உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடீஸ்வர குடும்பங்கள் - சசிகலா, தினகரனை சாடிய திண்டுக்கல் சீனிவாசன்

கோடீஸ்வர குடும்பங்கள் - சசிகலா, தினகரனை சாடிய திண்டுக்கல் சீனிவாசன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம்: '' சசிகலா, தினகரன் ஜெயலலிதாவிற்கு உதவியாக வந்தவர்கள். அவர்களின் ஆயிரம் குடும்பம் கோடீஸ்வரர்களாகி கொண்டு ஆட்சியை பிடிப்போம் என்கின்றனர்,'' என அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:தேனியில் தோல்வியடைந்த தினகரன் அ.தி.மு.க.,வை பழனிச்சாமி அழித்து விடுவார் என்று உலக மகா ஜோசியர் போல் பேசி வருகிறார். சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு உதவியாக வந்தவர்கள் தான்.ஜெயலலிதா எதார்த்தமானவர். பிறக்கும்போது வெள்ளி கிண்ணத்தில் பால் குடித்தவர். அவருக்கு நல்லது எது கெட்டது எது என்று தெரியாது. அப்படி இருந்த குடும்பத்தில், சசிகலாவிற்கு உதவியாக இருந்தவர் தினகரன். அவர்களின் ஆயிரம் குடும்பம் கோடீஸ்வரர் ஆகிக் கொண்டு ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார்கள். எந்த ஆட்சியைப் பிடிக்க முடியும்?இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.முன்னதாக நேற்று முன்தினம் திருச்சியில் நடந்த கூட்டத்தில்,'' அ.தி.மு.க., உடன் கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்டு பேரம் பேசுகின்றனர்,'' எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Saleem
நவ 22, 2024 06:30

எல்லாம் சரி உங்கள் அமைச்சர்கள் எத்தனை கோடிகள் சேர்த்தார்கள் என்று பட்டியல் கொடுத்தல் நன்றாக இருக்கும்


Vigilraj
நவ 21, 2024 23:58

எப்படி , உங்க அம்மாவா–லா


Anantharaman Srinivasan
நவ 21, 2024 22:29

சசிகலா தினகரன். அவர்களின் குடும்பம் கோடீஸ்வரர்கள். திண்டுக்கலும் எடப்பாடியும் அடுத்த வேளை சோத்துக்கு லாட்டிரியடிக்கும் ஏழைப்பங்காளர்கள்.


google
நவ 21, 2024 22:11

தேங்காய் சீனிவாசன்


Ramesh Sargam
நவ 21, 2024 20:40

இப்படி ரூ.100 கோடி கேட்டு பேரம் பேசுபவர்களை, குறிப்பாக அரசியல்வாதிகளை வருமானவரித்துறையினர் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். எங்கிருந்து, எப்படி அவர்கள் இவ்வளவு அதிகம் ஈட்டுகிறார்கள் என்று கண்காணிக்கவேண்டும். முறையற்ற விதத்தில் என்றால், உடனே கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்.


சமீபத்திய செய்தி