அ.தி.மு.க.,வை விமர்சித்தால் வாழ்க்கை தேய்பிறையாகும்
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நினைப்பில், ஆளாளுக்கு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழக அரசு எவ்வளவு மோசமான நிர்வாகத்தை தந்து கொண்டிருக்கிறது என்பதற்கு, திருப்பூர் மாநகரத்தை உதாரணமாக காட்டலாம். திருப்பூரில் குப்பை பிரச்னை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் இருந்து கொரோனா தொற்று எப்படி நம் நாட்டுக்குள் புகுந்ததோ, அதே மாதிரி திருப்பூர் குப்பை பிரச்னையும் ஆகப் போகிறது. திருப்பூரில் மலை மலையாக குவிந்து கிடக்கும் குப்பையால், மிகப் பெரிய தொற்று அபாயம் ஏற்பட்டு, நோய் பரவப்போகிறது. தமிழக அரசு, இவ்விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது, மக்களை நோயால் வாட்டி வதைக்கப் போகிறது. அ.தி.மு.க.,வை யாரெல்லாம் விமர்சிக்கின்றனரோ, அவர்கள் வாழ்க்கை தேய்பிறையாகும். - ஜெயராமன், தேர்தல் பிரிவு செயலர், அ.தி.மு.க.,