உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை : கிங்டம் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் 'கிங்டம்'. இந்த படத்தில் இலங்கை தமிழர்களை பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தியேட்டர் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை, உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (ஆக.,6) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிமன்றம், ‛‛தணிக்கை குழு சான்றிதழ் கொடுத்த பின்னர், தியேட்டரில் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது. ஜனநாயக நாட்டில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது. அதேசமயம் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினால் உரிய அனுமதி பெற்று செய்ய வேண்டும். அதுவும் ஜனநாயக ரீதியாக இருக்க வேண்டும்'' என தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது. ஆகவே கிங்டம் படம் திரையிட்டுள்ள தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Easwar Kamal
ஆக 07, 2025 19:56

ஏற்கனவே படம் பார்க்க ஆள் இல்லை. நாளைக்கு இந்த படத்தை பார்க்கணும்னா ஆந்திராவுக்கு அல்லது தெலுங்கானாவுக்குத்தன போகணும். எதுக்கு இந்த வீனா போன வெட்டி வேலை. அதன் தமிழக அரசோ திரை அரங்கு உரிமையாளர்களோ கண்டுக்கலை . சீமானே ஆள் இல்லாத இடத்துல போய் டி ஆட்டோம்னு வேற வேலை பார்க்க போயாச்சு. போய் வேற வேலை இருந்த பாருங்க


VSMani
ஆக 07, 2025 18:14

தமிழர்களை பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெற்றிருக்கும் படத்தை தமிழர்கள் யாருமே பார்க்கக்கூடாது.


Ganapathy Subramanian
ஆக 07, 2025 17:07

மாநிலத்துக்கு மாநிலம் தீர்ப்புகள் மாறுகின்றன அல்லது வழக்கு போடுபவர்களுக்கு தகுந்தவாறு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. உச்ச நீதிமன்றமே இப்படித்தான் நடக்கிறதோ என்ற சந்தேகமும் எல்லோருக்கும் உள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாய் கட்டு கட்டாய் நோட்டுகள் கிடைக்கின்றன. ஒருவேளை ஒவ்வொரு மாநிலமும் பாடத்திட்டம் தனித்தனியாய் வைத்திருப்பதுபோல் சட்டங்களை நீதிபதிகள் புரிந்துகொள்ளவேண்டிய விதத்தையும் தனித்தனியாய் வைத்து இருக்கின்றனவோ என்னவோ? அந்த நீதி தேவனுக்குத்தான் வெளிச்சம்.


மணி
ஆக 07, 2025 16:46

ஒரு காலத்தில் M.G. உபடத்துக்கு தொண்டர்கள் தான் கவல் (உ.சு. வா) படத்துக்கு


Sivasankaran Kannan
ஆக 07, 2025 16:43

சீமானை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்..


suresh guptha
ஆக 07, 2025 16:11

‛தணிக்கை குழு சான்றிதழ் கொடுத்த பின்னர், தியேட்டரில் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது. ஜனநாயக நாட்டில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது. THEN HOW IT DIFFERED IN KARNATAKA HIGH COURT,IS LAW VARIES FROM STATE TO STATE THIS SHOW TAMALIANS ARE..........


முக்கிய வீடியோ