உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயிர் காப்பீடு வசதி; கூட்டுறவு சங்கங்கள் இன்று இயங்கும்

பயிர் காப்பீடு வசதி; கூட்டுறவு சங்கங்கள் இன்று இயங்கும்

சென்னை : நடப்பு, 2023 - 24ம் ஆண்டிற்கான சிறப்பு மற்றும் ரபி பயிர்களுக்கு, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளை சேர்க்க, கடந்த 15ம் தேதி கடைசி நாளாக இருந்தது. அதற்காக, விவசாயிகள் விபரங்களை பதிவேற்றம் செய்யும் போது, இணையதளத்தில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால், காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள், 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளின் விபரத்தை பதிவேற்றம் செய்ய வசதியாக, விடுமுறை நாளான இன்று, அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களால் நடத்தப்படும் பொது சேவை மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை