உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரை அழைக்க எதிர்ப்பு சி.பி.ஆர்., பாராட்டு விழா ரத்து

முதல்வரை அழைக்க எதிர்ப்பு சி.பி.ஆர்., பாராட்டு விழா ரத்து

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சென்னையில் நடக்க இருந்த பாராட்டு விழாவுக்கு, முதல்வர் ஸ்டாலினை அழைக்க பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவ்விழா ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

பாராட்டு விழா

துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன், நான்கு நாள் பயணமாக நாளை மறுதினம் தமிழகம் வருகிறார்.சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது. அது திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கான காரணம் குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, சென்னை மக்கள் அமைப்பு சார்பில், வரும் 27ம் தேதி பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நடிகர் ரஜினியை அழைக்க முடிவு செய்தனர். முதல்வர் ஸ்டாலினை அழைத்தால், பழனிசாமி வரமாட்டார். எனவே, ஸ்டாலினை அழைக்க வேண்டாம் என, பா.ஜ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விழா ரத்து

'சி.பி.ராதாகிருஷ்ணன் அரசியல்வாதி அல்ல; அவர் துணை ஜனாதிபதி. எனவே, முதல்வர் ஸ்டாலினை அழைப்பதில் தவறிவில்லை' என, விழா ஏற்பாட்டாளர்கள் வாதிட்டனர். ஆனால், முதல்வரை அழைக்கக்கூடாது என்ற எதிர்ப்பு வலுத்துள்ளதால், அவ்விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும், 28ம் தேதி கோவை செல்லும் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்.மேலும், பேரூர் மடத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். 29ம் தேதி திருப்பூர் சென்று, தன் தாயை சந்தித்து ஆசி பெற உள்ளார். அங்கும் அவருக்கு பாராட்டு விழா நடக்கிறது.வரும் 30ம் தேதி மதுரை செல்லும் அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவ்வாறு தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

தமிழன்
அக் 25, 2025 11:52

ஸ்டாலினை அழைக்காமல் பாராட்டு விழா நடத்தி இருக்கலாம். ஒருவேளை ஸ்டாலினை அழைத்தால் அவர் எடப்பாடி யார் வருகிறார் அல்லது அண்ணாமலை வருகிறார் என்று காரணத்தைக் காட்டி வராமல் இருக்க வாய்ப்புண்டு. தீபாவளி விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லாத ஒரு முதலமைச்சரை என்ன கருணாநிதிக்கு அழைக்கணும்


ஆரூர் ரங்
அக் 25, 2025 11:45

தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார் குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ(டு)இணங்கி யிருப்பதுவுந் தீது.- மூதுரை.


கூத்தாடி வாக்கியம்
அக் 25, 2025 10:50

கலாம் என்றால் கலகம் என்று சொன்ன திராவிட மாடல் எதற்கு அழைக்க வேண்டும்


Padmanaban Arumugam
அக் 25, 2025 09:57

எந்த கட்சி பேதம் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் சந்திக்கிறார்கள். உங்களுக்கும் என்ன அரசியல். அரசியல் பண்ணும் இடத்தில் பண்ணலாமே


பாமரன்
அக் 25, 2025 09:41

இவருக்கு ஓட்டு போடாததால் இவர் தமிழ் நாட்டு பக்கமே வரப்பிடாது...அநேகமாக போட்டிக்கு வந்து ரெண்டு ரூபாய்க்கு பங்கம் செஞ்சிடுவேனான்னு திட்டுவாய்ங்க.


எஸ் எஸ்
அக் 25, 2025 09:40

ராதாகிருஷ்ணனுக்கு எதிராக ஓட்டு போட்டவர்களை அழைப்பது சரியல்ல


kannan
அக் 25, 2025 09:35

திமுக வை எந்த நிகழ்ச்சிக்கும் பாஜக அழைக்க கூடாது என்பதே தேச பக்தர்களின் வேண்டுகோள்


V Venkatachalam, Chennai-87
அக் 25, 2025 09:31

முதல்வர் சீட்டில் யார் உட்கார்ந்து இருந்தாலும் அழைப்பது மரபு. அழைக்க வேண்டும் என்பது மரபு.


தத்வமசி
அக் 25, 2025 09:26

தமிழனுக்கு ஆதரவு தெரிவிக்காத கட்சியின் தலைவர் கலந்து கொள்வது அந்த விழாவிற்கே அவமானம். சிபிஆருக்கு திமுகவின் ஓட்டு கிடைக்காத போது முதல்வர் என்கிற பெயரில் எப்படி கலந்து கொள்ளலாம். முதல்வராக தமிழனுக்கு ஆதரவு தெரிவிக்காத ஒருவர் எதற்கு இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும். உலக நாயகன் டா.ஏபிஜே அய்யாவுக்கும் ஆதரவு தரவில்லை இப்போது சிபிஆருக்கு ஆதரவு தரவில்லை. இந்த விழாவினை இவர்களை வைத்து நடத்துவதை விட நடத்தாமல் இருப்பதே சிபிஆருக்கு செய்யும் மரியாதை. அதை விட விழாவே வேண்டாம். அந்த விழாவினால் சிபிஆருக்கு எந்த பயனும் இல்லை. இதனை பிஜேபியினர் நிராகரித்தது சரியே.


VENKATASUBRAMANIAN
அக் 25, 2025 08:28

தமிழின விரோதி திமுக. எதற்காக அவர்களை அழைக்க வேண்டும். அரசு விழா இல்லை


சமீபத்திய செய்தி