உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை எண்ணுாரில், அனல் மின் நிலையம் விரிவாக்கத்துக்காக, தனியார் நிறுவனத்துக்கு, 'டெண்டர்' ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுவுக்கு, அரசு மற்றும் மின் வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.எண்ணுாரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தில், 660 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள கூடுதல் அலகு அமைப்பதற்காக, 2019ல் தமிழக மின் வாரியம் டெண்டர் கோரியது.

குறைவான தொகை

இதில் பங்கேற்ற மத்திய அரசின், 'பெல்' நிறுவனம், 4,957 கோடி ரூபாய்க்கும், 'பி.ஜி.ஆர். எனர்ஜி சிஸ்டம்ஸ்' என்ற தனியார் நிறுவனம், 4,442 கோடி ரூபாய்க்கும் டெண்டர் கோரின. குறைவான தொகையை குறிப்பிட்ட பி.ஜி.ஆர்., நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது.உத்தரவாத தொகையை பி.ஜி.ஆர்., நிறுவனம் செலுத்தாததால், டெண்டர் ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்து, 2021 ஏப்ரலில் மின் வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பி.ஜி.ஆர்., நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 'மீண்டும் டெண்டர் கோரக்கூடாது; தற்போதைய நிலை தொடர வேண்டும்' என, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் பி.ஜி.ஆர்., நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கி, 2022 மார்ச்சில் மின் வாரியம் உத்தரவிட்டது. இதில், முறைகேடு நடந்துள்ளதாகவும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், திருச்சி, ராணிப்பேட்டை, திருமயத்தைச் சேர்ந்த பெல் நிறுவன தொழிற்சங்கங்கள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஏற்புடையது அல்ல

வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ் ஆஜரானார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''பல திட்டங்களை, பி.ஜி.ஆர்., நிறுவனம் செயல்படுத்தி உள்ளது. சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல,'' என்றார். மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசு, மின் வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஏப்ரல் 10க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M Ramachandran
பிப் 23, 2024 19:16

ஓஹோ தொழிற்சங்கங்கள் நுழைந்துள்ளதால் நீதி மன்றம் முனைப்பு காட்டியுள்ளது. இதில் விடியலின் நிலையய் காட்டும் ஐயப்பாடு நன்றாகா வெளியில் தெரிகிறது


M Ramachandran
பிப் 23, 2024 19:12

ஹீ ஹீ இது எங்கள் விடியலின் வழி முறைகள் தான் எஜமான்


duruvasar
பிப் 23, 2024 15:28

இந்த செயல் படுத்திய " பல திட்டங்கள்" பற்றி தான் சந்தேகம் ஐயா. இவர்கள் பயங்கரமான திட்ட வகுப்பாளர்கள் என்பது உலகுக்கே க தெரிந்த விஷயம் தான்


ஆரூர் ரங்
பிப் 23, 2024 12:30

கேள்விப்பட்ட வரையில். ????இதே பி.ஜி.ஆர். நிறுவனம் முந்தைய தி.மு.க. ஆட்சியில், மேட்டூர் அனல் மின் நிலைய பணிகளை எடுத்தது. 2008 - 11 காலக்கட்டத்துக்குள் முடிக்க வேண்டிய இப்பணியை 2 வருடம் தாமதமாக 2013-ல்தான் முடித்துக் கொடுத்தது. இற்காக அரசுக்கு கட்ட வேண்டிய அபராதத்தை கட்டவில்லை. அரசும் அபராதம் விதிக்கவில்லை. மேலும், 2019-ல் கிடைத்த ஆர்டருக்கு 2021 வரை 10 சதவிகிதம் பிணைத் தொகையை கட்டமுடியாமல் இருந்தது. இதனால், அந்த டெண்டரை மின்சார வாரியம் ரத்து செய்தது. மேட்டூரில் சரியான நேரத்தில் பணியை முடிக்கவில்லை என்று கூறி வெளியேற்றப்பட்ட நிறுவனத்துக்கு மீண்டும் ஒப்பந்தமா????? ஆக... ஆற்காட்டார் வெளுத்துக்கட்டுறார்.


karunamoorthi Karuna
பிப் 23, 2024 08:26

பல திட்டங்களை பிஜிஆர் நிறுவனம் செய்து உள்ளது அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்க்க கூட அரசு சொல்லி இருக்கிறது ஆனால் அந்த நிறுவனம் தான் உலகிலேயே சிறந்த நிறுவனம் பெல் நிறுவனத்தை விட தகுதி நிறைய உள்ளது


Ramesh
பிப் 23, 2024 08:17

சுடாலின் ம்ம்ம்ம்மாட்டிக்கிட்டார் ம்ம்ம்ம்மாட்டிக்கிட்டார்


Godfather_Senior
பிப் 23, 2024 07:53

திமுக - காங்கிரஸ் என்றாலே, கட் + கமிஷன் என்பதை உலகமே அறியும் தில்லுமுல்லு மொள்ளமாரி கழகம்


Dharmavaan
பிப் 23, 2024 07:33

அண்ணாமலை ஏற்கனவே சொன்ன ப்ளாக் லிஸ்ட்டட் கம்பெனி


ராஜா
பிப் 23, 2024 05:30

மின்சார வாரியத்தால் திவால் ஆன ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் எதன் அடிப்படையில் மறுபடியும் 2022 இல் கொடுக்கப்பட்டது? சென்னை - ஹைதராபாத் சாலையில் அரை ஏக்கர் அளவில் கூட இல்லாத ஒரு நிறுவனத்தை தமிழக அரசு ஏன் பிடித்து தொங்குகிறது?


Kasimani Baskaran
பிப் 23, 2024 05:28

இதை விசாரித்து முடிப்பதற்குள் விடிந்து விடும். அப்பட்டமான விதிமீறல் என்பதால் நேரடியாகவே மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக்கமிசன் அமைக்கலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை