிகர் தனுஷ் காதலித்து மணந்தார். இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிவதாக, 2022ல் அறிவித்தனர். இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரலில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் நேரில் ஆஜராக, மூன்று முறை உத்தரவிட்டும், தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராகாததால், சேர்ந்து வாழப்போவதாக தகவல் பரவியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5douaxbu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 21ம் தேதி வழக்கு நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி, தனித்தனியாக விசாரணை நடத்தினார். பின், 'இந்த விவகாரத்தில் சுயமாக சிந்தித்து, ஒரு முடிவை எடுக்கும் வகையில், உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. 'இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா' என்று, நீதிபதி கேட்டார்.அதற்கு இருவருமே, 'எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்' என்று தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் வரும் 27ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, அறிவித்தார்.இதனையடுத்த, ஒருமித்த கருத்து அடிப்படையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ஆரூர் ரங்
நவ 28, 2024 11:19

இவர்களது சொந்த விருப்பப்படி பிரிந்துள்ளனர். நிம்மதியா வாழட்டும். ஆனால் திரைத்துறையில் வேறு பலர் நண்பர்களாகவே பிரிந்து விவாகரத்து வாங்கிய பின்னரும் லிவிங்டுகெதர் வாழ்க்கை நடத்துகின்றனர். ஜீவனாம்சத்துக்கு முழு வரிவிலக்கும் வாங்கி விடலாம். என்ஜாய்.


Samy kayu Samy kayu
நவ 28, 2024 07:48

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்


சந்திரசேகரன்
நவ 28, 2024 07:22

எல்லாம் வரி ஏய்ப்புக்கான நாடகம்


Siva
நவ 28, 2024 06:42

lost its morality


Sck
நவ 28, 2024 05:33

ஏனோ தெரியவில்லை தமிழ் ஊடகங்களில் கூத்தாடிகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை பற்றியே நிறைய கவரேஜ் கொடுக்கிறார்கள். அதனால் டாஸ்மாக் நாட்டு டுமிலர்களும் கூத்தாடிகளை பற்றிய செய்திகளை தவிர்த்து வேறு எதுவும் தெரிவதில்லை.


அப்பாவி
நவ 28, 2024 05:00

கூத்தாடி கேசுங்கக்ளாம் சீக்கிரம் பைசலாகுது. ஃபீஸ் நிறைய குடுப்பாங்களோ


பாலகிருஷ்ணன்
நவ 28, 2024 00:11

நல்லதே நடக்கும். பிள்ளைகள் யாத்ரா, லிங்கா, பெற்றோர்கள் ஐஷு, தனுஷ், பாட்டி, தாத்தா எல்லோரும் நல்லதே நினைத்து நல்லதே செய்ய பிரார்த்தனை செய்வோம். சந்தோஷமா இருந்த காலத்தை நினைத்து சோகம் அடையாமல் நல்லதே நடக்கும் எதிர்காலத்தில் என்ற நம்பிக்கை வேணும். ராதே கிருஷ்ணா. God bless.


A.S. Jayaraman
நவ 27, 2024 23:21

Good for both


Rock
நவ 27, 2024 22:05

Nasamaa....


Rpalnivelu
நவ 27, 2024 21:52

இப்பெல்லாம் அரன்ஜீடு கல்யாணமானாலும் சரி லவ் மாரேஜ் ஆனாலும் சரி சிறிய பிரச்னைக்கே கோர்ட் வாசல் ஏறிடுறாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை