உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் கடத்தலில் பிடிபட்டால் இனி கிரிமினல் வழக்கு

மணல் கடத்தலில் பிடிபட்டால் இனி கிரிமினல் வழக்கு

சென்னை: கனிமங்கள் கடத்தலில் பிடிபட்ட, 3,741 வாகனங்கள் தொடர்பாக, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய, கனிம வளத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கருங்கல் ஜல்லி எடுக்க, தனியார் நிலங்களில் குவாரிகள் உள்ளன. இதில் உரிமம் பெறும் ஒப்பந்ததாரர்கள், அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதாக புகார் கூறப்படுகிறது. ஆற்று, சவுடு, கிராவல் மண் ஆகிறவற்றை, அளவுக்கு அதிகமாக எடுத்து செல்வது, முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து செல்வது தொடர்கிறது. ஆற்று மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் பாயும் என, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கருங்கல் ஜல்லி, மணல் போன்ற கனிமங்கள் கடத்தலில் ஈடுபடுவோர் பிடிபடுகின்றனர். மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய மண்டலங்களில், நடப்பு ஆண்டில், பிப்., இறுதி வரை, 3,741 லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பிடிபட்டன. பல இடங்களில் கூடுதல் பாரம் என, சாதாரண வழக்குகளே பதிவாகி உள்ளன. இதில் நடந்த கனிமவள கடத்தல் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிய முடிவு செய்யப்பட்டுள்ளது. கனிமவள கடத்தலை தடுக்க, இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

K.Ravi Chandran, Pudukkottai
ஆக 14, 2025 18:25

இதில் அதிகாரி சொல்ல என்ன இருக்கு? மணல் கடத்தலுக்கு கிரிமினல் வழக்கு போட வேண்டும் என்று தமிழக அரசுதானே இதற்கு சட்டம் இயற்ற வேண்டும்?


V Venkatachalam
ஆக 14, 2025 10:06

பிடிபட்டால்தானே. பிடிக்கிறத நல்லா பாத்துக்குவோமே. பிடிக்கிறவன் இருந்தால் தானே பிடித்தேன் ன்னு சொல்லமுடியும்? சட்டம், ரூல்ஸ் இதுக்குள்ள எத்தனை ஆயிரம் ஓட்டைகள் இருக்குன்னு சட்ட வல்லுநர்களுக்கே தெரியாதே..


V RAMASWAMY
ஆக 14, 2025 09:20

ஆனால் பிடிபடவும் மாட்டார்கள், பிடிக்கவும் மாட்டார்கள் பெரிய புள்ளிகளின் பாதுகாப்பு இருக்கும்வரை.


Palanisamy T
ஆக 14, 2025 11:20

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதுவொரு நாடகமாக கூடயிருக்கலாம். தமிழக அரசு வெளிப்படையான நல்ல அரசாக இயங்கவேண்டும். அப்போது தான் யாரென்ற உண்மைகள் வெளியே தெரியவரும்.


G Mahalingam
ஆக 14, 2025 09:02

பேச்சு பெரிய பேச்சு ஆனால் உள்ளே போய் பார்த்தால் திமுகவினர், பிறகு கப்சிப்.


D Natarajan
ஆக 14, 2025 08:00

கிரிமினல் வழக்கா அப்படின்னா. எந்த வழக்கானாலும் தண்டனை கிடைக்குமா திராவிட மாடெல்லில் இதெல்லாம் சகஜமப்பா


தியாகு
ஆக 14, 2025 07:11

மணல் கடத்தலில் பிடிபட்டால் இனி கிரிமினல் வழக்கு. ஹி...ஹி...ஹி... அப்படின்னா தொண்ணூற்று ஒன்பது சதவீத கட்டுமர திருட்டு திமுகவினர் மேல் கிரிமினல் வழக்கு வருமே. அவ்வளவு இடங்கள் ஜெயிலில் இருக்கிறதா? ஹி...ஹி...ஹி...


ديفيد رافائيل
ஆக 14, 2025 06:59

இது ஆளுங்கட்சி ஒப்பந்ததாரர்களுக்கு பொருந்துமா? முக்கால்வாசி மணல் கடத்தலில் ஈடுபடுறது இவனுங்க தானே.


Mani . V
ஆக 14, 2025 06:32

நாலரை வருடம் கொள்ளைக் கூட்டத் தலைமையின் அனுமதியுடன் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் பொழுது ஒன்றும் துப்பில்லை. இனிமேல்தான் அறுத்துத் தள்ளப் போகிறார்கள். தேர்தல் நேரத்தில் மக்களின் மனங்களில் நிற்கும் என்று கருதி போடும் நாடகம்தான் இது.


சமீபத்திய செய்தி